டிகே சிவக்குமார் போட்ட போடு.. பெங்களூரை விட்டு போகமாட்டோம் என அறிவித்த நிறுவனம்.. பின்னணி
பெங்களூர்: பெங்களூரில் சாலைகள் சரியில்லை. பள்ளமாக இருப்பதால் ஊழியர்கள் கஷ்டப்படுகின்றனர். இதனால் ‛பிளாக்பக்' எனும் லாஜிஸ்டிக் நிறுவனத்தின் சிஇஓ ராஜேஷ் யாபாஜி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டார். இது பெரும் சர்ச்சையானது. துணை முதல்வரும், பெங்களூர் நகர வளர்ச்சி துறை அமைச்சருமான டிகே சிவக்குமார், யாரும் அரசை மிரட்ட முடியாது என்று கூறியிருந்தார். இந்நிலையில் தான் அந்த நிறுவனத்தின் சிஇஓ ராஜேஷ் யாபாஜி விளக்கம் அளித்துள்ளார். பெங்களூரை விட்டு வெளியேறப்போவது இல்லை என்று அவர் கூறியுள்ளார்.
பெங்களூரில் பல்வேறு சாலைகளில் பள்ளங்கள் உள்ளன. இதனால் அடிக்கடி பெங்களூர் மாநகராட்சி மற்றும் கர்நாடகா அரசு விமர்சனத்துக்கு உள்ளாக்கி வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் சாலை பள்ளங்களை சரிசெய்ய பலநூறு கோடிகள் செலவிடப்பட்டாலும் கூட இந்த பிரச்சனை மட்டும் முடிவுக்கு வரவில்லை.

இதற்கிடையே தான் பெங்களூர் பெல்லந்தூர் அவுட்டர் ரிங் ரோட்டில் பிளாக்பக் (Blockbuck) எனும் லாஜிஸ்டிக் நிறுவனத்தின் இணை நிறுவனரும், சிஇஓவாக இருப்பவருமான ராஜேஷ் யாபாஜி தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார்.
வெளியேறுவதாக அறிவித்த நிறுவனம்
அதில், ‛‛ஓஆர்ஆர்-யில் (பெல்லந்தூர்) எங்களின் அலுவலகம் + வீடு கடந்த 9 ஆண்டுகளாக உள்ளது. இங்கு இப்போது தொடர்ந்து இருப்பது மிகமிக சிரமானதாக இருக்கிறது. இதனால் இங்கிருந்து வேறு இடத்துக்கு நகர இருக்கிறோம். இதற்கு முக்கிய காரணங்கள் உள்ளன.
எனது ஊழியர்களின் சராசரி பயண நேரம் 1.5 (அலுவலகம் வருவதற்கு மட்டும்) மணிநேரத்துக்கும் அதிகமாக அதிகரித்துள்ளது. பள்ளம் மற்றும் தூசி நிறைந்த சாலைகள் உள்ளன. அடுத்த 5 ஆண்டுகளில் எந்த மாற்றத்தையும் பார்க்கப்போவது இல்லை'' என்றார்.
டிகே சிவக்குமாருக்கு பிரஷர்
அதாவது பெங்களூரில் நகரில் உள்ள சாலை பள்ளங்கள் உள்ளது. இதனால் அலுவலகத்தை பெல்லந்தூர் அவுட்டர் ரிங் ரோட்டில் இருந்து மாற்ற உள்ளதாக அவர் அறிவித்துள்ளார். இதையடுத்து பல முன்னணி நிறுவனங்களின் உயர் அதிகாரிகள் அரசு உடனடியாக சாலை பள்ளங்களை சரிசெய்ய வேண்டும் என்று முதல்வர் சித்தராமையா, துணை முதல்வரும், பெங்களூர் நகர அபிவிருத்தி துறை அமைச்சருமான டிகே சிவக்குமாருக்கு கோரிக்கை வைத்தனர்.
