இயற்கை பேரிடர் என சொன்னாரே.. சந்திரயான் 3 பற்றிய கர்நாடக பிரபல சாமியார் சொன்னது பலித்ததா?
பெங்களூர்: சந்திரயான் 3 விண்கல திட்டம் குறித்து கர்நாடகாவில் பிரபல சாமியாரான கோடி மட சுவாமியார் கணித்து கூறியிருந்தார். தேர்தல் சமயத்தில் இவரது கணிப்புகள் துல்லியமாக நடக்கும் என்பதால் சாமியாரின் சந்திரயான் பற்றிய கணிப்பும் ரொம்பவே கவனம் பெற்று இருந்தது.
நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக கடந்த மாதம் 14 ஆம் தேதி இஸ்ரோ நிலவுக்கு சந்திரயான் 3 விண்கலனை விண்ணில் ஏவியது. இந்த விண்கலம் பூமியின் சுற்றுவட்டப்பாதை மற்றும் நிலவின் சுற்றுவட்டப்பாதைகளுக்கு சென்று நேற்று முன் தினம் மாலை நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கியது. 40 நாட்கள் பயணத்திற்கு பிறகு சந்திரயான் 3 நிலவில் காலூன்றியது.

நிலவு குறித்த ஆராய்ச்சியில் அமெரிக்கா, ரஷ்யா, சீனா ஆகிய நாடுகள் ஈடுபட்டு வந்தாலும் இதுவரை எந்த ஒரு நாடும் தென் துருவத்தை ஆய்வு செய்யவில்லை. எனவே, இந்தியா நிகழ்த்திய வரலாற்று சாதனை சர்வதேச அளவில் கவனம் பெற்றுள்ளது. முன்னதாக இந்தியாவுக்கு போட்டியாக ரஷ்யாவின் லூனா 25 விண்கலம் நிலவின் தென் துருவத்தில் கால் பதிக்கும் திட்டத்துடன் சென்றது. ஆனால், கடைசி கட்ட முயற்சியில் இந்த விண்கலம் தோல்வியை சந்தித்தது.
இதனால், தென் துருவத்தில் சாஃப்ட் லேண்டிங் செய்த முதல் நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றுள்ளது. முன்னதாக சந்திரயான் 2 விண்கலம் கடைசி கட்டத்தில் ஏற்பட்ட பின்னடைவால் தோல்வியை சந்தித்தது. கடந்த 2019 ஆம் ஆண்டு சந்திரயான் 2 விண்கலம் திட்டம் பின்னடைவை சந்தித்த நிலையில், சந்திரயான் 3 விண்கலம் விண்ணில் ஏவப்பட்டதில் இருந்தே பெரும் எதிர்பார்ப்பு நிலவியது. பல்வேறு கணிப்புகளும் வெளியிடப்பட்டன.
குறிப்பாக கர்நாடகாவை சேர்ந்த பிரபல சாமியாரான கோடி மட சுவாமி, சந்திரயான் 3 விண்கலம் திட்டம் குறித்து கணித்து இருந்தார். அவர் கூறுகையில், "சந்திரயான் 3 விண்கலம் திட்டம் கண்டிப்பாக வெற்றி பெறும் . இந்திய தொழில் நுட்ப துறையில் மிகப்பெரும் சாதனையாக இந்த திட்டம் அமையும். அதேவேளையில் சில சவால்களை சந்திக்க வேண்டியிருக்கும் . அதாவது மிகவும் சரியான இடத்தில் இதை தரையிறக்க வேண்டியது அவசியம்" என்றார்.
அதேபோல், இந்த திட்டம் செயல்படுத்தப்படும் பொழுது சில இயற்கை பேரழிவுகளை சந்திக்க வேண்டியிருக்கும் எனவும் அதாவது, நிலநடுக்கம் சுனாமி போன்றவை கூட ஏற்படும் அபாயம் உள்ளது. இது சந்திரயான் திட்டத்திற்கு இடையூறாக அமையக் கூடும். ஆனாலும் இந்த சவால்களை தாண்டி சந்திரயான் திட்டம் வெற்றி பெறும்" என்று கூறியிருந்தார். தேர்தல் சமயங்களில் இவரது கணிப்புகள் துல்லியமாக இருந்திருக்கிறது.
இதன் காரணமாக, கோடி மட சாமியாரான ஷிவானந்த ஷிவயோகி ராஜேந்திர சுவாமிஜியின் இந்த கணிப்பு, சந்திரயான் 3 விண்ணில் ஏவப்பட்டதில் இருந்து அதிகமாக இணையத்தில் பரவி வந்தது. இந்த நிலையில், தற்போது அவர் கணித்தது போலவே சந்திரயான் 3 விண்கலம் நிலவில் கால் பதித்து சரித்திர சாதனை நிகழ்த்தியது. இன்னும் சொல்லப்போனால், இதில் லேண்டர் தரையிறங்கும் நேரத்தில் சில தடைகள் - கல் அல்லது பள்ளம்- இருந்ததால் செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தி சற்று வேறு இடத்தை மாற்றி இறங்கியது லேண்டர்.
அந்த வகையில், there will be some difficulties, such as the need to land the lander in a very precise location என்று அவர் கூறியது மிகச் சரியாக பலித்துள்ளது என்றே சொல்லலாம். ஆனால் இயற்கை பேரிடரால் பாதிக்கும் என்ற கணிப்பு பலிக்கவில்லை. தற்போது, சந்திரயான் திட்டத்தில் கோடி மட சாமியார் சொன்னது நடந்து விட்டதாக அவரது ஆதரவாளர்கள் பெருமையாக சொல்லி வருகிறார்கள்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications