ரூ. 29 லட்சம் கோடி.. கடனை கட்டாமல் ஏமாற்றிய கோடீஸ்வரர்கள்.. வசூலிக்க முடியாமல் தவிக்கும் வங்கிகள்
பெங்களூர்: மத்திய அரசும் இந்திய ரிசர்வ் வங்கியும், பொதுத்துறை வங்கிகளின் வராக்கடன் கடந்த பத்து ஆண்டுகளில் இல்லாத அளவுக்குக் குறைந்துள்ளதாகத் தொடர்ந்து கூறி வருகிறது. ஆனால், பொதுத்துறை வங்கிகளில் கடன் பெற்றுத் திருப்பிச் செலுத்தாத 'பெரும் கடன் ஏய்ப்பாளர்களின்' சமீபத்திய புள்ளிவிவரங்கள் ரூ. 29 லட்சம் கோடியை எட்டி உள்ளதாக 'தி பயனியர்' இதழ் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியுள்ளது.பெரிய அளவில் கடன் ஏய்ப்பு செய்தவர்களிடமிருந்து ரூ. 29 லட்சம் கோடியை வசூலிக்க முடியாமல் பொதுத்துறை வங்கிகள் தவிக்கின்றன.
'தி பயனியர்' இதழ் வெளியிட்டுள்ள செய்திகளின் படி, பொதுவாக வராக்கடன் என்பது கடனின் அளவைப் பொருட்படுத்தாமல், 90 நாட்களுக்கு மேல் திருப்பிச் செலுத்தப்படாத கடனைத்தான் குறிப்பிடுவார்கள். இந்த வாரக்கடன்கள் ஒருமுறை தீர்வு அல்லது திவால் சட்டத்தின் (IBC) கீழ் வங்கிகளால் சரி செய்யப்படலாம். ஆனால், புள்ளி விவரங்களில்உள்ள 'பெரும் கடன் ஏய்ப்பாளர்கள்' என்பவர்கள் ரூ. 1 கோடி அல்லது அதற்கு மேல் கடன் பெற்றுத் திருப்பிச் செலுத்தாமல், வங்கிகளால் சிவில் வழக்குத் தொடரப்பட்டவர்கள் ஆவர். இது பெரும்பாலும் திட்டமிட்ட கடன் ஏய்ப்பு அல்லது அதிக மதிப்புள்ள அபாயகரமான கடன்களைக் குறிக்கிறது.

கடந்த பிப்ரவரி மாதம், 2025 செப்டம்பர் இறுதி நிலவரப்படி வங்கிகளின் மொத்த வராக்கடன் 2.15 சதவீதமாகக் குறைந்து வரலாற்றுச் சாதனை படைத்துள்ளதாக அரசு நாடாளுமன்றத்தில் தெரிவித்திருக்கிறது. இருப்பினும், இந்த எண்கள் எதன் அடிப்படையில் கணக்கிடப்பட்டன என்பதில் போதிய தெளிவு கிடையாது. தற்போது பொதுவெளியில் கிடைத்துள்ள தரவுகளின்படி, 11 பொதுத்துறை வங்கிகள் கார்ப்பரேட் நிறுவனங்களிடமிருந்து ரூ. 28.93 லட்சம் கோடியை மீட்பதற்காக நாடு முழுவதும் உள்ள பல்வேறு நீதிமன்றங்களில் சிவில் வழக்குகளை நடத்தி வருகின்றன
இந்தப் பெரும் கடன் ஏய்ப்பாளர்கள் பட்டியலில் அனில் அம்பானி மற்றும் அவரது நிறுவனங்கள் ரூ. 48,282 கோடி நிலுவைத் தொகையுடன் முதலிடத்தில் இருக்கின்றன. 'டிரான்ஸ் யூனியன் சிபில்' தரவரிசை முகமையிடம் ஜனவரி 2026 வரையிலான கடன் ஏய்ப்பாளர்களின் முழுமையான தரவுகள் இருக்கின்றன. இதில் இந்தியன் வங்கியைத் தவிர மற்ற அனைத்து பொதுத்துறை வங்கிகளும் இந்தப் பட்டியலைப் பதிவேற்றி உள்ளன. இந்த வாரம் 'தி பயனியர்' இதழ், இந்தத் தரவுகளை ஆய்வு செய்து இந்தியாவின் மிகப்பெரிய கடன் ஏய்ப்பாளர்கள் பற்றிய விவரங்களை வெளியிட இருக்கிறது.
வராக்கடன் குறித்த விவரங்களை இந்திய ரிசர்வ் வங்கி ஒரே ஒரு முறை மட்டுமே வழங்கி உள்ளது. 2021-ஆம் ஆண்டில், பாஜக முன்னாள் எம்பி சுப்ரமணியம் சுவாமி தாக்கல் செய்த பொதுநல வழக்கிற்குப் பதிலளிக்கும் விதமாக, உச்சநீதிமன்றத்தில் மூடிய உறையில் வைத்து இந்தத் தரவுகளை ரிசர்வ் வங்கி சமர்ப்பித்திருக்கிறது. எனினும் வங்கிகள் வாடிக்கையாளர்களின் ரகசியத்தைப் பாதுகாக்க வேண்டும் என்ற விதியின் அடிப்படையில் அந்தத் தரவுகள் பொதுவெளியில் ஒருபோதும் வெளியிடப்படவில்லை.
முன்னதாக சுப்பிரமணியன் சுவாமி தனது மனுவில் 2015-ஆம் ஆண்டின் 'கிரெடிட் சூயிஸ்' அறிக்கையை இணைத்திருந்தார். அதில் இந்தியாவின் டாப் 10 கார்ப்பரேட் நிறுவனங்களின் வராக்கடன் ரூ. 11 லட்சம் கோடியைத் தாண்டியதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது. அந்தப் பட்டியலில் அனில் அம்பானி குழுமம், வேதாந்தா, எஸ்ஸார், அதானி, ஜேபி குழுமம், ஜேஎஸ்டபிள்யூ, ஜிஎம்ஆர், லான்கோ, வீடியோகான் மற்றும் ஜிவிகே ஆகிய குழுமங்கள் இடம்பெற்றிருந்தன. இதில் வீடியோகான் குழுமம் லஞ்சம் கொடுத்த விவகாரத்திலும், ஜிவிகே குழுமம் பொதுப்பணத்தை முறைகேடு செய்த விவகாரத்திலும் சிக்கியது.
இந்தியாவில் உள்ள 12 பொதுத்துறை வங்கிகளில், இந்தியன் வங்கியைத் தவிர மற்ற அனைத்தும் பெரும் கடன் ஏய்ப்பாளர்களின் பட்டியலைத் தொடர்ந்து வெளியிட்டு வருகின்றன. வங்கிகளுக்கு இந்தப் பெரும் கடன்கள் சிக்கலாக மாறியதற்கு முக்கியக் காரணம், இவை எவ்வித பிணையும் இன்றி வழங்கப்பட்ட கடன்கள் ஆகும்.
வங்கிகள் வாரியாகப் பார்த்தால், யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா (UBI) ரூ. 9.96 லட்சம் கோடி நிலுவைத் தொகையுடன் முதலிடத்தில் உள்ளது. கார்ப்பரேஷன் வங்கி மற்றும் ஆந்திரா வங்கி ஆகியவை இதனுடன் இணைக்கப்பட்டதே இதற்கு முக்கியக் காரணம் என வங்கி அதிகாரிகள் கூறுகிறார்கள்.
இதனைத் தொடர்ந்து ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (SBI) ரூ. 5.79 லட்சம் கோடி, பஞ்சாப் நேஷனல் வங்கி (PNB) ரூ. 2.59 லட்சம் கோடி, கனரா வங்கி ரூ. 2.49 லட்சம் கோடி, பேங்க் ஆஃப் பரோடா ரூ. 2.21 லட்சம் கோடி, பேங்க் ஆஃப் மகாராஷ்டிரா ரூ. 1.78 லட்சம் கோடி, சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா ரூ. 1.44 லட்சம் கோடி, யூகோ வங்கி (UCO Bank) ரூ. 1.11 லட்சம் கோடி, பேங்க் ஆஃப் இந்தியா ரூ. 96,512 கோடி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி ரூ. 30,861 கோடி மற்றும் பஞ்சாப் அண்ட் சிந்து வங்கி ரூ. 27,954 கோடி என வாரக்கடனை கொண்டுள்ளன.
அரசியல் செல்வாக்கு மற்றும் வங்கி அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்து பிணையின்றி கடன் பெற்ற, ரூ. 500 கோடிக்கும் அதிகமான கடன் வைத்துள்ள கார்ப்பரேட் நிறுவனங்களின் வங்கி வாரியான விவரங்களை 'தி பயனியர்' இதழ் வரும் நாட்களில் விரிவாக வெளியிட உள்ளதாக கூறியுள்ளது.
-
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
அஜிதா ஆடிய மைண்ட் கேம்.. தவெக-வை தவிக்கவிட்டு திமுக பக்கம் தாவ இதுதான் காரணமா? தூத்துக்குடி மாஸ் -
பேசி முடித்ததுமே சரிந்த பாமக நிறுவனர் ராமதாஸ்.. கேள்விப்பட்டதும் உடனே போன் போட்ட முதல்வர் ஸ்டாலின்! -
”5 கேப்டன் இருந்தும் என் பக்கத்துல இருக்கான் மச்சா” மும்பை அணியை செய்யும் சிஎஸ்கே! தெறிக்கும் மீம்ஸ் -
LIK vs TN 2026 box office: மூன்று நாள் முடிவில் பிரதீப் ரங்கநாதன் Vs நட்டி யாருக்கு வெற்றி? வசூல் நிலவரம் -
யாருங்க இந்த ஐடியாலாம் தருவது? தவெக விஜய் கொடுத்த வாக்குறுதியில்.. இருக்கும் பெரிய ஓட்டை! -
'ஜனநாயகன்' பட லீக்கில் என்ன நடந்தது.. தமிழக காவல்துறை முழு விளக்கம் -
சாத்தூரில் நயினார் வாங்கிய காத்து.. பாஜக தேசிய தலைவரையே கூட்டி வந்தும் கூட்டம் இல்லை -
ஆட்டம் ஆரம்பம்.. முதல் அடி தங்கம், வெள்ளி விலை.. இந்தியாவில் விடியும் முன்பே ஷாக்! -
ஹார்முஸில் வழிந்தோடும் ‘ரத்தம்’? பீதியில் உலக நாடுகள்.. கண்ணி வெடிகள் வேற குவிந்து கிடக்குதே












Click it and Unblock the Notifications