அடேங்கப்பா.. இ செல்லானுக்கு இப்படியா.. அவார்டு ரேஞ்சுக்கு போஸ் கொடுத்த டிரைவர்.. நெட்டிசன்கள் கலாய்
பெங்களூர்: பெங்களூரில் போக்குவரத்து விதி மீறலில் ஈடுபட்டு மாட்டிக்கொண்ட பஸ் டிரைவர் ஒருவர், போலீசாரிடம் அபராதத் தொகையை விருது வாங்குவது போல கம்பீரமாக நின்று போஸ் கொடுப்பது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. நெட்டிசன்கள் ஜாலியாக கலாய்த்து பதிவிட்டு வருகின்றனர்.
இந்தியாவில் சாலை விபத்துக்களுக்கு பெரிதும் காரணமாக இருப்பது சாலை விதி மீறல்கள்தான். சாலை விதிகளை பின்பற்றாமல் அதிவேகத்தில் வாகனத்தை ஓட்டுவது, பார்க்கிங் செய்யக்கூடாத இடத்தில் வண்டியை பார்க்கிங் செய்வது என வாகன ஓட்டிகள் செய்யும் சின்ன சின்ன விதி மீறல்கள் கூட பெரும் உயிர் சேதத்துக்கு வழி வகுப்பதாக அமைகிறது. இதனால், சாலை விதி மீறல்களில் ஈடுபடும் வாகனங்களை கண்காணித்து அவ்வப்போது போக்குவரத்து போலீசாரும் அபராதம் போடுகின்றனர்.

தற்போது மோட்டார் வாகன சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்பட்டது. சிறிய விதி மீறல்களுக்கு கூட ஆயிரக்கணக்கில் அபராதம் விதிக்கப்படுகிறது. ஆனாலும் இதையெல்லாம் பொருட்படுத்தாமல் விதி மீறல்கள் இன்னும் கூட சர்வ சாதாரணமாக நடக்கத்தான் செய்கிறது. சென்னை, பெங்களூர் போன்ற பெரு நகரங்களில் எல்லாம் இத்தகைய சாலை விதி மீறல்களை சர்வ சாதாரணமாக காணமுடிகிறது.
இந்த விதி மீறல்களில் ஈடுபடும் வாகனங்களை போக்குவரத்து போலீசார் பிடிக்க முயற்சித்தால் அவர்களுக்கு தண்ணி காட்டி விட்டு ஓடும் வாகன ஓட்டிகளைத்தான் பெரும்பாலும் பார்க்க முடியும். இன்னும் சிலரோ போலீசிடம் அபராதம் கட்ட பயந்து வந்த வழியே திரும்பி கூட செல்வதுண்டு.. இப்படியான காட்சிகளை எல்லாம் சாலைகளில் போலீஸ் செக்கிங் நடந்தால் அடிக்கடி பார்க்க முடியும்.
ஆனால், கர்நாடக மாநிலம் பெங்களூரில் ஒரு டிரைவர் ஒருவர் அபராத தொகை விதிக்கப்பட்டதற்கான ரசீதை (challan) ஏதோ அவார்டு வாங்குவது போல போஸ் கொடுப்பது இணையத்தில் டிரெண்ட் ஆகி வருகிறது. இது குறித்த விவரம் வருமாறு:- போக்குவரத்து விதி மீறல்களில் ஈடுபடும் வாகனங்களை இப்போது சக வாகன ஓட்டிகளே, புகைப்படம் எடுத்து போலீசாருக்கு அலார்ட் செய்வதை காண முடிகிறது.
சமூக வலைதளங்கள் வாயிலாகவே இப்படி போக்குவரத்து போலீசாருக்கு டேக் செய்து விதி மீறல்களில் ஈடுபடும் வாகனங்களின் எண்ணையும் குறிப்பிட்டு நெட்டிசன்கள் சிலர் பதிவிடுவதை முடியும். அந்த வகையில் பெங்களூரில் உள்ள குருதச்சர்பாலையா மெட்ரோ ரயில் நிலைய சாலையில் ஸ்கூல் பஸ் ஒன்று யூ டேர்ன் எடுத்தது. இத்தனைக்கும் அந்த சாலையில் யூ டேர்ன் எடுக்க அனுமதி கிடையாது.
ஆனாலும் பள்ளி மாணவர்களை பேருந்தில் உட்கார வைத்துக் கொண்டு ஆபத்தான முறையில் யூ டேர்ன் எடுத்த பஸ்சை பார்த்த சில வாகன ஓட்டிகள் வணியின் எண்ணுடன் போக்குவரத்து போலீசாருக்கு சமூக வலைத்தளங்கள் வாயிலாக அலார்ட் செய்தனர். மாணவர்களின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் விதமாக அலட்சியாமக செயல்படும் வாகன ஓட்டிக்கு கடுமையான அபராதம் விதிக்க வேண்டும் என்று நெட்டிசன்கள் பதிவிட்டு இருந்தனர்.
இதேபோல, மேலும் சில நெட்டிசன்களும் இது தொடர்பாக போக்குவரத்து போலீசாருக்கு உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினர். சமூக வலைத்தளங்களில் ஸ்கூல் பஸ் விதிமீறலில் ஈடுபடும் வீடியோ வேகமாக பரவியதால், பெங்களூர் போலீசாரும் அந்த பஸ்சின் டிரைவரை பிடித்து அபராதம் போட்டனர். இதில் தான் ஹைலைட்டே..ஏனென்றால் அபராதம் விதிகும் செல்லானை வாங்கிய டிரைவர் ஏதோ அவார்டு வாங்கிய ரேஞ்சுக்கு போஸ் கொடுத்து இருந்தார். போக்குவரத்து போலீசும் சளைக்காமல் போஸ் கொடுத்து இருந்தனர்.
இந்த புகைப்படம்தான் தான் தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. நெட்டிசன்கள் பலரும் தங்களுக்கே உரிய பாணியில் கலாய்த்து வருகின்றனர். எதையோ சாதித்து விட்டது போல அல்லவா.. அபராத செல்லானை அந்த டிரைவர் வாங்குகிறார் என ஒரு நெட்டிசன் பதிவிட்டார். மற்றொரு நெட்டிசன் கூறுகையில், புது வாகனம் வாங்கும் போது கொடுப்பது போலவே போஸ் கொடுக்கிறார் என ஸ்மைலியுடன் பதிவிட்டு கலாய்த்து உள்ளார்.
-
டிகே சிவக்குமாருக்கு அடுத்த ஷாக்.. ராமலிங்க ரெட்டியை தொடர்ந்து இன்னொரு அமைச்சர் ராஜினாமா? கர்நாடகாவில் குழப்பம் -
பெங்களூர் நகர வளர்ச்சி துறை அமைச்சர் யார் தெரியுமா? கர்நாடக அமைச்சர்களின் இலாகா விவரம் -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ!












Click it and Unblock the Notifications