அதெப்படி யெச்சூரி அப்படி பேட்டி கொடுக்கலாம்? பெங்களூரு கூட்டத்திலேயே முறைத்து கொண்டிருக்கும் மமதா!
பெங்களூர்: மேற்கு வங்க மாநில அரசியல் தொடர்பாக பெங்களூர் எதிர்க்கட்சிகள் ஆலோசனை கூட்டத்துக்கு முன்னதாக இடதுசாரி தலைவர் சீதாராம் யெச்சூரி தெரிவித்த கருத்தால் மேற்கு வங்க முதல்வரும் திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மமதா பானர்ஜி கடு அதிருப்தியில் இருப்பதாக ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டுள்ளன.
மேற்கு வங்க மாநிலத்தில் 1977-ம் ஆண்டு முதல் 2011-ம் ஆண்டு வரை 34 ஆண்டுகள் இடதுசாரிகள் ஆட்சி செய்தனர். இடதுசாரிகளின் அசைக்க முடியாத கோட்டையாக இருந்தது மேற்கு வங்கம். அம்மாநில முதல்வராக முதுபெரும் இடதுசாரி தலைவர் ஜோதிபாசு 5 முறை பதவி வகித்தார். ஆனால் இடதுசாரிகளின் இந்த சரித்திரத்தை தலைகீழாக புரட்டிப் போட்டவர் மமதா பானர்ஜி.

காணாமல் போன இடதுசாரிகள்: காங்கிரஸ் கட்சியில் இருந்து வெளியேறி திரிணாமுல் காங்கிரஸை தொடங்கிய மமதா பானர்ஜி 2011-ம் ஆண்டு முதல் தொடர்நது அம்மாநிலத்தில் முதல்வராக இருந்து வருகிறார். கோட்டை கட்டி ஆண்ட இடதுசாரிகளின் ஒட்டுமொத்த ஓட்டு வங்கியும் சுக்கு நூறாக சிதைந்து போனது. பிரதான எதிர்க்கட்சியாக இடதுசாரிகள் இருக்க வேண்டிய இடத்தில் பாஜக உட்கார்ந்துள்ளது. இதற்கு காரணம், இடதுசாரிகளே காவி உடை தரித்து பாஜகவினராக உருமாறிப் போனதுதான். இன்குலாப் ஜிந்தாபாத் என புரட்சி முழக்கமிட்டவர்கள், பாரத் மாதா கீ ஜே என காவி கொடி ஏந்தி முழங்கிய காட்சிகளை மேற்கு வங்கம் பார்த்து கொண்டிருக்கிறது.
காங்கிரஸுடன் கூட்டணி: மேற்கு வங்க மாநிலத்தில் மமதாவின் திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சி, பாஜகவின் விஸ்வரூபத்துக்கு எதிராக இடதுசாரிகளும் காங்கிரஸும் கை கோர்த்து செயல்படுகின்றன. இடதுசாரிகளுடன் காங்கிரஸ் கை கோர்த்து செயல்படுவதை மமதா பானர்ஜி கடுமையாகவும் பகிரங்கமாகவும் எதிர்த்தும் விமர்சித்தும் வருகிறார்.
பெங்களூரு கூட்டம்: இருந்த போதும் தேசிய அளவில் பாஜகவை வீழ்த்த வேண்டும் என்பதற்காக காங்கிரஸை உள்ளடக்கிய அனைத்து எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் இடதுசாரிகளும் திரிணாமுல் காங்கிரஸும் இணைந்து பங்கேற்றுள்ளன. மொத்தம் 26 எதிர்க்கட்சிகளின் ஆலோசனை கூட்டம் கர்நாடகா மாநிலம் பெங்களூரில் நேற்று தொடங்கியது. இன்று 2-வது நாளாக இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது.
யெச்சூரி பேட்டியால் மமதா கோபம்: இந்நிலையில் பெங்களூர் கூட்டத்துக்கு வருகை தந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பொது செயலாளர் சீதாராம் யெச்சூரி, செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்பேட்டியில், மேற்கு வங்க மாநிலத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியுடன் இடதுசாரிகள் எந்த வகையிலும் கூட்டணி அமைக்கவில்லை. பாஜக மற்றும் மமதா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் அரசாங்கத்தை காங்கிரஸும் இடதுசாரிகளும் இணைந்தே எதிர்த்து வருகின்றனர். இந்த எதிர்ப்பு தொடரும் என கூறியிருந்தார் யெச்சூரி. பெங்களூரு கூட்டத்துக்காக தாம் வருகை தந்த நிலையில் சீதாராம் யெச்சூரி கொடுத்த பேட்டி தேவையில்லாதது; சீண்டிப் பார்ப்பதாக இருக்கிறது என தமது சகாக்களிடம் கோபத்தை காட்டினார் மமதா பானர்ஜி என்கின்றன ஊடக செய்திகள்.
நந்தவனத்தில் ஒரு ஆண்டி கதையா?












Click it and Unblock the Notifications