Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நிலவில் பெருங்கடல்.. சந்திரயான் 3 செய்த மற்றொரு சாதனை! இஸ்ரோ விஞ்ஞானிகள் பெருமிதம்

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: நிலவை ஆய்வு செய்ய அனுப்பப்பட்ட சந்திரயான் 3 விண்கலம், உலக சாதனை படைத்தது. இந்த மிஷனில் பிரக்யான் ரோவர் சேகரித்த தகவல்களை விஞ்ஞானிகள் ஆய்வு செய்து வருகின்றனர். இப்படி இருக்கையில் நிலவில் ஒரு காலத்தில் மாக்மா எனப்படும், பாறை குழம்பு கடல் இருந்திருக்கிறது என்பது தற்போது தெரிய வந்திருக்கிறது.

விண்வெளி துறையில் இந்தியாவுக்கு என தனிப் பெயரை உருவாக்கி கொடுத்தது சந்திரயான் 3 திட்டம்தான். இதுவரை நிலவின் தென் துருவத்தை எந்த நாட்டின் விண்கலமும் தொட்டது கிடையாது. ஆனால், முதன் முறையாக இந்தியா இந்த மகத்தான வரலாற்று சாதனையை படைத்தது. இந்த சாதனை ஒட்டுமொத்த மனித சமூகத்திற்குமான சாதனை என இஸ்ரோ கூறியுள்ளது.

chandrayaan 3 isro moon 3

கடந்த ஆண்டு ஜூலை மாதம் 14ம் தேதியன்று நிலவுக்கு சந்திரயான் 3 விண்கலத்தை இஸ்ரோ அனுப்பியது. சந்திரயான் -3 விண்கலன் பூமியை 6 முறை பின்னர் ஆகஸ்ட் மாதம் 23ம் தேதியன்று நிலவின் தென் துருவத்தில் இறங்கி வரலாற்று சாதனையை படைத்தது. இதுவரை உலகின் எந்த ஒரு நாடும் நிலவின் தென் துருவத்தில் விண்கலனை தரையிறக்கியது கிடையாது.

நிலவில் ஆக்சிஜன், சல்பர், அலுமினியம், கால்சியம், அயர்ன், குரோமியம், டைட்டேனியம், மாங்கனீஸ், சிலிக்கான் உள்ளிட்ட தனிமங்கள் இருப்பதை சந்திரயான் 3 பிரக்யான் ரோவரில் இருந்த எல்ஐபிஎஸ் கருவி கண்டுபிடித்து சொன்னது. இந்தியாவுக்கு முன்னர் நிலவுக்கு ரஷ்யாவும், அமெரிக்கா, சீனா உள்ளிட்ட நாடுகளும் விண்கலன்களை அனுப்பி ஆய்வு செய்திருந்தாலும் இஸ்ரோவின் பிரக்யான் ரோவர்தான் முதன் முதலில் நிலவில் சல்பர் இருப்பதை கண்டுபிடித்தது. இது இஸ்ரோ படைத்த இரண்டாவது சாதனை.

அதேபோல டைட்டானியம் கண்டுபிடித்திருப்பது நிலவின் தென் துருவத்தின் மீதான ஆர்வத்தை மேலும் அதிகரித்துள்ளது. அதாவது, இந்த தனிமம் உலகின் மிகவும் அரிதானது. பூமியில் வெறும் 0.63 சதவிகிதம் மட்டுமே இருக்கக்கூடிய தனிமம் இது. இதை கொண்டுதான் விமானங்கள் மற்றும் ராக்கெட்டுகள் உருவாக்கப்படுகின்றன. இரும்பை போல கனமாக இல்லாமல் லேசானதாக இருக்கும். ஆனால் இதன் உறுதி திறன் அபாரமானதாக இருக்கும். எனவே இந்த தனிமத்திற்கு பூமியில் டிமாண்ட் அதிகம்.

சல்பரும் வெடி மருந்துகள் தயாரிக்கப் பயன்படுத்தப்படுகிறது. இதை கொண்டு மிக குறைந்த தூரம் செல்லும் ராக்கெட்டுகளையும் உற்பத்தி செய்ய முடியும். எதிர்காலத்தில் நிலவை காலணிப்படுத்த முயலும் போது இந்த தனிமங்கள் நிச்சயம் பயன்படும். இதையெல்லாம் கண்டுபிடித்து சொன்ன பின்னர் விக்ரம் லேண்டரும், பிரக்யான் ரோவரும் உறக்க நிலைக்கு சென்றன. நிலவில் இரவு நேரத்தில் மைனஸ் 200 டிகிரிக்கும் அதிகமாக குளிர் இருக்கும். எனவே உறக்க நிலைக்கு சென்ற ரோவரை மீண்டும் எழுப்ப முடியாமல் போனது.

இருப்பினும் சந்திரயான் 3 விண்கலன் 2023ம் ஆண்டு செய்த சாதனை, விண்வெளித்துறையில் இந்தியாவுக்கு என தனித்த அடையாளத்தை உருவாக்கியிருக்கிறது என்பதில் மாற்று கருத்து இருக்க முடியாது.

இப்படி இருக்கையில் நிலவில் ஒரு காலத்தில் மாக்மா எனப்படும், பாறை குழம்பு கடல் இருந்திருக்கிறது என்பது தற்போது தெரிய வந்திருக்கிறது. சந்திரயான் 3 மிஷனில், பிரக்யான் ரோவர் சேகரித்து அனுப்பிய தகவல்களை இஸ்ரோ விஞ்ஞானிகள் ஆய்வு செய்து வருகின்றனர். இந்த ஆய்வின் போது தான் கடல் இருந்த விஷயம் தெரிய வந்திருக்கிறது. இது 4.2 பில்லியன் ஆண்டுகளுக்கு இருந்திருக்கலாம் என்றும் விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

பிரக்யான் ரோவர் நிலவின் மேற்பரப்பில் 103 மீ தொலைவுக்கு பயணித்திருக்கிறது. அதேபோல 23 இடங்களில் மண்ணை பகுப்பாய்வு செய்திருக்கிறது. இப்படி பெறப்பட்ட தகவல்களை விஞ்ஞானிகள் ஆய்வு செய்தபோது, நிலவின் 100 கிலோமீட்டர் ஆழத்தில், மெக்னீசியம் மற்றும் ஆலிவின் சேர்மங்களின் கலவை இருப்பதை அவர்கள் கண்டுபிடித்துள்ளனர். இந்த பொருட்கள் தென் துருவத்தில் 2,500-கிமீ அகலமுள்ள மிகப் பெரிய தாக்க பள்ளத்தில் இருந்து வந்திருக்கலாம் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இப்படியாக மாம்கா கடல் குறித்து கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+