சிக்க போவது யார்? பாஜக ஆட்சியில் நடந்த பிட்காயின் முறைகேடு.. எஸ்ஐடி அமைத்தது கர்நாடக காங். அரசு
பெங்களூர்: கர்நாடகாவில் கடந்த பாஜக ஆட்சியில் நடைபெற்ற பிட்காயின் முறைகேடு குறித்து மீண்டும் விசாரிக்க கூடுதல் டிஜிபி தலைமையில் சிறப்பு விசாரணை குழுவை சித்தராமையா அரசு அமைத்துள்ளது.
கர்நாடகாவில் முந்தைய பாஜக ஆட்சியின் போது பிட்காயின் முறைகேடு முதல்வர் பசவாராஜ் பொம்மை அரசுக்கு கடும் தலைவலியை ஏற்படுத்தியது. பெங்களூருவை சேர்ந்த பிரபல ஹேக்கரான ஸ்ரீகிருஷ்ணா என்ற ஸ்ரீகியை மத்திய குற்றப்பிரிவு காவல்துறை கைது செய்தது. பிறகு ஸ்ரீ கிருஷ்ணா ஜாமீனில் வெளிவந்தார். இந்தியா மட்டும் இன்றி வெளிநாட்டிலும் தொழில்அதிபர்கள், பணக்காரர்கள், பிரபல நிறுவனங்களின் வங்கி கணக்குகளை முடக்கி, பிட்காயின் முறைகேட்டில் ஸ்ரீகிருஷ்ணா ஈடுபட்டதாகவும் வெளிநாடுகளை சேர்ந்த ஹேக்கர்களும் அவருக்கு உதவியதாக தகவல் வெளியானது.

பிட்காயின் முறைகேடு கர்நாடகம் மட்டுமின்றி நாடு முழுவதும் பெரும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருந்தது. இந்த பிட்காயின் முறைகேடு குறித்து பெங்களூர் காட்டன் பேட்டை போலீஸ் நிலையத்தில் முதலில் வழக்குப்பதிவானது. பின்னர் இந்த வழக்கு மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு மாற்றப்பட்டு இருந்தது. இந்த முறைகேட்டில் அரசியல் கட்சிகளை சேர்ந்தவர்களுக்கு தொடர்பு இருப்பதாகவும் கூறப்பட்டது.
இதனால் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரணை நடத்த வேண்டும் என்று அப்போது எதிர்க்கட்சியாக இருந்த காங்கிரஸ் வலியுறுத்தியது. இந்த நிலையில், தற்போது காங்கிரஸ் ஆட்சி நடந்து வரும் நிலையில், பிட்காயின் முறைகேடு விவகாரத்தை சித்தராமையா அரசு கையில் எடுத்துள்ளது. அதாவது இது தொடர்பாக விசாரணை நடத்த சிறப்பு புலனாய்வு குழுவை கர்நாடக அரசு அமைத்துள்ளது.
இது குறித்து கர்நாடக அமைச்சர் பரமேஸ்வர் கூறுகையில், பிட்காயின் முறைகேடு குறித்து மறு விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. கூடுதல் டிஜிபி மனீஷ் கர்பீகர் தலைமையில் சிறப்பு விசாரணை குழு அமைக்கப்பட்டுள்ளது. மறு விசாரணை நடத்தி அரசிடம் அறிக்கை தாக்கல் செய்வார்கள். முறைகேட்டில் சம்பந்தப்பட்டவர்கள் மீது பாரபட்சம் இன்றி நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.
பிட்காயின் விவகாரத்தில் மறு விசாரணை நடத்த எஸ்.ஐ.டி அமைக்கப்பட்டதை முன்னாள் முதல்வர் பசவராஜ் பொம்மையும் வரவேற்றுள்ளார். பிட்காயின் முறைகேடு குறித்து விசாரணை நடத்துவதற்காக ஏடிஜிபியாக இருந்து வரும் மனீஷ் கர்பிகர் தலைமையில் சிறப்பு விசாரணை குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்த குழுவில் ஐ.ஜி வம்சி கிருஷ்ணா, துணை போலீஸ் கமிஷனர் அனூப் ஷெட்டி, போலீஸ் சூப்பிரண்டு சரத் ஆகிய 3 உயர் அதிகாரிகள் இடம் பெற்றுள்ளனர்.
மறு விசாரணை நடத்துவதற்காக பிட்காயின் குறித்து இதுவரை விசாரணை நடத்திய மத்திய குற்றப்பிரிவு போலீசாரிடம் இருந்து அனைத்து ஆவணங்களையும் பெறுவது சிறப்பு புலனாய்வு குழு முடிவு செய்துள்ளது. இந்த வழக்கில் ஏற்கனவே குற்றப்பத்திரிகை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளதால், நீதிமன்றத்தில் முறையான அனுமதியை பெற சிறப்பு விசாரணை குழு முடிவு செய்துள்ளது.
பிட்காயின் முறைகேடு குறித்து மறு விசாரணை நடைபெறுவதால், இந்த வழக்கின் முக்கிய குற்றவாளியான ஸ்ரீகிருஷ்ணா உள்ளிட்டோருக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா? இந்த விசாரணையில் தெரிய வரும் என்பதால் கர்நாடகாவில் இவ்விவகாரம் பரபரப்பை கிளப்பியுள்ளது.
-
வார்த்தையை விட்ட எடப்பாடி பழனிசாமி.. வரிந்து கட்டிய பிரேமலதா.. செல்போனில் காரசார உரையாடல் -
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
சென்னை எல்லையில் புது பேருந்து நிலையம்! பிரம்மாண்ட கிரீன்ஃபீல்ட் பஸ் ஸ்டாண்ட்! எங்க இருக்கு தெரியுமா -
2030-க்கு பிறகும் இந்திய IT துறை காணாமல் போய்விடும்.. டிசிஎஸ் சிஇஓ கிருதிவாசன் சொன்ன முக்கிய விஷயம்! -
"நீங்களே 4 முறை ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிக்கு போனீங்கள்!" நீதிபதியை பார்த்து கெஜ்ரிவால் சொன்ன வார்த்தை! -
படுபாவி எதுக்கு வந்தீங்க? லெஃப்ட் ரைட் வாங்கிய ராமதாஸின் செல்ல மகள்! ஸ்டன்னாகி நின்ற ஜிகே மணி? -
அஜிதாவை திமுகவில் சேர்ப்பதற்கு முன்.. ஸ்டாலின் டீமிடம் இருந்து சென்ற வார்னிங்.. என்ன நடந்தது? -
நீலாங்கரை வீட்டில் ஏணி போட்டு காம்பவுண்ட் சுவரில் ஏறிய விஜய்! மரக்கிளையை பிடித்து கொண்டு செய்த செயல் -
சிறகடிக்க ஆசை: ரோகிணி சொன்ன ஒரே ஒரு உண்மை! விஜயா வசமா சிக்கியாச்சு.. அண்ணாமலை எடுத்த முடிவு -
திடீர் அதிமுக சப்போர்ட்.. என்னாச்சு திருமாவளவனுக்கு.. குழப்பி எடுக்கும் விசிக.. அறிவாலயம் குழப்பம்! -
தங்கம் விலையில் நடக்க போகும் சுனாமி.. எச்சரித்த பிரபல வங்கி.. கிராமிற்கு ரூ.2500க்கும் மேல் குறையும்.! -
தமிழ் புத்தாண்டு பலன் 2026: மேஷம் முதல் மீனம் வரை.. 12 ராசிகளுக்கான பலன்கள்.. யாருக்கு அதிர்ஷ்டம்?












Click it and Unblock the Notifications