அடங்காத வாட்டாள் நாகராஜ்- தமிழ்நாட்டுக்கு காவிரி நீர் தர எதிர்ப்பு- அக்.5-ல் கேஆர்எஸ் அணை முற்றுகை!
பெங்களூர்: தமிழ்நாட்டுக்கு காவிரி நீர் திறக்க எதிர்ப்பு தெரிவித்து அக்டோபர் 5-ந் தேதி கிருஷ்ணராஜ சாகர் அணையை முற்றுகையிடும் 'கேஆர்எஸ் சலோ' போராட்டம் நடத்தப்படும் என கன்னட சலுவாளி கட்சியின் தலைவர் வாட்டாள் நாகராஜ் அறிவித்துள்ளார்.
காவிரியில் தமிழ்நாட்டுக்கு ஆகஸ்ட் 15-ந் தேதி வரை வினாடிக்கு 3,000 கன அடிநீரை திறக்க வேண்டும் என்பது காவிரி மேலாண்மை ஆணையத்தின் இன்றைய உத்தரவு. ஆனால் தமிழ்நாட்டுக்கு காவிரி நீரை தரமுடியாது என்பது மாநில அரசின் நிலைப்பாடு என அறிவித்துள்ளார் அம்மாநில முதல்வர் சித்தராமையா.

மேலும் காவிரி நீரை திறந்துவிட முடியாது என்ற நிலைப்பாட்டால் ஏற்படக் கூடிய விளைவுகள்- அதாவது ஆட்சி கலைப்பு, ராணுவம் மூலம் மாநில அணைகளை மத்திய அரசு கைப்பற்றுதல் ஆகியவற்றின் சாத்தியங்கள் குறித்து நீர்வளத்துறை அதிகாரிகள், உச்சநீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதிகள், முன்னாள் அட்வகேட் ஜெனரல்கள் ஆகியோருடன் ஆலோசனை நடத்தப் போவதாகவும் கர்நாடகா முதல்வர் சித்தராமையா அறிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
முன்னதாக இன்று கர்நாடகா தழுவிய பந்த் போராட்டம் நடத்தப்பட்டது. தலைநகர் பெங்களூரில் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்ட போதும் தடையை மீறி போராட்டங்கள் நடத்தப்பட்டன. இப்போராட்டங்களில் ஈடுபட்ட 300க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். இதேபோல மண்டியா, ஹாசன், சாம்ராஜ் நகர், மைசூர் ஆகிய இடங்களிலும் முழு அடைப்புப் போராட்டம் நடைபெற்றது.
பெங்களூர் போராட்டத்தில் தடையை மீறி பங்கேற்ற கன்னட சலுவாளி கட்சித் தலைவர் வாட்டாள் நாகராஜ், ஆதரவாளர்களுடன் கைது செய்யப்பட்டார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய வாட்டாள் நாகராஜ், அக்டோபர் 5-ந் தேதி கேஆர்எஸ் சலோ போராட்டம் நடத்தப்படும். அன்றைய தினம் பெங்களூர் மைசூர் சர்க்கிளில் இருந்து பேரணியாக புறப்பட்டு கிருஷ்ணராஜ சாகர் அணையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவோம் என அறிவித்துள்ளார்.
கடந்த செப்டம்பர் 26-ந் தேதி பெங்களூர் பந்த் போராட்டம் நடத்தப்பட்டது. அப்போது வம்படியாக கர்நாடகா தழுவிய போராட்டம் நடத்தப்பட வேண்டும் என வலியுறுத்தியது வாட்டாள் நாகராஜ் கோஷ்டிதான். வாட்டாள் நாகராஜ் கோஷ்டியின் ஏற்பாட்டிலேயே இன்று கர்நாடகா பந்த் போராட்டம் நடத்தப்பட்டது. ஆனால் கர்நாடகாவின் காவிரி டெல்டா தவிர்த்த இதர மாவட்டங்களில் இந்தப் போராட்டத்துக்கு ஆதரவு கிடைக்கவில்லை; அப்பகுதிகளில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன்












Click it and Unblock the Notifications