கர்நாடகாவுக்கு சத்தமே இல்லாமல் அடித்த ஜாக்பாட்.. பட்ஜெட் முடிந்த கையோடு வந்த மெகா இன்ப செய்தி!
பெங்களூர்: 16வது நிதிக் குழுவின் புதிய வரிப் பங்கீட்டு பார்முலாவில், காங்கிரஸ் ஆளும் கர்நாடகாவுக்குத் தான் மிகப் பெரிய லாபம் கிடைக்கும். அதேநேரம் பாஜக ஆளும் மத்தியப் பிரதேசம் அதிக இழப்பைச் சந்திக்கும். பை இந்த பார்முலா மூலம் தோராயமாக எந்த மாநிலத்திற்கு எவ்வளவு வருவாய் கிடைக்கும் என்பது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.
நமது நாட்டில் மத்திய அரசால் வசூலிக்கப்படும் வரியை, மத்திய அரசு மற்றும் மாநில அரசுகள் இடையே எப்படிப் பகிர்ந்து அளிக்க வேண்டும் என்பதை அரசியலமைப்பு அமைப்பான நிதி ஆணையம் பரிந்துரைக்கிறது. மத்திய அரசின் கீழ் இந்த நிதி ஆணையம் வந்தாலும் கூட இது ஒரு தன்னாட்சி பெற்ற அமைப்பாகும். இதனால் நிதிப் பகிர்வு குறித்து இந்த அமைப்பு சுதந்திரமான முடிவுகளை எடுக்கும்.

நிதி ஆயோக்
நிதி ஆயோக்கின் முன்னாள் துணைத் தலைவர் அரவிந்த் பனகாரியா தலைமையில் 2023-ல் அமைக்கப்பட்ட இக்குழு, அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுடன் கலந்தாலோசித்த பின், 2025 நவம்பரில் தனது அறிக்கையைக் குடியரசுத் தலைவரிடம் சமர்ப்பித்தது. இதில் பல மாநிலங்கள் அதிக வரிப் பங்கைக் கோரியிருந்தன.
புதிய பார்முலா
இந்த புதிய பார்முலா கீழ் கர்நாடகாவுக்கே அதிக வரிப் பகிர்வு கிடைக்கும். அதன்படி 2026-31 காலகட்டத்திற்கு கர்நாடகாவின் வரிப் பங்கீடு 3.65%ல் இருந்து 4.13%ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.. இதனால் அம்மாநிலத்திற்குக் கூடுதலாக ரூ.7,387 கோடி கிடைக்கும். இதன் மூலம் கர்நாடகாவின் ஒட்டுமொத்த நிதி ஒதுக்கீடு ரூ. 55,663 கோடியிலிருந்து ரூ. 63,050 கோடியாக உயரும்.
வரிப் பங்கீட்டு பார்முலாவில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் பங்களிப்புக்கு 10 சதவீதம் வரை தரப்பட்டதே இந்த மாற்றத்திற்கு முக்கிய காரணமாகும். ஒரு மாநிலத்தின் பொருளாதாரச் செயல்திறனை அளவிட இது ஒரு அளவுகோலாகப் பயன்படுத்தப்பட்டது. உற்பத்தி, சேவைகள் மற்றும் தொழில்நுட்பத் துறைகளின் பங்களிப்பால் கர்நாடகா அதிகப் பலன் பெறுவது குறிப்பிடத்தக்கது..
கேரளா
கர்நாடக தொடர்ந்து கேரளாவுக்கு அதிகத் தொகை செல்லும். அதன் ஒதுக்கீடு 1.93%ல் இருந்து 2.38 சதவீதமாக உயர்ந்துள்ளது. இதன் மூலம் வரிப் பங்கீடு ரூ. 6,975 கோடியாக அதிகரித்துள்ளது. அதேபோல குஜராத் (ரூ. 4,228 கோடி) மற்றும் ஹரியானா (ரூ. 4,090 கோடி) ஆகிய மாநிலங்களும் அதிகத் தனிநபர் வருமானம் மற்றும் மொத்த உள்நாட்டு உற்பத்தியால் பலனடைந்துள்ளது.
மறுபுறம் பாஜக ஆளும் மத்தியப் பிரதேசத்திற்கு இதில் நஷ்டம்.. அதன் நிதி ஒதுக்கீடு ரூ. 7,677 கோடி குறைந்து, ரூ. 1.12 லட்சம் கோடியாக ஆனது. மத்திய வரிப் பங்கீட்டில் அதன் பங்கு 7.85 சதவீதத்திலிருந்து 7.35 சதவீதமாகக் குறைந்தது. பல துறைகளில் பிற மாநிலங்களை விட சிறப்பாகச் செயல்படாததே இதற்குக் காரணம்.
மாநிலங்களுக்கான வரிப் பங்கீடு
2026-31 காலகட்டத்திற்கு மாநிலங்களுக்கான வரிப் பங்கீட்டை 41 சதவீதமாகவே மத்திய அரசு தக்கவைத்துக்கொள்ளும் என நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது பட்ஜெட் உரையில் அறிவித்தார். நிதி பங்கீட்டை உயர்த்த வேண்டும் எனத் தமிழ்நாடு தொடங்கி பல்வேறு மாநிலங்களும் கோரிக்கை விடுத்தன. இருந்த போதிலும் நிதிப் பங்கீடு 41%ஆகவே தொடரும் என மத்திய அரசு முடிவெடுத்துள்ளது.
இந்த முடிவைப் பல்வேறு எதிர்க்கட்சித் தலைவர்களும் கடுமையாக விமர்சித்துள்ளனர். இது குறித்து கர்நாடகா முதல்வர் சித்தராமையா, "மாநிலங்களின் நிதிப் பொறுப்புகள் அதிகரித்து வருகிறது. அதைக் கருத்தில் கொள்ளாமல், 41 சதவீதப் பங்கீட்டையே மத்திய அரசு தொடர முடிவு செய்தது ஏமாற்றம் அளிக்கிறது. சதவீத அடிப்படையில் பங்கு அதிகமாகத் தெரிந்தாலும், செஸ் மற்றும் கூடுதல் வரிகளை மத்திய அரசு அதிகம் வசூலிக்கிறது. அந்த வருவாயை மாநிலங்கள் உடன் மத்திய அரசு பகிர்ந்து கொள்ளாது" என்றார்.
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications