அரசின் செயலின்மையை மறைக்க முஸ்லீம்கள் மீது பழி.. பெங்களூர் பாஜக எம்எபி தேஜஸ்விக்கு காங்கிரஸ் கண்டனம்

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்:பெங்களூர் மாநகராட்சி கொரோனா வார் ரூம் அலுவலகத்தில் நடைபெற்ற படுக்கை ஒதுக்கீடு முறைகேடுகள் தொடர்பாக முஸ்லீம் சமூகத்தை மட்டும் இழிவு செய்யும் வகையில் பாஜக பெங்களூர் தெற்கு தொகுதி எம்பி தேஜஸ்வி சூர்யா நடந்து கொண்ட விதத்திற்கு கண்டனங்கள் எழுந்துள்ளன.

கொரோனா நோயாளிகளுக்கு பெருநகர பெங்களூர் மாநகராட்சி மூலமாக மருத்துவமனைகளில் படுக்கை வசதி ஒதுக்கீடு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இதற்காக மண்டல வாரியாக வார் ரூம் என்ற பெயரில் அலுவலகம் அமைக்கப்பட்டுள்ளது.

BJP MP Tejasvi Surya communalising Bangalore corona bed scam

இங்கு பணியாற்றுபவர்கள் உண்மையான நோயாளிகளுக்கு அல்லது மிகவும் அவசரமாக படுக்கை தேவைப்படும் நோயாளிகளுக்கு படுக்கை ஒதுக்கீடு செய்யாமல் பணத்தை பெற்றுக்கொண்டு வேறு சாதாரண நோயாளிகளுக்கும் படுக்கை ஒதுக்கீடு செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதையடுத்து ஜெயநகர் பகுதியில் இயங்கும் பெங்களூர் தெற்கு மண்டல அலுவலகத்திற்கு தேஜஸ்வி சூர்யா மற்றும் பொம்மனஹள்ளி சட்டசபை தொகுதி எம்எல்ஏ சதீஷ் ரெட்டி ஆகிய இருவரும் நேரில் விசிட் செய்து இந்த முறைகேடுகளை அம்பலப்படுத்தினர். பெங்களூர் மாநகராட்சியில் பாஜக ஆளுகிறது. அப்படி இருக்கும்போது, ஆளுங்கட்சி எம்பி, எம்எல்ஏக்கள் இது போன்ற முறைகளை வெளியே கொண்டுவந்ததற்கு, காங்கிரஸ் கட்சி தலைவர் டிகே சிவகுமார் கூட பாராட்டு தெரிவித்து இருந்தார்.

BJP MP Tejasvi Surya communalising Bangalore corona bed scam

ஆனால், நல்லது செய்வது போல நடந்துகொண்ட தேஜஸ்வி சூர்யா, கூடவே, இந்த விஷயத்தில் மத பிரச்சினையை கிளப்பி விட்டுள்ளார். அதாவது வார் ரூமில் பணியாற்றும் 17 முஸ்லிம்கள் பெயரை மட்டும் குறிப்பிட்டு கொண்டு இது மாநகராட்சி கட்டுப்பாட்டு அறையா அல்லது மதரசாவா என்று அதிகாரிகளை நோக்கி அவர் கேள்வி எழுப்பிய வீடியோ வைரலாக சுற்றிவருகிறது.

17 முஸ்லிம் அதிகாரிகள் பெயரை மட்டும் குறிப்பிட்டு, அவர்கள் மட்டும்தான் இதில் முறைகேட்டில் ஈடுபட்டது போன்ற ஒரு தோற்றத்தை தேஜஸ்வி சூர்யா ஏற்படுத்தியுள்ளார். இதன் மூலம் இஸ்லாமிய மதத்தை சேர்ந்தவர்கள் முறைகேட்டில் ஈடுபடுவது போல ஒட்டுமொத்தமான ஒரு தோற்றம் உருவாக்கப்பட்டுள்ளது. இது வலதுசாரியினரால் சமூக வலைத்தளங்களில் அதிகமாக பரப்பப்பட்டு வருகிறது.

BJP MP Tejasvi Surya communalising Bangalore corona bed scam

இந்த நிலையில்தான் பெங்களூர் சிவாஜி நகர் சட்டசபை தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ ரிஸ்வான் அர்ஷத், தேஜஸ்வி சூர்யாவின் நடவடிக்கையை கண்டித்து உள்ளார். தனது ட்விட்டர் பக்கத்தில் இதுபற்றி அவர் கூறுகையில் , உங்களது பாஜக அரசு மக்களுக்கு எந்த நல்லதையும் செய்ய முடியாவிட்டாலும் குறைந்தபட்சம் மத விஷ விதைகளை தூவாமல் இருங்கள். மதத்தை முன்னிறுத்தி உங்களது செயலின்மையை மறைக்க முற்படாதீர்கள்.

212 பேர் வார் ரூமில் பணியாற்றுகிறார்கள். தேஜஸ்வி சூர்யா மற்றும் அவரது கூட்டத்தை சேர்ந்தவர்கள் 17 முஸ்லிம் பெயர்களை மட்டும் இதில் குறிப்பிட்டுச் சொல்லியுள்ளனர். இது மதராசாவா என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.

உடனடியாக பாஜக சமூகவலைத்தள குழுவினர் ஒட்டுமொத்த முஸ்லிம் சமுதாயத்தினர் மீது பழி சுமத்தி செய்திகளை பரப்ப ஆரம்பித்தனர். இவரது நோக்கம் இந்த ஊழல் முறைகேடுகளை வெளியே கொண்டு வருவது கிடையாது. முஸ்லிம் சமுதாயத்திற்கு குறிவைத்து கெட்டவர்களாக சித்தரிக்க வேண்டும் என்பதுதான் இதன் பின்னணியில் இருக்கிறது.

BJP MP Tejasvi Surya communalising Bangalore corona bed scam

முன்கள பணியாளர்களாக எத்தனையோ முஸ்லிம்கள் வேலை செய்து வருகிறார்கள். மருத்துவர்கள் முதல், மருத்துவ பணியாளர்கள், சமூக அமைப்புகள் உள்ளிட்டவற்றில் 24 மணி நேரமும் இஸ்லாமியர்களும், இந்துக்களும் , கிறிஸ்தவர்களும், சீக்கிய சமுதாயத்தினரும் தோளோடு தோள் நின்று பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள். எனவே உங்களது மத துவேஷங்கள் வேறு எங்காவது பரப்புங்கள்.

மக்கள் ஆக்ஸிஜன் கிடைக்காமல் ஐசியு படுக்கை கிடைக்காமல் தெருக்களில் செத்துக் கொண்டிருக்கும் போது ஒட்டுமொத்த பாஜகவும் தேர்தலில் மும்மரமாக இருந்தீர்கள். கர்நாடக மக்களுக்கு நீங்கள் எதற்காக இப்படி ஒரு நாடகம் ஆடுகிறீர்கள் என்பது தெரியும். உங்களது மா மன்னர் மீது எந்த பழியும் வந்து விடக்கூடாது. அத்தனையும் வேறு வேறு ஒரு மீது சுமத்தப்பட்ட வேண்டும் என்பதற்காக இந்த நாடகத்தை நீங்கள் ஆடுகிறீர்கள் என்பது மக்களுக்கு தெரியும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+