மாணவியுடன் ஹோட்டலில் ஜாலி.. கையும் களவுமாக பிடிபட்ட பாஜக பிரமுகர்.. பொய் புகாரால் அதிர்ந்த போலீஸ்!
பெங்களூரு: கர்நாடகாவில் பாஜக பிரமுகர் ஒருவர் மாணவியை ரகசியமாக ஹோட்டல் அறைக்கு அழைத்து சென்று உல்லாசமாக இருந்தபோது, கையும் களவுமாக சிக்கிக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகா மாநிலம் மாண்டியா பகுதியைச் சேர்ந்தவர் ஜெகன்நாத் ஷெட்டி. தங்க நகை வியாபாரியான இவர், பாஜகவில் இணைந்து செயல்பட்டு வருகிறார். இவர் கடந்த ஆகஸ்ட் 19ம் தேதி காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்திருந்தார்.

என்ன புகார்?
அந்தப் புகாரில், கடந்த பிப்ரவரி மாதம் 26ம் தேதி தான் மாண்டியா பேருந்தில் நிறுத்தத்தில் நின்றிருந்தேன். அப்போது அடையாளம் தெரியாத 4 மர்ம நபர்கள் என்னை காரில் கடத்தி சென்றனர். அதன்பின்னர் வலுக்கட்டாயமாக ஹோட்டலுக்கு அறையில் தள்ளினர்.
இதனைத்தொடர்ந்து பெண் ஒருவருடன் தன்னை ஆபாசமாக புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் எடுத்து, பணம் கேட்டு மிரட்டுவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்தப் புகார் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

4 பேர் கைது
தொடர்ந்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில், பாஜக பிரமுகர் ஜெகன்நாத் ஷெட்டியிடம் இருந்து ரூ.50 லட்சம் வாங்கிய பெண் உட்பட 4 பேர் குறித்த தகவல் தெரிய வந்துள்ளது. இதனைத்தொடர்ந்து, அந்தப் பெண் உட்பட 4 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

விசாரணையில் அதிர்ந்த போலீஸ்
இதனைத்தொடர்ந்து கைது செய்யப்பட்டவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில், பாஜக பிரமுகர் ஜெகன்நாத் ஷெட்டி பொய்யான புகார் அளித்தது தெரிய வந்தது. அதில், ஜெகன்நாத் ஷெட்டிக்கு கல்லூரி மாணவி ஒருவருடன் சமூக வலைதளம் மூலம் நட்பு ஏற்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து அவர்கள் இருவருக்கும் நெருக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் வார இறுதி நாட்களில் மாணவியை ஹோட்டலுக்கு அழைத்துள்ளார் பாஜக பிரமுகர்.

திடீரென புகுந்த கும்பல்
இதன்பின்னர் மாணவியுடன் ஹோட்டலில் தனி அறையில் உல்லாசமாக இருந்துள்ளார் பாஜக பிரமுகர் ஜெகன்நாத் ஷெட்டி. இதனிடையே திடீரென ஹோட்டல் அறைக்குள் வந்த 4 பேர் கொண்ட கும்பல், ஜெகன்நாத் ஷெட்டியை சரிமாரியாக தாக்கியதோடு, கேட்க முடியாத கொச்ச வார்த்தைகளால் ஆபாசமாக திட்டியுள்ளனர்.

பணம் கேட்டு மிரட்டல்
இதனைத்தொடர்ந்து மர்ம கும்பலிடம் தன்னை விட்டுவிடுமாறு பாஜக பிரமுகர் கெஞ்சியுள்ளார். இதனைத்தொடர்ந்து அந்த மர்ம கும்பல் ரூ.50 லட்சம் கேட்டு மிரட்டியுள்ளது. இதன்பின்னர் உடனடியாக ரூ.50 லட்சத்தை ஹோட்டல் அறைக்கே கொண்டு வந்து கொடுத்துள்ளார் பாஜக பிரமுகர். இதனால் மர்ம கும்பல் ஜெகன்நாத் ஷெட்டிக்கு தொடர்ந்து ரூ. 4 கோடி பணம் கேட்டு தொல்லை கொடுத்துள்ளது.

பொய் புகார்
இதனால் யாரிடமும் சொல்ல முடியாமல் மரியாதையை காப்பாற்றிக் கொள்வதற்காக காவல்துறையில் கடத்திச் சென்று புகைப்படம் எடுத்ததாக பொய் புகாரளித்துள்ளார். இதனைத்தொடர்ந்து ஜெகன்நாத் ஷெட்டியை மிரட்டியது தொடர்பாக சல்மா பானு என்ற பெண் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஹோட்டல் அறையில் ஜெகன்நாத் ஷெட்டியை மிரட்டியவர்களில் ஒருவர் மாணவியின் உறவினர் என்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.

அரசியல் போட்டி
இதில் கைது செய்யப்பட்ட பெண்ணான சல்மா பானு பாஜகவில் இருப்பவர். இதனால் இவர்கள் இருவருக்கும் இடையே அரசியல் ரீதியாக பிரச்னை இருந்துள்ளது. இதனால் ஜெகன்நாத் ஷெட்டியின் இமேஜை கெடுக்கவும், பணம் சம்பாதிக்கவும் சல்மான் பானு திட்டமிட்டு செயல்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதனிடையே ஹோட்டல் அறையில் மாணவியுடன் ஜெகன்நாத் ஷெட்டி சிக்கிய வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது.












Click it and Unblock the Notifications