கேட்கலையே.. கூட்ட நெரிசலில் 11 பேர் பலியாக காரணமான சித்தராமையாவின் அரசியல் செயலாளர் பணி நீக்கம்
பெங்களூர்: பெங்களூரில் நடந்த ஆர்சிபி வெற்றி கொண்டாட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி தமிழக பெண் உள்பட 11 பேர் பலியாகினர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது நடவடிக்கையை தொடங்கி உள்ளனர். அதோடு முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் டிகே சிவக்குமார் ராஜினாமா செய்ய வேண்டும் என்று பாஜகவினர் வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில் தான் முதல்வர் சித்தராமையாவின் அரசியல் செயலாளர் கே கோவிந்தராஜ் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். இவர் தான் இந்த சம்பவத்துக்கே முக்கிய காரணம் என்ற பரபரப்பான தகவல் வெளியாகி உள்ளது.
ஐபிஎல் 18 வது சீசன் பைனலில் பஞ்சாப் அணியை வீழ்த்தி பெங்களூர் அணி வெற்றி பெற்றது. கடந்த 3ம் தேதி இரவு பெங்களூர் அணி முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்றது. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி வீரர்கள், ரசிகர்கள் ஆனந்த் கண்ணீர் சிந்தினர். மேலும் 17 ஆண்டுகள் கழித்து கோப்பை வென்றதால் பெங்களூர் உள்பட கர்நாடகா முழுவதும் வெற்றி கொண்டாட்டம் களைகட்டியது.

கடந்த 4ம் தேதி கோப்பையுடன் பெங்களூர் வந்த ஆர்சிபி அணி வீரர்களுக்கு பூங்கொத்து கொடுத்து துணை முதல்வர் டிகே சிவக்குமார் வரவேற்றார். அதன்பிறகு பெங்களூர் விதானசவுதா மற்றும் சின்னச்சாமி கிரிக்கெட் மைதானத்தில் வெற்றி கொண்டாட்டம் நடத்தப்பட்டது.
இதற்காக ஏராளமான ரசிகர்கள் திரண்டு வந்தனர். ஒரே நேரத்தில் பல லட்சம் பேர் கூடினர். விதான சவுதா முதல் சின்னச்சாமி கிரிக்கெட் மைதானம் வரை ரசிகர்கள் கூட்டம் கட்டுக்கடங்காமல் இருந்தது. அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 14 வயது சிறுமி, தமிழக பெண் உள்பட 11 பேர் இறந்தனர். 47 பேர் காயமடைந்தனர். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில் தான் சம்பவம் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவத்துக்கு பொறுப்பேற்று முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் டிகே சிவக்குமார் ஆகியோர் பதவி விலக வேண்டும் என்று பாஜக, ஜேடிஎஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கூறி வருகின்றனர்.
இந்நிலையில் தான் சித்தராமையா அதிரடியாக சில நடவடிக்கைகளை எடுத்துள்ளார். அதன்படி அவர் தனது அரசியல் செயலாளர் கே கோவிந்தராஜை பணி நீக்கம் செய்துள்ளனர். ஏனென்றால் இவர் தான் ஆர்சிபி கொண்டாட்டத்துக்கு முக்கிய காரணம் என்று சொல்லப்படுகிறது. அதாவது கடந்த 4ம் தேதி (புதன்கிழமை) ஆர்சிபி வெற்றி கொண்டாட்டம் தொடர்பாக முதல்வர் சித்தராமையாவின் இல்லத்தில் ஆலோசனை மேற்கெள்ளப்பட்டது.
அப்போது திடீரென்று வெற்றி கொண்டாட்டம் நடத்தினால் ரசிகர்கள் அதிகம் கூடலாம். இதனால் பிரச்சனை ஏற்படும் எனக்கூறி பெங்களூர் போலீஸ் கமிஷனர் தயானந்த் அனுமதி கொடுக்க மறுத்துள்ளார். ஒரே நாளில் 3 நிகழ்ச்சி நடத்துவது என்பது பிரச்சனையாக மாறிவிடும் என்று கூறியுள்ளார். ஆனால் முதல்வர் சித்தராமையாவின் அரசியல் ஆலோசகரும், காங்கிரஸ் எம்எல்சியுமான கோவிந்தராஜ் கேட்கவில்லை. இவர் தான் வெற்றி கொண்டாட்டம் நடத்த வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார்.
இதையடுத்து விதான சவுதா மற்றும் பெங்களூர் சின்னச்சாமி கிரிக்கெட் மைதானத்தில் வீரர்களை பாராட்டும் 2 நிகழ்ச்சிகளை மட்டும் நடத்த வேண்டும் என்று உறுதியாக கூறியுள்ளார். திறந்த வேனில் ஊர்வலம் செல்ல வேண்டாம் என்று அவர் கூறியுள்ளார். இதனால் வேறு வழியின்றி போலீசார் மனமின்றி அனுமதி கொடுத்துள்ளனர். இந்த வெற்றி கொண்டாட்டம் நடத்தப்பட்டதில் 11 பேர் பலியாகி உள்ளனர். இதனால் தான் அரசியல் செயலாளர் பொறுப்பில் இருந்து கே கோவிந்தராஜை பணி நீக்கம் செய்து முதல்வர் சித்தராமையாக உத்தரவிட்டுள்ளார்.
-
சிம்பிளாக பதவியேற்பு.. கர்நாடகாவில் கவனத்தை ஈர்க்கும் டி.கே.சிவகுமார்! காரணம் இதுதான்! -
நள்ளிரவில் ஜொலிக்கும் பெங்களூர்.. RCB வெற்றியால் ரசிகர்கள் செய்த சம்பவம்.. இந்த வீடியோ பாருங்க -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்!












Click it and Unblock the Notifications