பெங்களூர்: ரூ.1.87 லட்சம் கொடுத்து ஸ்மார்ட்போனை ஆர்டர் செய்தவருக்கு ஷாக்! என்ன வந்துச்சுன்னு பாருங்க
பெங்களூர்: பெங்களூரை சேர்ந்த மென்பொறியாளர் ஒருவர், அமேசான் ஆன்லைன் ஷாப்பிங் தளத்தில் ரூ.1.87 லட்சம் மதிப்பிலான ஸ்மார்ட்போனை ஆர்டர் செய்திருக்கிறார். ஆனால், ஸ்மார்ட்போனுக்கு பதில் வெறும் டைல்ஸ் கல் ஒன்று பார்சலில் வந்திருக்கிறது.
பெங்களூரை சேர்ந்தவர் சாப்ட்வேர் என்ஜினியர் பிரேமானந்தா. இவர் தீபாவளியை சிறப்பாக கொண்டாட திட்டமிட்டிருக்கிறார். எனவே, ரூ.1.87 லட்சம் கொடுத்து அமேசான் தளத்தில் சாம்சங் கேலக்ஸி Z ஃபோல்ட் 7 ஸ்மார்ட்போனை ஆர்டர் செய்திருக்கிறார்.

குறிப்பிட்ட நாளில் மொபைல் வீடு தேடி வந்திருக்கிறது. சாதாரணமாக ரூ.100 கொடுத்து இயர்போன் வாங்கினாலே, அதை பிரித்து பார்க்க நமக்கு ஆர்வம் அதிகமாக இருக்கும். ரூ.1.87 லட்சம் மதிப்புடைய ஸ்மார்ட்போன் எனில் சொல்லவா வேண்டும்? எனவே பிரேமானந்தா, பார்சலை பிரிக்கும் அனுபவத்தை வீடியோவாக ரெக்கார்ட் செய்திருக்கிறார். வீட்டில் உள்ளவர்கள் எல்லாம் ஆர்வமாக காத்திருக்க, பிரித்து பார்த்தால் உள்ளே வெறும் ஒரு டைல்ஸ் கல் மட்டும் இருந்திருக்கிறது. இதனால் ஏமாற்றமடைந்த பிரேமானந்தா சம்வம் குறித்து சைபர் கிரைமில் புகார் அளித்திருக்கிறார்.
இது குறித்து அவர் கூறுகையில், "நான் ₹1.87 லட்சம் மதிப்புள்ள சாம்சங் கேலக்ஸி Z ஃபோல்ட் 7 போனை ஆர்டர் செய்தேன், ஆனால் தீபாவளிக்கு ஒரு நாள் முன்பு போனுக்குப் பதிலாக ஒரு மார்பிள் கல்லைப் பெற்றேன். இந்தச் சம்பவம் நாங்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருந்த பண்டிகை மனநிலையை முற்றிலும் கெடுத்துவிட்டது. ஆன்லைனில் ஷாப்பிங் செய்யும்போது, குறிப்பாக அமேசானில், அனைவரும் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன். இந்த அனுபவம் மிகவும் ஏமாற்றமளிக்கிறது" என்று பதிவிட்டிருக்கிறார்.
Bengaluru Techie orders a smart phone from @amazonIN gets a stone tile instead. FIR registered. The Samsung Galaxy Fold 7 cost him 186,999. He recorded the unboxing on video, amazon has issued a refund, but cops continue probe. pic.twitter.com/KDMONtqfHJ
— Deepak Bopanna (@dpkBopanna) October 30, 2025
இந்த சம்பவத்தையடுத்து வீடியோ சோஷயில் மீடியாவில் பரவலாக ஷேரானது. பாதிக்கப்பட்ட பிரேமானந்தாவுக்கு அவரது முழு தொகையும் அமேசான் திருப்பி அனுப்பியிருக்கிறது. இருப்பினும் இந்த அனுபவம் நிச்சயம் மோசமான ஒன்றுதான். வீடியோவை பார்த்த பலரும், பார்சலை டெலிவரி ஏஜென்ட் முன்னிலையில் பிரித்து பார்த்திருக்கலாமே என்று கேள்வி எழுப்பியுள்ளனர். அதேபோல, வீடியோ எடுத்தது நல்ல விஷயம் என்றும் கூறியிருக்கின்றனர்.
விலையுயர்ந்த பொருட்களை பார்சலாக பெரும்போது நிச்சயம் அதை வீடியோ பதிவு செய்ய வேண்டும். குறிப்பாக பார்சலை பிரிப்பதற்கு முன்னர், பார்சலில் உள்ள சீல் இருப்பதை வீடியோவில் தெளிவாக பதிவு செய்ய வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
-
அமைச்சர் பதவிக்கு குட்பை? பெங்களூர் வளர்ச்சி துறையின் பல்லை பிடுங்கிய டிகே சிவக்குமார்.. கிருஷ்ணபைரே கவுடா அதிருப்தி -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்!












Click it and Unblock the Notifications