7 நாட்களில் முடிவுக்கு வரும் சந்திரயான் 3 ரோவரின் பயணம்! காரணம் இதுதான்.. விளக்கும் விஞ்ஞானிகள்
பெங்களூர்: நிலவின் தென் துருவத்தில் வெற்றிகரமாக இறங்கி வரலாற்று சாதனை படைத்துள்ள பிரக்யான் ரோவர், தற்போது தென் துருவ பகுதிகளை ஆய்வு செய்து வருகிறது. இருப்பினும் இந்த ரோவர் இன்னும் 7 நாட்கள் வரைதான் தாக்குப்பிடிக்கும் என்று விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.
நிலவின் தென் துருவத்தில் உள்ள பள்ளத்தாக்குகளில் பல பில்லியன் ஆண்டுகளாக சூரிய ஒளியே படாமல் இருக்கிறது. இந்நிலையில் இங்கு நீர் இருப்பதற்கான சாத்தியங்களை சந்திரயான்-1 விண்கலம் கண்டுபிடித்து சொன்னது. அதன் பின்னர் நிலவை யார் ஆக்கிரமிக்கப்போகிறார்கள் என்கிற போட்டி தொடங்கியது. இதனையடுத்து நிலவில் ரோவரை இறக்கி அதில் அதன் மூலம் ஆய்வு செய்ய கடந்த 2019ம் ஆண்டு சந்திரயான்-2 திட்டத்தை செயல்படுத்தியது இஸ்ரோ.

ஆனால் இந்த திட்டத்தில் ஏற்பட்ட சிறிய தொழில்நுட்ப தவறால் நிலவில் தரையிறங்க இருந்த ரோவர் வேகமாக மோதி உடைந்தது. இருப்பினும் இதனை கொண்டு சென்ற ஆர்பிட்டர் தற்போது வரை செயல்பட்டு வருகிறது. எனவே மீண்டும் மற்றொரு ரோவரை அனுப்புவது என்று முடிவெடுத்து சந்திரயான்-3 திட்டம் செயல்படுத்தப்பட்டது. அந்த வகையில் கடந்த ஜூலை மாதம் 14ம் தேதி பூமியிலிருந்து ஏவப்பட்ட சந்திரயான் -3 விண்கலம் கடந்த 23ம் தேதியன்று மாலை 6.04 மணிக்கு திட்டமிட்டபடி நிலவில் மெல்ல தரையிறங்கி வரலாற்று சாதனை படைத்தது.
பின்னர் விக்ரம் லேண்டரிலிருந்து வெளியே வந்த பிரக்யான் ரோவர் தனது ஆய்வை தொடங்கியுள்ளது. இந்த ஆய்வில் தற்போது சில தகவல்கள் தெரிய வந்துள்ளன. அதாவது நிலவில் இருக்கும் தனிமங்களை பிரக்யான் ரோவர் உறுதி செய்திருக்கிறது. அதாவது, நிலவில் ஆக்சிஜன், சல்பர், அலுமினியம், கால்சியம், அயர்ன், குரோமியம், டைட்டேனியம், மாங்கனீஸ், சிலிக்கான் உள்ளிட்ட தனிமங்கள் இருப்பதை ரோவரில் உள்ள எல்ஐபிஎஸ் கருவி கண்டுபிடித்திருக்கிறது.
அதேபோல இங்கு ஹைட்ரஜன் இருக்கிறதா? என்பதை குறித்தும் ஆய்வு மேற்கொண்டு வருகிறது. ஏனெனில் ஹைட்ரஜன் இருக்கும் இடத்தில்தான் நீர் இருக்கும். ஹைட்ரஜன் இரண்டு பங்கும் ஆக்ஸிஜன் ஒரு பங்கும் சேர்ந்தால்தான் (H2O) நீர் உருவாக முடியும். எனவே ரோவர் ஆக்ஸிஜன் தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டிருக்கிறது. இந்நிலையில் இந்த ரோவர் இன்றும் 7 நாட்கள் வரைதான் தாக்குப்பிடிக்கும் என்று விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.
இதற்கான காரணத்தையும் அவர்கள் விளக்கியுள்ளனர். அதாவது, "தற்போது பிரக்யான் ரோவர் நிலவின் தென் துருவ பகுதியில் இருக்கிறது. இந்த பகுதியில் 14 நாட்கள் வரை சூரிய வெளிச்சம் இருக்கும். எனவே பிரக்யான ரோவருக்கு தேவையான சக்தி இதன் மூலம் பெறப்படும். ஆனால், 14 நாட்களுக்கு பின்னர் இரவு தொடங்கிவிடும். இரவு எனில் சூரிய வெளிச்சம் இல்லாமல் இருப்பது மட்டுமல்ல.. மாறாக இரவு நேரத்தில் இங்கு வெப்பநிலை மைனஸ் 238 டிகிரி வரை குளிர் இருக்கும்.
இந்த குளிரில் பிரக்யான் ரோவரில் உள்ள கருவிகள் வேலை செய்யாது. சில கருவிகள் செயலிழந்து போவதற்கும் வாய்ப்புகள் அதிகம். இந்த இரவு 28 நாட்கள் வரை நீடிக்கும் என்பதால் இதிலிருந்து பிரக்யான் ரோவர் மீண்டு வருவதற்கான வாய்ப்பு என்பது மிக குறைவுதான். இருப்பினும் 28 நாட்கள் தொடர் இரவுகளை கடந்து மீண்டும் பிரக்யான் ரோவர் செயல்படும் என்று இஸ்ரோ தலைவர் சோம்நாத் நம்பிக்கை தெரிவித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications