பெங்களூர் குடிநீர் வாரியம் உலக சாதனை! பின்னணியில் தமிழ் ஐஏஎஸ் அதிகாரி! பாராட்டிய துணை முதல்வர்
பெங்களூர்: பெங்களூரில் வசிக்கும் மக்களுக்குக் குடிநீர் வழங்குவதை உறுதி செய்ய அம்மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. குறிப்பாகப் பெங்களூர் குடிநீர் வடிகால் வாரியத்தின் தலைவரான தமிழகத்தைச் சேர்ந்த ராம்பிரசாத் மனோகர் ஐஏஎஸ், இதற்காக பல்வேறு திட்டங்களை நடத்தி வருகிறார். இதற்கிடையே இப்போது கர்நாடக அரசின் முன்னெடுப்பிற்கு கின்னஸ் உலக சாதனை அங்கீகாரமும் கிடைத்துள்ளது.
பெங்களூர் குடிநீர் வடிகால் வாரியம் (BWSSB), குடிநீர் சேமிப்பு விழிப்புணர்வுக்காக நடத்திய இயக்கத்திற்காக கின்னஸ் உலக சாதனை படைத்தது. இந்த கின்னஸ் சாதனைக்கான சான்றிதழைத் துணை முதல்வர் டி.கே. சிவக்குமார் பெற்றார். பெங்களூரில் உள்ள 2 கோடி மக்களுக்குத் தண்ணீர் வழங்கும் திட்டங்களான முன்னெடுப்பிற்கு இந்த சாதனை ஊக்கமளிப்பதாக இருக்கும் என்று டி.கே. சிவக்குமார் தெரிவித்தார்.

கின்னஸ் சாதனை
பெங்களூரில் உள்ள தனியார் ஹோட்டலில் நடைபெற்ற விழாவில், கின்னஸ் உலக சாதனை நடுவர் ஸ்வப்னில் தங்கரிகர், டி.கே. சிவக்குமாருக்கு கின்னஸ் உலக சாதனைக்கான சான்றிதழை வழங்கினார். அப்போது பேசிய சிவக்குமார், "நாம் தண்ணீரைச் சேமிக்க வேண்டும். இது குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த BWSSB சார்பில் ஒரு வார காலத்துக்கு உறுதிமொழி ஏற்கும் இயக்கத்தை நடத்தினோம். இதில் 5,33,642 பேர் உறுதிமொழி ஏற்றனர். இதன் மூலம் இது கின்னஸ் சாதனை படைத்துள்ளோம்.
ராம் பிரசாத் மனோகர் தலைமையில்
டெல்லி உள்ளிட்ட பிற நகரங்களில் குடிநீருக்கும், அன்றாட பயன்பாட்டுக்கும் நீர் இணைப்புகள் தனித்தனியாக உள்ளன. ஆனால், பெங்களூரில் குடிப்பதற்கும், வாகனம் கழுவுவதற்கும், செடிகளுக்குத் தண்ணீர் ஊற்றுவதற்கும் குடிநீரே பயன்படுத்தப்படுகிறது. பெங்களூரில் சுமார் 35% பேர் குடிநீர் கட்டணம் செலுத்துவதில்லை. இருப்பினும், வாரியம் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. பெங்களூரில் வசிக்கும் 2 கோடி பேருக்குக் குடிநீர் வழங்கும் திட்டத்தை உருவாக்கி வருகிறோம். ராம் பிரசாத் மனோகர் தலைமையில் புதிய திட்டங்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன.
பெங்களூர் திட்டமிடப்பட்ட நகரம் இல்லை. இங்கு மக்கள் தொகை அதிகமாக உள்ளது. எனவே, கிரேட்டர் பெங்களூரை உருவாக்கி, இன்னும் பல பகுதிகளைப் பெங்களூரின் எல்லைக்குள் சேர்க்கத் திட்டமிட்டுள்ளோம். பெங்களூர் எல்லைக்குள் எத்தனை மாநகராட்சிகள் அமைக்க வேண்டும் என்பதை விவாதித்து வருகிறோம். தற்போது பெங்களூரில் 1.40 கோடி மக்கள் வசிக்கின்றனர். நகரத்துக்கு வெளியே ஆனேக்கல் மற்றும் பிற பகுதிகளில் 50 லட்சம் பேர் வசிக்கின்றனர். கிரேட்டர் பெங்களூரில் உடன் புதிதாக இணைக்கப்பட்ட 110 கிராமங்களுக்குக் குடிநீர் வழங்கி வருகிறோம்" என்றார்.

ராம் பிரசாத் மனோகர்
பெங்களூர் குடிநீர் வடிகால் வாரியத்தின் தலைவர் டாக்டர் ராம் பிரசாத் மனோகர் பேசுகையில், "உலக தண்ணீர் தினத்தைச் சிறப்பாகக் கொண்டாடும் வகையில் காவேரி ஆரத்தி நிகழ்ச்சியை நடத்தும்படி துணை முதல்வர் டி.கே. சிவக்குமார் அறிவுறுத்தினார். அதன் அடிப்படையில் நீரைச் சேமித்து பெங்களூரை வளர்ப்போம் என்ற முழக்கத்துடன் உறுதிமொழி ஏற்கும் இயக்கத்தைத் தொடங்கினோம்.
ஒரு வார காலம் எங்கள் ஊழியர்கள் பெங்களூர் நகரத்தின் ஒவ்வொரு வீட்டுக்கும் சென்று தண்ணீர் சேமிப்பின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தனர். ஒரு வாரத்தில் 5,33,642 உறுதிமொழிகள் பெறப்பட்டு, இன்று கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளோம். இதன் மூலம் பெங்களூர் குடிநீர் வடிகால் வாரியத்தின் பெயரைச் சர்வதேச அரங்கில் கொண்டு சென்றுள்ளோம்" என்றார்.
இந்த நிகழ்ச்சியில் குடிநீர் வாரியத்தின் தலைவர் டாக்டர் ராம் பிரசாத் மனோகர், எஃப்.கே.சி.சி.ஐ தலைவர் எம்.ஜி. பாலகிருஷ்ணா, காசியா தலைவர் எம்.ஜி. ராஜகோபால், தலைமை பொறியாளர் சுரேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
பெங்களூரில் கடந்த 10 ஆண்டுகளாகக் குடிநீர் கட்டணம் உயர்த்தப்படவில்லை. இதனால் பெங்களூர் குடிநீர் வடிகால் வாரியத்திற்கு ஆண்டுக்கு 400-500 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்படுகிறது. சிலர் ஆண்டுக்கு 1000 கோடி ரூபாய் வரை கூட நஷ்டம் ஏற்படுவதாக மதிப்பிடுகிறார்கள்.
முன்னதாக, இது குறித்துப் பேசிய டி.கே. சிவக்குமார், "நான் பொறுப்பேற்ற பிறகு குடிநீர் கட்டணத்தை உயர்த்த அனுமதி அளித்தேன். விமர்சனங்கள் வருவது இயல்பு தான. விமர்சனங்கள் வந்தாலும், தேவையான பணிகள் தொடரும். முதலமைச்சருடன் கலந்தாலோசித்து இந்த முடிவை எடுத்துள்ளேன். இந்த கட்டண உயர்வு மூலம் ஆண்டுக்கு 500 கோடி ரூபாய் வரை நஷ்டத்தைக் குறைக்க முடியும். நஷ்டத்தை முழுமையாக நிறுத்த முடியாவிட்டாலும், கட்டுப்படுத்த முடியும். போக்குவரத்துத் துறையைப் போலவே, குடிநீர் கட்டணத்தை மாற்றியமைக்க முடிவு செய்துள்ளோம்.
கழிவுநீரைச் சுத்திகரிக்கத் திட்டம்
மேலும், பெங்களூர் குடிநீர் வாரிய ஊழியர்கள் கடினமாக உழைக்கிறார்கள். காவேரி 5வது கட்ட குடிநீர் திட்டம் அமல்படுத்துவதில் பல தடைகள் இருந்தன. அவற்றை எல்லாம் நீக்கி அந்த திட்டம் செயல்படுத்தப்பட்டது. புதிய இணைப்புகள் வழங்குவதில் இருந்த சிக்கல்கள் நீக்கப்பட்டன. சஞ்சாரி காவேரி திட்டம் மூலம் மக்களுக்குக் குறைந்த விலையில் சுத்தமான குடிநீர் வழங்கப்படுகிறது. பெங்களூரில் கழிவுநீர் பிரச்சினையும் உள்ளது. கழிவுநீரை அப்படியே நல்ல ஏரிகளில் விடுகிறார்கள். இதைத் தடுக்க அதைச் சுத்திகரித்து மறுசுழற்சி செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது.
காவேரி ஆரத்தியின் நன்மைகள் குறித்து விவசாயிகளுக்குத் தெரியவில்லை. காவேரி ஆரத்தியை நாங்கள் தொடங்கி இருக்கிறோம். கே.ஆர்.எஸ் அருகே காவேரி ஆரத்தி நடத்தத் திட்டமிட்டுள்ளோம். இதற்காகப் பெங்களூர் குடிநீர் வாரிய தலைவர் ராம் பிரசாத் மனோகர் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் சிறந்த திட்டத்தை உருவாக்கியுள்ளனர். இதன் மூலம் அந்தப் பகுதியில் 1500 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.
காவேரி ஆரத்தி
காவேரி ஆரத்தி குறித்து உள்ள சந்தேகங்களைத் தீர்க்க மாவட்ட அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளேன். தண்ணீருக்கு ஜாதி, மதம், மொழி இல்லை. தண்ணீர் அனைவருக்கும் தேவை. குடிப்பதற்கும், விவசாயத்துக்கும், தொழிலுக்கும் தண்ணீர் அவசியம். நல்ல மழை பெய்யப் பிரார்த்தனை செய்வதில் என்ன தவறு? காவேரி நிரம்பி வழியாவிட்டால் நாம் பல பிரச்சினைகளைச் சந்திக்க நேரிடும்.
சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து பள்ளி குழந்தைகளிடையேயும் விழிப்புணர்வை ஏற்படுத்த நிகழ்ச்சி நடத்தினோம். குழந்தைகளுக்குச் செடி கொடுத்து, அதை மரமாக்கும் பொறுப்பைக் கொடுத்துள்ளோம். சுற்றுச்சூழலைப் பாதுகாக்கப் பல திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன" என்றார்.
-
தெறித்து ஓடும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்! பாதாளத்திற்கே போகும் இந்திய பங்குச்சந்தைகள்.. 3 காரணங்கள் -
துரந்தர் இல்லை.. துரோகி.. இந்திய விமான படை வீரர் அதிரடி கைது! பாகிஸ்தானுக்காக உளவு பார்த்தது அம்பலம் -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி












Click it and Unblock the Notifications