பெங்களூரு ஷாக்.. "தகாத உறவு" வைத்த பூனைகள்? வாசலில் வீசப்பட்ட 4 குட்டி! பிரியாவுக்கு வந்துச்சே கோபம்
பெங்களூர்: பெங்களூருவின் சேஷாத்ரிபுரம் பகுதியில் ஒரு பெண் பூனை நான்கு குட்டிகளைப் பெற்றெடுத்த விவகாரம், 2 குடும்பங்களுக்கு இடையே பெரும் கைகலப்பாக மாறியுள்ளது.. ஒரு சாதாரண சின்ன பிரச்சனை, இறுதியில் ஒரு குடும்பத்தின் மீது ஆசிட் வீசப்போவதாக மிரட்டல் விடுக்கும் அளவிற்கு சென்றுவிட்டது.. இதுதான் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.. அதை பற்றி இங்கே சுருக்கமாக பார்ப்போம்.
சேஷாத்ரிபுரம் நேருபுரத்தில் வசிப்பவர் பிரியா (பெயர் மாற்றப்பட்டுள்ளது).. இவர் தனது வீட்டில் ஒரு பெண் பூனையை ஆசையாக வளர்த்து வருகிறார்.. இவரது பக்கத்து வீட்டில் வசிப்பவர் ஒரு ஆண் பூனையை வளர்த்து வருகிறார்.

இந்நிலையில், பிரியாவின் பெண் பூனை சமீபத்தில் நான்கு குட்டிகளைப் போட்டது.. பொதுவாக பூனைக்குட்டிகள் பிறந்தால் மகிழ்ச்சியடைய வேண்டிய நிலையில், இங்கே நிலைமை தலைகீழாக மாறியது..
பெங்களூரு பிரியா
கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிகாலை, பிரியா மற்றும் அவரது மகள் இருவரும் அந்த 4 குட்டிகளையும் பக்கத்து வீட்டார் வீட்டு வாசலில் கொண்டு போய் வீசி விட்டார்கள்.. தூக்கத்திலிருந்து எழுந்து வந்த பக்கத்து வீட்டுக்காரர்கள், தங்கள் வீட்டு வாசலில் 4 குட்டிகள் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.. "ஏன் இப்படி செய்கிறீர்கள்? குட்டிகளை ஏன் இங்கே கொண்டு வந்து போடுகிறீர்கள்?" என்று அவர்கள் பிரியாவிடம் கேட்டுள்ளனர்..
அதற்குப் பிரியா, "உங்கள் வீட்டு ஆண் பூனையால்தான் என் பூனை குட்டிகளை போட்டது.. இதற்கு நீங்கள்தான் பொறுப்பு.. அதனால் இந்தக் குட்டிகளை நீங்கள்தான் வளர்க்க வேண்டும்.. எனக்கு இந்தக் குட்டிகள் தேவையில்லை" என்று கூறி கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.. இதைக்கேட்டதுமே, குட்டிகளைப் பராமரிக்க முடியாது பக்கத்து வீட்டினரும் திட்டவட்டமாக சொல்லிவிட்டார்கள். நேரம் செல்ல செல்ல 2 தரப்பினருக்கும் இடையே கடும் வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது..
4 பூனைக்குட்டிகள்
வாக்குவாதம் முற்றிய நிலையில், பிரியாவும் அவரது மகளும் பக்கத்து வீட்டாரைப் பார்த்து ஆபாசமான வார்த்தைகளால் திட்டியதாக கூறப்படுகிறது.. அதுமட்டுமின்றி, "உங்கள் குழந்தைகள் மீது ஆசிட் வீசி விடுவோம்" என்று கொலை மிரட்டல் விடுத்ததுதான் உச்சகட்ட அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.. இதனால் உயிருக்கு அஞ்சிய அண்டை வீட்டார், உடனடியாக 112 என்ற அவசர உதவி எண்ணிற்கு அழைத்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்..
