காங்கிரசுக்கு ஷாக்.. கர்நாடகாவை ஸ்வீப் செய்யும் பாஜக - ஜேடிஎஸ் கூட்டணி! 5 Exit polls ரிசல்ட் இதுதான்
பெங்களூர்: கர்நாடகா லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் கட்சியை விட பாஜக - ஜேடிஎஸ் கூட்டணி அதிக இடங்களை கைப்பற்றி மாநிலத்தை ஸ்வீப் செய்யும் என்று தேர்தலுக்கு பிந்தைய 5 முக்கிய கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கருத்து கணிப்பில் காங்கிரஸ் கட்சி ஒற்றை இலக்கத்தில் தான் தொகுதிகளை கைப்பற்றும் என கூறப்பட்டுள்ளது.
கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடக்கிறது. முதல்வராக சித்தராமையா உள்ளார். கர்நாடகா காங்கிரஸ் தலைவர் டிகே சிவக்குமார் துணை முதல்வராக உள்ளார். அதேபோல் பாஜக மாநில தலைவராக எடியூரப்பாவின் மகன் விஜயேந்திரா உள்ளார். ஜேடிஎஸ் கட்சியின் தலைவராக முன்னாள் முதல்வர் குமாரசாமி இருக்கிறார்.

கர்நாடகாவை பொறுத்தவரை மொத்தம் 28 லோக்சபா தொகுதிகள் உள்ளன. இதில் அனைத்து தொகுதிகளிலும் காங்கிரஸ் கட்சி தனித்து போட்டியிட்டுள்ளது. மாறாக பாஜகவும், ஜேடிஎஸ் கட்சியும் கூட்டணி அமைத்து போட்டியிட்டுள்ளது. 28 தொகுதிகளில் ஜேடிஎஸ் கட்சி 5 தொகுதிகளிலும், பாஜக 23 தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்தி உள்ளது.
கர்நாடகாவில் 2 கட்டங்களாக லோக்சபா தேர்தல் நடந்தது. ஏப்ரல் 25ல் முதற்கட்டமாக 14 தொகுதிகளுக்கும், அதன்பிறகு மே 7 ம் தேதி 2வது கட்டமாக 14 தொகுதிகளுக்கும் லோக்சபா தேர்தல் நடந்து முடிந்தது. இந்நிலையில் தான் நேற்று மாலையில் இந்தியா முழுவதும் தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு முடிவுகள் வெளியிடப்பட்டன.
கர்நாடகாவில் எந்த கட்சிக்கு எவ்வளவு தொகுதி கிடைக்கும் என்பது பற்றிய விபரமும் பல்வேறு கருத்து கணிப்புகள் மூலம் வெளியாகின. அதன்படி லோக்சபா தேர்தலில் பாஜக - ஜேடிஎஸ் கூட்டணி தான் மீண்டும் அதிக இடங்களை கைப்பற்றும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சிக்கு ஒற்றை இலக்கத்தில் தான் சீட் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி ஏபிபி நியூஸ் கருத்து கணிப்பில் பாஜக கூட்டணி 23 முதல் 25 தொகுதிகளிலும், காங்கிரஸ் கட்சி 3 முதல் 5 தொகுதிகளிலும் வெல்ல வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது. அதேபோல் இந்தியா நியூஸ் கருத்து கணிப்பில் பாஜக கூட்டணிக்கு 23 இடங்களும், காங்கிரஸ் கூட்டணிக்கு 5 இடங்களும் கிடைக்கும் எனவும், இந்தியா டுடே கருத்து கணிப்பில் பாஜகவுக்க 23 முதல் 25 இடங்களும் காங்கிரஸ் கட்சிக்கு 3 முதல் 5 இடங்களும் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்தியா டிவி கருத்து கணிப்பில் பாஜக கூட்டணிக்கு 19 முதல் 25 தொகுதிகளும், காங்கிரஸ் கட்சிக்கு 4 முதல் 8 தொகுதிகளும், ஜன் கீ பாத் கருத்து கணிப்பில் பாஜக கூட்டணிக்கு 21 முதல் 23 தொகுதிகளும், காங்கிரஸ் கட்சிக்கு 5 முதல் 7 தொகுதகிளும் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் கர்நாடகா லோக்சபா தேர்தலில் பாஜக - ஜேடிஎஸ் கூட்டணி தான் அதிக இடங்களை அள்ளும் என தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் கர்நாடகாவில் பாஜக - ஜேடிஎஸ் கூட்டணி அதிக இடங்களை கைப்பற்றினாலும் அது முந்தைய தேர்தலை ஒப்பிடும்போது பாஜகவுக்கு பின்னடைவாக தான் பார்க்கப்படுகிறது. ஏனென்றால் கடந்த 2019 லோக்சபா தேர்தலில் பாஜக தனித்து போட்டியிட்டு 25 இடங்களை கைப்பற்றியது. அந்த தேர்தலில் ஜேடிஎஸ் ஒரு இடத்திலும், காங்கிரஸ் ஒரு இடத்திலும், சுயேச்சை ஒரு இடத்திலும் வென்றனர். ஆனால் இந்த முறை பாஜக - ஜேடிஎஸ் கட்சியுடன் கூட்டணி வைத்தே அதிகபட்சமாக 25 இடங்கள் தான் வெல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாறாக முந்தைய தேர்தலை ஒப்பிடும்போது காங்கிரஸ் கட்சிக்கு கர்நாடகாவில் கூடுதல் இடங்கள் கிடைக்க வாய்ப்புள்ளது. அதிகபட்சமாக 8 இடங்கள் வரை காங்கிரஸ் வெல்லும் என கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் கூட தற்போது கடந்த சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் வென்று ஆட்சியை பிடித்த பிறகு குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.2 ஆயிரம், அரசு பஸ்களில் பெண்களுக்கு இலவச பயணம், ரேஷனில் 10 கிலோ அரிசி இலவசம் உள்ளிட்ட திட்டங்களை நிறைவேற்றியது.
இதன்மூலம் கர்நாடகாவில் அதிக இடங்கள் கிடைக்கும் என காங்கிரஸ் கட்சி நம்பியது. குறிப்பாக 10க்கும் அதிக இடங்களில் வெல்ல வேண்டும் என்ற முனைப்பில் அம்மாநில காங்கிரஸ் தலைவர் டிகே சிவக்குமார் செயல்பட்டார். ஆனால் இந்த கருத்து கணிப்பில் காங்கிரஸ் கட்சிக்கு அதிகபட்சமாக 8 இடங்கள் தான் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது அந்த கட்சியினருக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
-
அடித்து ஆடிய எடப்பாடி.. திமுக கேம்பில் எதிர்பார்க்காத குளறுபடி.. ஸ்டாலின் மனதில் என்ன இருக்கிறது?.. -
விலை பேசப்படும் காங்கிரஸ் சீட்டுகள்! ராகுல் காந்திக்கு பறந்த புகார்! -
பாஜக கூட ஓகே.. தவெகதான் பிரச்சனை.. செல்வப்பெருந்தகை சரமாரி குற்றச்சாட்டு -
வன்னியர் மட்டும் வாழக் கூடாதா? காங்கிரஸ் கட்சிக்குள் வெடித்த மோதல்! சீனியர் தலை போட்ட பரபர மீட்டிங்! -
கேரளா தலையெழுத்தை தீர்மானிக்கும் "அந்த" சில ஆயிரம் வாக்குகள்.. கரையேறுமா காங்கிரஸ்? -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்?












Click it and Unblock the Notifications