அரசை மிரட்ட முடியாது
இதுபற்றி டிகே சிவக்குமார் அளித்த பேட்டியில், ‛‛அரசை யாராலும் மிரட்ட முடியாது. இங்கிருந்து செல்ல நினைப்பவர்களை நான் ஒருபோதும் நிறுத்த மாட்டேன். அவர்களுக்கு நல்லதே நடக்க வேண்டும் என்று வாழ்த்துகிறேன். நிறுவனத்துக்கு தேவையான திறமையான ஆட்கள் அல்லது வசதிகளில் குறைபாடு இருந்தால் என்னால் அவர்களை நிறுத்த முடியாது. அதேவேளையில் அரசை யாராலும் மிரட்ட முடியாது. இதனை நான் கூறி கொள்ள விரும்புகிறேன்.
வேறு எந்த சிட்டியும் கிடையாது
ஏனென்றால் உள்கட்டமைப்பு சரியில்லை என்ற காரணத்துக்காக யாரும் பெங்களூரை விட்டு வெளியேறமாட்டார்கள். மாறாக ஒருவர் சென்றால் அது பிசினஸ் மற்றும் நிதி சார்ந்த பிரச்சனையாக இருக்கலாம். அரசை மிரட்டுவது யாருக்கும் உதவாது. அவர்கள் எங்கு செல்கிறார்களோ செல்லட்டும். பெங்களூருவுக்கு நிகராக வேறு எந்த சிட்டியும் இருக்காது என்பதை தெரிவித்து கொள்கிறேன்" என்று கூறியிருந்தார்.
பெங்களூரை விட்டு போகவில்லை என அறிவிப்பு
இந்நிலையில் தான் ராஜேஷ் யாபாஜி விளக்கம் அளித்துள்ளார். பெங்களூரை விட்டு தனது நிறுவனம் வெளியேறாது என்று அவர் கூறியுள்ளார். இதுபற்றி ராஜேஷ் யாபாஜி தனது எக்ஸ் பக்கத்தில் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், ‛‛ பிளாக்பக் நிறுவனம் கடந்த 2015ம் ஆண்டு பெங்களூரில் தொடங்கப்பட்டது. கோரமங்களா சோனி சிக்னலில் சிறிய அலுவலகமாக இது தொடங்கியது. எங்களின் ஆபரேஷன் மற்றும் அணி விரிவாக்கப்பட்டது.
அதன்பிறகு பெல்லந்தூர் - அவுட்டர் ரிங் ரோட்டுக்கு 2016ல் மாறினோம். அங்கு பெரிய அலுவலகம் மற்றும் கூடுதல் வசதியுடன் அலுவலகம் அமைந்தது. அங்கு நிறுவனத்துக்கு தேவையான உள்கட்டமைப்பு, திறமையான ஊழியர்கள் கிடைத்தன. அதற்கான வாய்ப்பை கர்நாடகா அரசு உருவாக்கி கொடுத்தது. இதனால் கம்பெனி பெரிய நிறுவனமாக மாறியது. இந்தியாவின் டிராக்கிங் எக்கோ சிஸ்டமில் அர்த்தமுள்ள பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.
எங்கள் நிறுவனத்தின் செயல்பாடு அவுட்டர் ரிங் ரோட்டில் தொடரும். அதேநேரத்தில் நகரில் பிற இடங்களிலும் அலுவலகம் விரிவாக்கம் செய்யப்படும். பெங்களூர் என்பது எங்களின் ஹோம். இது எப்போதும் எங்களின் ஹோமாக தான் இருக்கும். நாங்கள் அரசுடன் சேர்ந்து செயல்பட்டு அவர்களிடம் ஆதரவு கேட்போம்'' என்று கூறியுள்ளார். இதன்மூலம் பிளாக்பக் நிறுவனம் மனம்மாறி உள்ளது குறிப்பிடத்தக்கது.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications