கர்நாடகா: காவிரியில் 70,000 கன அடிநீரை திறந்துவிட்டது கர்நாடகா- ஒகேனக்கல்லில் சீறிப் பாயும் வெள்ளம்!
பெங்களூர்: கர்நாடகாவின் கபினி அணை மற்றும் நுகு அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் வினாடிக்கு 70,000 கன அடிநீரை கர்நாடகா அரசு திறந்துவிட்டுள்ளது. கேரளாவின் வயநாடு பகுதியில் கனமழை பெய்வதால் கபிலா ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டோடி கபினி அணைக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. கபினி அணையில் இருந்து வினாடிக்கு 65,000 கன அடிநீரும் நுகு அணையில் இருந்து 5,000 கன அடி நீரும் காவிரியில் திறந்துவிடப்படுள்ளது. இதனால் தமிழ்நாட்டின் ஒகேனக்கல்லில் பெரும் வெள்ளம் சீறிப் பாய்கிறது.
கர்நாடகாவில் தென்மேற்கு பருவமழை கொட்டித் தீர்த்து வருகிறது. இதனால் கர்நாடகாவின் ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. கர்நாடகாவின் அணைகளும் நிரம்பி உள்ளன.

கேரளாவின் வயநாட்டில் கபிலா ஆற்றின் நீர்பிடிப்பு பகுதிகளில் பெருமழை தொடர்ந்து கொட்டித் தீர்க்கிறது. கபிலா ஆறு என்பது காவிரியின் கிளை நதி. கபிலா ஆற்று நீர் கர்நாடகாவின் கபினி அணையை வந்தடைகிறது. கபினி அணையின் நீர் மட்டம் முழு கொள்ளவை எட்டிவிட்டது. இதனால் அணைக்கு வரும் நீர் அப்படியே உபரி நீராக காவிரியில் திறக்கப்பட்டு வருகிறது.
கபினி அணையில் இருந்து மட்டும் தற்போது வினாடிக்கு 65,000 கன அடிநீரை கர்நாடகா அரசு திறந்துவிட்டுள்ளது. இதனால் காவிரி கரையோர கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. கபினி அணையின் கீழ் அணையான நுகு அணையில் இருந்து வினாடிக்கு 5,000 கன அடிநீர் திறக்கப்பட்டுள்ளது. மொத்தமாக காவிரியில் 70,000 கன அடிநீரை கர்நாடகா திறந்துவிட்டுள்ளது.
இதனால் தமிழ்நாட்டின் ஒகேனக்கல்லில் பாறைகளை மறைக்கும் அளவுக்கு வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. ஒகேனக்கல்லில் அருவிகளில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. ஒகேனக்கல்லில் 4-வது நாளாக பரிசல்களும் இயக்கப்படவில்லை. காவிரியில் அதிக அளவு நீர் திறக்கப்பட்டு வருவதால் மேட்டூர் அணையின் நீர் மட்டமும் கிடுகிடுவென அதிகரித்து வருகிறது.
-
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது?












Click it and Unblock the Notifications