Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஆணுறுப்பில் மின்சாரம்..விதை பையை மிதித்து சித்ரவதை! ரசிகனை அணு அணுவாக சிதைத்த தர்ஷன்..ரசித்த பவித்ரா

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: தர்ஷனின் காதலியான பவித்ரா கவுடாவுக்கு ஆபாச படங்கள் அனுப்பியதாக ரேணுகாசுவாமி கடத்தி கொலை செய்யப்பட்ட வழக்கில் நடிகர் தர்ஷன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், போலீஸார் தாக்கல் செய்த குற்றப் பத்திரிகையில், ரேணுகா சாமியின் ஆண் உறுப்பில் தர்ஷன் மின்சாரம் பாய்ச்சிக் கொலை செய்ததும், விதைப் பைகளை எரித்து சித்ரவதை செய்ததாக குற்றப் பத்திரிகையில் அதிர்ச்சி தரும் தகவல் குறிப்பிடப்பட்டுள்ளது.

கன்னட திரை ரசிகர்களால் சேலஞ்சிங் ஸ்டார் என அழைக்கப்படுபவர் நடிகர் தர்ஷன். இவருக்கு திருமணம் ஆகி ஒரு மகன் இருக்கும் நிலையில் கன்னட திரையுலகில் நடிகையாக வலம் வரும் பவித்ரா கவுடாவுடன் முறை தவறிய பழக்கம் இருப்பதாக கூறப்படுகிறது.

darshan pavithra gowda crime

இந்த நிலையில் தான் தொடர்ந்து பவித்ரா கவுடாவுக்கு மிரட்டல்கள் வந்தன. குறிப்பாக ரேணுகா சாமி என்பவர் பவித்ரா கவுடாவின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்ந்து ஆபாசமாக மெசேஜ் அனுப்பி வந்ததாக கூறப்படுகிறது.

தர்ஷனுக்கு ஏற்கனவே திருமணம் ஆகி இருக்கும் நிலையில் குழந்தைகளை விட்டுவிட்டு பவித்ரா கவுடாவுடன் தர்ஷன் இருப்பதை விரும்பாத அவரது தீவிர ரசிகரான ரேணுகா சாமி, தொடர்ந்து மிரட்டல் விடுத்து வந்திருக்கிறார். மேலும் ஆபாச புகைப்படங்களை, செய்திகளையும் அனுப்பி வந்துள்ளார். ரேணுகாசாமி, நடிகை பவித்ராவுக்கு இன்ஸ்டா தளத்தில் பவித்ர கவுடா என்ற பெயரில் மெசேஜ் செய்ததும், அதில் நடிகையின் தீவிர ரசிகர் என்றும், உடலுறவு கொள்ள வருமாறு அழைப்பு விடுத்ததும் தொடர்ந்து தனது ஆபாச புகைப்படத்தை அனுப்பியதே கொலைக்கான மூல காரணம் எனவும் குற்றப்பத்திரிக்கையில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. தொடர்ந்து தனது மேனேஜர் மூலம் ரேணுகா சாமியுடன் பெண் போல பேசி அவரது விவரங்களைக் கண்டுபிடிக்கப்பட்டது.

இதனால் ஆத்திரமடைந்த பவித்ரா கவுடா இது குறித்து நடிகர் தர்ஷனிடம் தெரிவித்திருக்கிறார். தொடர்ந்து தனது மேனேஜர் மூலம் ரேணுகா சாமியுடன் பெண் போல பேசி அவரது விவரங்களைக் கண்டுபிடித்துள்ளார் தர்ஷன். இதை அடுத்து தனது ரசிகர் மன்ற தலைவரான ராகவேந்திரா மூலம் ரேணுகா சாமியை, சித்ரதுர்கா பகுதியில் இருந்து பெங்களூருக்கு வரவழைத்து இருக்கிறார் தர்ஷன். தொடர்ந்து அவரை தனியாக அடைத்து வைத்து சரமாரியாக தாக்கி இரும்பு கம்பியால் அடித்து உதைத்துள்ளனர். பவித்ரா கவுடாவும் அவரை கொடூரமாக தாக்கியதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் ரேணுகா சாமி உயிரிழந்த நிலையில் அவரது உடல் மறைக்கப்பட்டது.

தொடர்ந்து ரேணுகா சாமியை காணவில்லை என புகாரை தொடர்ந்து அவரது உடல் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வழக்கில் பவித்ரா கவுடா, தர்ஷன் உள்ளிட்ட பலர் கைது செய்யப்பட்டு இருக்கின்றனர். இதுவரை 16 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், வழக்கின் குற்ற பத்திரிக்கை பெங்களூர் 29ஆவது முதன்மை அமர்வு, நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. வழக்கில் பவித்ரா கவுடா முதல் குற்றவாளியாகவும், தர்ஷன் இரண்டாவது குற்றவாளியாகவும் சேர்க்கப்பட்டிருக்கின்றனர். வழக்கில் மொத்தம் 231 பேர் சாட்சியங்களாக சேர்க்கப்பட்டிருக்கின்றனர்.

இந்த நிலையில் ரேணுகா சாமி எப்படி கொலை செய்யப்பட்டார் என குற்றப்பத்திரிக்கையில் பதைபதைக்க வைக்கும் தகவல்கள் இடம் பெற்றுள்ளது. ரேணுகா சாமியின் உடல் முழுவதும் 39 இடங்களில் கொடூரமாக தாக்கப்பட்டதற்கான காயங்கள் இருந்திருக்கிறது. அவரது நெஞ்சு எலும்பு உடைக்கப்பட்டு இருக்கிறது. ரேணுகா சாமியை பவித்ரா கவுடா தர்ஷன் முன்பாகவே செருப்பால் அடித்திருக்கிறார். இதனால் அவரது செருப்பில் ரத்த துளிகள் இருந்திருக்கிறது. இதையெல்லாம் விட கொடூரமாக ரேணுகா சாமியின் ஆணுறுப்பில் மெஹர் எனும் மின்சார கருவியை பயன்படுத்தி மின்சாரம் பாய்ச்சப்பட்டுள்ளது.

மேலும் அவரது விதைப்பைகளை காலால் எட்டி உதைத்து சிதைத்து மனிதாபிமானமற்ற முறையில் அணு அணுவாக கொடூரமாக சித்ரவதை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டு இருப்பதாக குற்ற பத்திரிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த தகவல்கள் வெளியாகி பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+