பாஜக VS காங்கிரஸ்.. கர்நாடகாவில் ஆட்சியை பிடிப்பது யார்? டிவி 9-சிவோட்டர் சர்வே ரிசல்ட் இதுதான்!
பெங்களூர்: கர்நாடகா சட்டசபை தேர்தலில் இந்த முறை எந்த கட்சி ஆட்சியை பிடிக்கும் என்ற கேள்விக்கு மக்கள் பதிலளித்துள்ளனர். இதுதொடர்பாக டிவி 9 கன்னடா மற்றும் சி வோட்டர் இணைந்து நடத்திய கருத்து கணிப்பின் முடிவு தற்போது வெளியாகி உள்ளது. அதன் விபரம் வருமாறு:
கர்நாடகா சட்டசபை தேர்தல் மே மாதம் 10ம் தேதி நடைபெற உள்ளது. கர்நாடகாவில் மொத்தம் 224 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இங்கு ஆட்சியை பிடிக்க வேண்டும் என்றால் ஒரு கட்சி 113 இடங்களில் வெற்றி பெற வேண்டும். அப்போது தான் தனி மெஜாரிட்டியுடன் அக்கட்சி ஆட்சியை பிடிக்கும்.

இந்த தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்கும் முனைப்பில் காங்கிரஸ் கட்சி செயல்பட்டு வருகிறது. மாறாக தற்பாதைய ஆட்சியை அப்படியே தக்க வைக்க வேண்டும் என பாஜக வியூகம் வகுத்து செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில் தான் தற்போது டிவி 9 கன்னடா மற்றும் சி-வோட்டர் இணைந்து நடத்திய கருத்து கணிப்பு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளது. இந்த கருத்து கணிப்பின்படி மாநிலத்தில் காங்கிரஸ் தான் ஆட்சியை பிடிக்கும் என அதிகமானவர்கள் தெரிவித்துள்ளனர். அதன்படி கருத்து கணிப்பில் பங்கேற்றவர்களில் 37.8 சதவீதம் பேர் நடைபெற உள்ள தேர்தலில் காங்கிரஸ் கட்சி தான் வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்கும் என தெரிவித்துள்ளனர்.
மாறாக பாஜக தான் தற்போதைய ஆட்சியை தக்கவைக்கும் என 36 சதவீத மக்கள் தெரிவித்துள்ளனர். இதன்மூலம் காங்கிரஸ் கட்சியை விட பாஜகவுக்கு ஆதரவு என்பது 1.8 சதவீதம் குறைவாக உள்ளது. இதன்மூலம் கருத்து கணிப்பில் பங்கேற்றவர்களில் அதிகமானவர்களின் எதிர்பார்ப்பு என்பது காங்கிரஸ் கட்சிக்கு சாதகமாகவே உள்ளது.
மேலும் இந்த கருத்து கணிப்பில் 13 சதவீதம் பேர் ஜேடிஎஸ் கட்சி ஆட்சிக்கு வரும் என தெரிவித்துள்ளனர். ஆனால் ஜேடிஎஸ் கட்சியை பொறுத்தமட்டில் அங்கு அதிகபட்சமாக 35 இடங்களில் மட்டுமே ஜெயிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இதுதவிர காங்கிரஸ் +ஜேடிஎஸ் கட்சிகள் கூட்டணி அமைத்து ஆட்சியை கைப்பற்றும் என 6.2 சதவீதம் பேரும், ஜேடிஎஸ் மற்றும் பாஜக இணைந்து மாநிலத்தில் ஆட்சியை பிடிக்கும் என 7.1 சதவீதம் பேரும் தெரிவித்துள்ளனர்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications