பெங்களூரு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

நேரத்தை வேஸ்ட் பண்ணாதீங்க.. உடனே பதவி விலகனும்.. குமாரசாமியை நெருக்கும் எடியூரப்பா

Google Oneindia Tamil News

Recommended Video

    கலங்கி நிற்கும் குமாரசாமி...கர்நாடகாவில் திடீர் திருப்பம்

    பெங்களூர்: கர்நாடக சட்டசபையில் காங்கிரஸ்-மஜத அரசு பெரும்பான்மையையை இழந்துவிட்டது என்பதால், அதிக நேரத்தை வீணாக்காமல் குமாரசாமி தனது பதவியில் இருந்து விலக வேண்டும் என்று கர்நாடக பாஜக தலைவர் பி.எஸ். எடியூரப்பா வலியுறுத்தினார்.

    காங்கிரஸ் மற்றும் மஜதவை சேர்ந்த 15 க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏக்கள் ஏற்கனவே ராஜினாமா செய்துள்ளனர். முதல்வர் குமாரசாமி பெரும்பான்மையை இழந்துவிட்டார். எனவே, முதல்வர் உடனடியாக, ராஜினாமா செய்ய வேண்டும்.

    BS Yeddyurappa insist Kumaraswamy to step down from CM post

    "மஜத மற்றும் காங்கிரஸைச் சேர்ந்த 15 க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்துள்ளதால் குமாரசாமி உடனடியாக ராஜினாமா செய்ய அறிவுறுத்துகிறேன். பாஜகவை ஆதரிப்பதாக ஏற்கனவே 2 சுயேச்சை எம்எல்ஏக்கள் ஆளுநரை சந்தித்து அறிவுறுத்தியுள்ளனர். எனவே முதல்வர் பெரும்பான்மையை காட்ட வேண்டிய நேரம் இது. நாளை, சட்டசபை அலுவல் ஆய்வு குழு கூட்டத்தில், குமாரசாமியை சந்திக்க உள்ளேன். அப்போது நம்பிக்கை தீர்மானத்தை எதிர்கொள்ளுங்கள் அல்லது ராஜினாமா செய்யுங்கள் என அறிவுறுத்துவேன்," என்று அவர் மேலும் கூறினார்.

    நாளை கர்நாடகா காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் கூட்டம்.. அதிருப்தி எம்எல்ஏக்களுக்கும் காங். மேலிடம் அழைப்பு நாளை கர்நாடகா காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் கூட்டம்.. அதிருப்தி எம்எல்ஏக்களுக்கும் காங். மேலிடம் அழைப்பு

    கர்நாடக சட்டமன்றத்தில் தற்போது மழைக்கால அமர்வு நடந்து வருகிறது. கடந்த வெள்ளிக்கிழமை இதில் பங்கேற்றபோது, குமாரசாமி, தான் நம்பிக்கை வாக்கெடுப்பு கோரப்போவதாக அறிவித்தார்.

    இந்த நிலையில் மாநிலத்தில் நிலவும் அரசியல் சிக்கல் குறித்து ஆலோசிக்க, காங்கிரஸ் நாளை, திங்களன்று சட்டமன்றக் குழு கூட்டத்தை கூட்டியுள்ளது.

    English summary
    Karnataka BJP leader for Karnataka Yeddyurappa has asked Kumaraswamy to step down from his post as he has lost a majority in the Karnataka Assembly.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X