Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இன்று பந்த்.. பெங்களூரில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.. எந்தெந்த சேவைகள் ரத்து? இதோ முழு விபரம்

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: தமிழ்நாட்டுக்கு காவிரியில் தண்ணீர் வழங்குவதை எதிர்த்து பெங்களூரில் இன்று பந்த் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு பல அமைப்புகள் ஆதரவு கொடுத்து வரும் நிலையில் சில அமைப்புகள் ஆதரவை வாபஸ் பெற்றுள்ளன. இதனால் இன்று பெங்களூரில் எந்தெந்த சேவைகள் இருக்கும்? எந்தெந்த சேவைகள் முடங்கும்? என்பது குறித்த முக்கிய தகவல் வெளியாகி உள்ளது.

தமிழ்நாட்டுக்கும், கர்நாடகாவும் இடையே காவிரி நீர் பங்கீடு செய்வதில் நீண்ட காலமாக பிரச்சனை இருந்து வருகிறது. உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விட வேண்டும். ஆனால் சில சமயங்களில் கர்நாடகா, தமிழகத்துக்கு முறையாக தண்ணீர் திறப்பது இல்லை.

Cauvery Dispute: Amid of Bangalore Bandh School, Colleges closed today what is open? what is closed? full list here

சமீபத்தில் தமிழ்நாட்டுக்கு 15 நாட்களுக்கு தினமும் 5 ஆயிரம் கனஅடி தண்ணீரை காவிரி ஆற்றில் திறந்து விட வேண்டும் என கர்நாடகா அரசுக்கு காவிரி நீர் மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டது. இதனை ரத்து செய்யக்கோரி கர்நாடகா சார்பில் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிமன்றம் காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் உத்தரவை பின்பற்ற அறிவுறுத்தியது.

இதனால் தமிழகத்துக்கு 5 ஆயிரம் கனஅடி தண்ணீரை கர்நாடகா திறந்து விட்டுள்ளது. ஆனால் கர்நாடகாவில் தென்மேற்கு பருவமழை சரியாக பெய்யவில்லை. இதனால் வறட்சி ஏற்பட்டுள்ளது. அணைகளில் தண்ணீர் இல்லை. எனவே கர்நாடகா அரசு தமிழகத்துக்கு தண்ணீர் திறக்க கூடாது என பல அமைப்பினர் கோரிக்கை வைத்து பந்த் நடத்தி வருகின்றனர்.

தமிழகத்துக்கு தண்ணீர் திறப்பதை எதிர்த்து கேஆர்எஸ் அணை இருக்கும் மண்டியா மாவட்டத்தில் பந்த் நடந்து முடிந்துள்ளது. இன்று பெங்களூரில் பந்த் தொடங்கி உள்ளது. கர்நாடகா ஜல சம்ரக்சன சமிதி தலைமையில் பெங்களூர் பந்த் நடப்பதாக கரும்பு விவசாயிகள் அமைப்பின் தலைவர் குருபூர் சாந்தகுமார் தெரிவித்துள்ளார். இதற்கு 100க்கும் அதிகமான அமைப்புகள் ஆதரவு தெரிவித்துள்ளன. இதனால் 26ம் தேதி பெங்களூர் மொத்தமாக முடங்கலாம் என்ற நிலை உருவானது.

இதற்கிடையே தான் வரும் 29ம் தேதி கர்நாடகா முழுவதும் பந்த் நடத்தப்படும் என கன்னட சலுவளி கட்சியின் தலைவர் வட்டாள் நாகராஜ் அறிவித்துள்ளார். இதனால் பல அமைப்புகள் இன்றைய பெங்களூர் பந்த்துக்கு வழங்கிய ஆதரவை ரத்து செய்துள்ளன. இந்நிலையில் தான் பெங்களூரில் பந்த் நடக்கும் நிலையில் இன்று எந்தெந்த சேவைகள் இருக்கும்? எந்தெந்த சேவைகள் இருக்காது? என்பது குறித்த முக்கிய தகவல் வெளியாகி உள்ளது.

அதன்படி இன்று பெங்களூரில் அனைத்து அவசரகால சேவைகள் வழக்கத்தில் இருக்கும். அதன்படி மருத்துவமனைகள், மருந்து கடைகள் (மெடிக்கல்), நர்சிங் ஹோம் இயங்கும். அரசு அலுவலகங்கள், மெட்ரோ சேவைகள் இருக்கும் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. பிஎம்டிசி பஸ்கள் வழக்கம்போல் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் முதலில் பெங்களூர் பந்த்துக்கு ஓட்டல் உரிமையாளர்கள் சங்கம் ஆதரவு தெரிவித்து இருந்தது. தற்போது அது வாபஸ் பெறப்பட்டுள்ளது. இதனால் ஓட்டல், ரெஸ்டாரண்ட்டுகள் செயல்படும். மாறாக 29 ம் தேதியில் ஓட்டல், ரெஸ்டாரண்ட்டுகள் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் செயலி அடிப்படையில் இயங்கும் ஓலா, உபர் டிரைவர் சங்கம், ஆட்டோ சங்கத்தினரும் பெங்களூர் பந்த்துக்கு கொடுத்த ஆதரவை வாபஸ் பெற்றுள்ளனர். இதனால் இன்று ஓலா, உபர், ஆட்டோக்கள் இயங்க உள்ளது. இவர்களும் இன்றைய பெங்களூர் பந்த்துக்கு பதில் வரும் 29 ம் தேதி நடக்கும் கர்நாடகா பந்த்துக்கு ஆதரவு வழங்குவதாக தெரிவித்துள்ளனர்.

அதேவேளையில் கடைகள், வணிக வளாகங்கள், தொழிற்சாலைகள், சாலையோர வியாபாரிகள், தியேட்டர்கள், மால்கள், மல்டி பிளக்ஸ்கள் மூடப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெங்களூர் நகரில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுப்பு வழங்கப்பட்டுள்ளது. பந்த் போராட்டத்தால் மாணவ-மாணவிகள் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக இந்த விடுப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கர்நாடகா மாநில டிராவல் ஆபரேட்டர் அசோசியேஷன் இந்த பெங்களூர் பந்த்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளது. இதனால் டிராவல் ஆபரேட்டர் அசோசியேஷன் வாகனங்கள் இன்று இயங்காது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+