நாளை காவிரி பந்த்: தமிழ்நாடு சரக்கு வாகனங்கள், இருசக்கர வாகனங்கள் நுழைய கர்நாடகா அதிரடி தடை!
பெங்களூர்: காவிரி பிரச்சனையில் நாளை கர்நாடகா தழுவிய பந்த் போராட்டம் நடைபெறுவதால் தமிழ்நாட்டு வாகனங்கள் அம்மாநிலத்துக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது.
காவிரியில் தமிழ்நாட்டுக்கு சொட்டு காவிரி நீரை கூட திறந்துவிடக் கூடாது என்பது கன்னட அமைப்புகளின் போராட்டம். காவிரியில் ஏற்கனவே 5,000 கன அடி நீரை திறந்துவிட சொன்னது காவிரி மேலாண்மை ஆணையம். ஆனால் இதனை ஏற்க மறுத்து சொற்ப நீரை திறந்துவிட்டது கர்நாடகா. இதற்கு கன்னட விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து தொடங்கிய போராட்டம் இப்போதும் தொடருகிறது. மண்டியா, பெங்களூரில் இன்றும் போராட்டங்கள் நடைபெற்றன.

இதனைத் தொடர்ந்து இன்று முதல் 18 நாட்களுக்கு காவிரியில் 3,000 கன அடி நீரை தமிழ்நாட்டுக்கு திறக்க வேண்டும் என்பது காவிரி ஒழுங்காற்று குழுவின் உத்தரவு. ஆனால் இதனை ஏற்கவே முடியாது; உச்சநீதிமன்றத்துக்கு போவோம் என்கிறார் கர்நாடகா முதல்வர் சித்தராமையா.
காவிரி பிரச்சனையில் ஏற்கனவே மண்டியா பந்த், பெங்களூர் பந்த் போராட்டங்கள் நடத்தப்பட்டுவிட்டன. ஆனாலும் வாட்டாள் நாகராஜ் போன்றவர்கள் விடாப்பிடியாக காவிரி டெல்டா சாராத ஒட்டுமொத்த கர்நாடகா பகுதிகளிலும் முழு அடைப்புப் போராட்டம் நாளை நடத்தப்படும் என அறிவித்துள்ளனர். இது கர்நாடகாவில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது. பெங்களூர் பந்த், கர்நாடகா பந்த் ஆகியவற்றல் தொழில் துறைக்கு சுமார் ரூ4,000 கோடி இழப்பு ஏற்படுகிறது என்பது தொழில்துறையினர் ஆதங்கம்.
ஆனாலும் நாளை கர்நாடகா பந்த் நடைபெற இருப்பதை முன்னிட்டு அம்மாநில போலீசார் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். தமிழ்நாட்டில் இருந்து கர்நாடகாவுக்குள் இருசக்கர வாகனங்கள், சரக்கு வாகனங்கள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும் சத்தியமங்கலத்தில் இருந்து புளிஞ்சூர், கோலிபாளையம் வழியாக தாளவடி செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. சத்தியமங்கலத்தில் இருந்து திம்பம், தலமலை வழியா தாளவாடி செல்ல மட்டுமே அனுமதி வழங்கப்படுவதாக கர்நாடகா போலீசார் தெரிவித்துள்ளனர். இப்பகுதியில் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை மட்டுமே செல்ல வேண்டும் எனவும் போலீசார் அறிவுறுத்தி உள்ளனர்.
அத்துடன் தமிழ்நாடு கர்நாடகா எல்லையான ஓசூர் அத்திப்பள்ளி பகுதியிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அத்திப்பள்ளி எல்லையில் இரு மாநில போலீசாரும் குவிக்கப்பட்டுள்ளனர்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications