என்ன ஒரே ரத்தமா இருக்கு! மோடிக்கு போன கடிதம்! காவிரி பிரச்சனையால் கன்னட நடிகர் செய்ததை பாருங்க!
பெங்களூர்: தமிழ்நாடு-கர்நாடகா இடையே காவிரி பிரச்சனை என்பது விஸ்வரூபம் எடுத்துள்ளது. கர்நாடாகாவில் பந்த் போராட்டம் நடந்து முடிந்துள்ளது. இத்தகைய சூழலில் தான் காவிரி பிரச்சனையில் கர்நாடகாவுக்கு நீதி கேட்டு பிரதமர் மோடிக்கு கன்னட நடிகர் ஒருவர் ரத்தத்தில் கடிதம் எழுதியதும், அதில் குறிப்பிட்ட விஷயமும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
காவிரி நீரை பங்கீட்டு கொள்வதில் காவிரி நடுவர் மன்றம், உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின்படி கர்நாடகா தமிழகத்துக்கு காவிரியில் தண்ணீர் வழங்க வேண்டும்.

ஆனால் கர்நாடகா அரசு ஒவ்வொரு முறையும் தமிழகத்துக்கான தண்ணீரை உரிய முறையில் காவிரியில் திறப்பது இல்லை. தற்போது காவிரி நீர் பங்கீடு செய்வது தொடர்பான பிரச்சனை விஸ்வரூபமாகி உள்ளது.
கர்நாடகாவில் மழை இல்லை எனக்கூறி கர்நாடகா அரசு தமிழகத்துக்கு தண்ணீர் திறக்க மறுத்து வருகிறது. இதனால் தமிழ்நாடு உச்சநீதிமன்றம், காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தை அணுகியே ஒவ்வொரு முறையும் தண்ணீரை பெற்று வருகிறது. ஆனாலும் கர்நாடகா தற்போது வரை தமிழகத்துக்கு வழங்க வேண்டிய தண்ணீரை இன்னும் வழங்கவில்லை.
இதற்கிடையே தான் கடந்த மாதம் 28 ம் தேதி அக்டோபர் மாதம் 29ம் தேதி காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் அவசர கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் அக்டோபர் மாதம் 15ம் தேதி தமிழகத்துக்கு வினாடிக்கு 3 ஆயிரம் கனஅடி தண்ணீரை திறக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. ஆனால் இதனை திறக்க அணையில் தண்ணீர் இல்லை. காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் உத்தரவை ரத்து செய்யக்கோரி கர்நாடகா சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு செய்யப்பட்டுள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.
இதற்கிடையே தமிழகத்துக்கு தண்ணீர் வழங்க கூடாது என போராட்டங்கள் விஸ்வரூபமெடுத்துள்ளன. மண்டியா, பெங்களூரில் பந்த் நடந்த நிலையில் கடந்த 29ம் தேதி கர்நாடகா பந்த் நடத்தப்பட்டது. இந்த போராட்டத்துக்கு கன்னட திரைப்பட நடிகர், நடிகைகள் முழு ஆதரவை தெரிவித்தனர். மேலும் தமிழகத்துக்கு தண்ணீர் கொடுப்பதை நிறுத்த வலியுறுத்தி கர்நாடகாவில் பல இடங்களில் போராட்டங்கள் வெடித்துள்ளன.
இந்நிலையில் தான் கன்னட நடிகரான பிரேம் நெனபிரலி பிரதமர் மோடிக்கு ரத்தத்தில் கடிதம் எழுதியுள்ளார். கர்நாடகாவுக்கு நீதி வேண்டும் என அவர் இந்த கடிதத்தை எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் காவிரி பிரச்சனையில் தலையிட்டு தீர்வு காண வேண்டும். கர்நாடகாவுக்கு நீதி வழங்க வேண்டும். காவிரி எங்களுடையது என எழுதியுள்ளார். இதுதொடர்பான வீடியோவை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ தறே்பாது வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications