Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

புது மனைவிக்கு கிப்ட் கொடுக்க 3வது மனைவி நகையை திருடிய அரசு ஊழியர்.. மகன் கொடுத்த அதிரடி வைத்தியம்

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: 3-வது மனைவியின் நகைகளை திருடி 4-வது மனைவிக்கு அரசு ஊழியரான பக்தவச்சலம் பரிசாக அளித்தார். இதை அறிந்த அவரது 3-வது மனைவியின் மகன் தந்தை மீது சரமாரியாக தாக்குதல் நடத்தினார். இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

கர்நாடக மாநிலம் பெங்களூர் புறநகர் பகுதியில் உள்ள தொட்டபிதரகல்லு கிராமத்தைச் சேர்ந்தவர் பக்தவச்சலம். 48-வயதாகும் பக்தவச்சலம் அரசு ஊழியராக உள்ளார். கிருஷ்ணா நீர்ப்பாசன வாரியத்தில் 2-ம் நிலை ஊழியராக பணியாற்றி வரும் இவர் 3 பெண்களை திருமணம் செய்து உள்ளார்.

Bangalore Crime Jewellery Theft Trend Weird

முதலாவது மனைவியான கவிதா உயிருடன் இருக்கும் போதே 2-வதாக சாவித்ரி என்ற பெண்ணையும், மூன்றாவதாக நாகரத்னம்மா என்ற பெண்ணையும் திருமணம் செய்து கொண்டார். இவர்கள் மூலம் பக்தவச்சலத்திற்கு ஆறு பிள்ளைகள் உள்ளனர். இதில் 3-வது மனைவியின் மகன் ஜீவன்(வயது 18) ஆவார்.

4 மனைவிகள்: இதற்கிடையே, மூன்று மனைவிகளையும் விட்டுவிட்டு 4-வதாக பத்மாவதி என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். பக்தவச்சலம் 4 மனைவி மற்றும் 6 பிள்ளைகளுடன் தனித்தனி வீடுகளில் வசித்து வருகிறார். இவர் பெங்களூர் பீனியா அருகே வீடு ஒன்றை எடுத்து 4-வது மனைவியுடன் தற்போது வசித்து வருகிறார்.

அவ்வப்போது தனது 3 -மனைவிகள் வீடுகளுக்கும் பக்தவச்சலம் சென்று வந்துள்ளார். இதற்கு இடையே, 4-வது மனைவி பத்மாவதி தனக்கு தங்க நகைகள் வேண்டும் என்று கேட்டு இருக்கிறார். ஆனால், 4-வது மனைவியின் ஆசையை நிறைவேற்ற அவரிடம் பணம் இல்லையாம். இதனால், தனது 3-வது மனைவி நாகரத்னம்மாவின் நகைகளை திருடியிருக்கிறார்.

50 கிராம் தங்க நகைகள்: நாகரத்னம்மா வீட்டில் இருந்து 50 கிராம் தங்க நகைகளை திருடிய பக்தவச்சலம், அவற்றை தனது 4-வது மனைவி பத்மாவதிக்கு பரிசாக கொடுத்து இருக்கிறார். வீட்டில் இருந்த நகைகள் மாயமாகியிருப்பதை அறிந்த அவரது மகன் ஜீவன், இது குறித்து கேட்டு இருக்கிறார். அப்போதுதான், நகைகளை தனது தந்தை திருடியதும், அவற்றை 4-வது மனைவிக்கு பரிசாக கொடுத்ததும் தெரியவந்தது.

திருதிருவென முழித்தார்: இதனால், கோபம் அடைந்த நாகரத்னம்மா மற்றும் அவரது மகன் ஜீவன் ஆகியோர்,பத்மாவதியின் வீட்டிற்கு நேராக சென்றனர். அங்கு பக்தவச்சலம் படுத்து தூங்கிக் கொண்டு இருந்துள்ளார். வீட்டிற்குள் சென்ற நாகரத்னம்மா மற்றும் அவரது மகன் ஜீவன் இருவரும், பக்தவச்சலத்தை எழுப்பி இது பற்றி கேட்டு இருக்கிறார்கள். அப்போது திருதிருவென பக்தவச்சலம் முழிக்கவே,.. மகன் ஜீவனும் மனைவியும் சேர்ந்து கடுமையாக தாக்கி இருக்கிறார்கள்.

இணையத்தில் வீடியோ: அதிலும் தவறு செய்த தனது தந்தைக்கு, ஜீவன் அதிரடியான வைத்தியம் ஒன்றை கொடுத்தார். கண்மூடித்தனமாக தந்தையை தாக்கியதோடு அதை அங்கிருந்த உறவினர் ஒருவர் மூலம் தனது செல்போனில் வீடியோவாக எடுத்தார். தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. இதற்கிடையே கணவர் பக்தவச்சலத்தை சொந்தம் கொண்டாடி நாகரத்னம்மா மற்றும் பத்மாவதி ஆகியோர் தரப்பில் பீனியா காவல் நிலையத்திலும் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+