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு ஹோய்சாலா ரோந்துப் பிரிவு போலீசார் விரைந்து வந்தனர்.. இரு தரப்பினரிடமும் மாறி மாறி சமாதானம் பேசினார்கள்.. இறுதியாக போலீசார் ஒரு சமரச திட்டத்தை முன்வைத்தனர்.. "4 குட்டிகளில் இரண்டை பிரியா தரப்பும், மீதமுள்ள இரண்டை பக்கத்து வீட்டுக்காரர்களும் பிரித்து வளர்க்க வேண்டும்" என்று கூறினார்கள்..
ஆசீட் வீச்சு மிரட்டல் - போலீஸ் சமாதானம்
இருந்தாலும், ஆசிட் வீச்சு மிரட்டல் மற்றும் கொலை மிரட்டல் விடுத்தது தொடர்பாக பிரியா மற்றும் அவரது மகள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அண்டை வீட்டார் உறுதியாகப் புகார் அளித்துள்ளனர்.. இது தொடர்பாக சேஷாத்ரிபுரம் போலீசார் தற்போது தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.. பூனைக்குட்டி வளர்ப்பில் ஏற்பட்ட இந்த மோதல் பெங்களூருவில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது..
இந்த களேபரமும், பேச்சுவார்த்தையும் நடந்து கொண்டிருக்கும்போதே, அந்த 4 பூனை குட்டிகளும் அங்குமிங்குமாக ஓடி மறைந்துவிட்டன.. தன் கண் முன்னே குட்டிகள் சிதறி ஓடியதால், தாய் பூனை பரிதாபமாக அவற்றைத் தேடி தேடி அலைந்த காட்சி அங்கிருந்தவர்களைக் கண்கலங்க வைத்து விட்டதாம்..!!!!
-
தேர்தல் ஆணையத்தின் அதிரடி ‘டிரான்ஸ்பர்’ மேளா.. காலியான எடப்பாடி கணக்கு... ஸ்டாலின் பவர்ஃபுல் மூவ்! -
எடப்பாடிக்கு அருகில் சீட்.. ஒரே விமானத்தில் பயணம்.. கடைசி நேரத்தில் பிளானை மாற்றிய உதயநிதி! -
வில்லிவாக்கத்தில் ட்விஸ்ட்.. ஆதவ் அர்ஜுனாவுக்கு அடிக்குமா ஜாக்பாட்? களம் எப்படி இருக்கிறது? -
"கொஞ்ச நேரம்.." என கொஞ்சியபோது காதலில் விழாதவர் உண்டோ? ஆஷா போஸ்லேவின் மறக்க முடியாத தமிழ் பாடல்கள் -
தவெக ஆட்சிக்கு வந்த 6 மாதத்தில் தமிழ்நாடு சேவை உரிமை சட்டம்.. குமரியில் விஜய் அளித்த வாக்குறுதிகள் -
ஈரான் விரித்த வலையில் ஈரானே சிக்கிடுச்சு.. அமெரிக்காவே கவலைப்படும் அளவிற்கு நிலைமை கைமீறியது -
மகளிர் உரிமைத் தொகை.. இன்னும் ஆட்டம் முடியல.. வரப்போகும் 2 ‘மெகா’ மாற்றங்கள்.. கவனிங்க! -
விட்டு விளாசிய பிடிஆர்! கோபத்தின் உச்சிக்கே போன குஷ்பு சுந்தர் சி.. மோதல் உச்சகட்டம்! என்ன நடக்குது? -
இஸ்லாமாபாத் டாக்ஸ்.. ட்ரம்ப் - ஈரான் டீல்.. இந்தியா மிஸ் செய்த சான்ஸ்? அடித்து தூக்கிய பாகிஸ்தான் -
அவ்ளோதான் முடிச்சுவிட்டீங்க போங்க.. ஒரே வரியில் தவெக பர்னிச்சரை சல்லி சல்லியாக்கிய ஸ்டாலின் -
சுப்மன் கில் ஆட்டத்தை பார்க்க வந்த சாரா டெண்டுல்கர்.. பாவமாக அமர்ந்திருந்த அர்ஜுன் டெண்டுல்கர் மனைவி -
கோவை ஈஷா யோகா மையத்தில் எஸ்.பி.வேலுமணியுடன் பேசியது என்ன? உடைத்து பேசிய பிரேமலதா












Click it and Unblock the Notifications