ம்ஹூம்.. அதெல்லாம் முடியாது.. இனிமேல் "கிட்டூர் கர்நாடகா"தான்.. முதல்வர் அதிரடி.. என்ன காரணம்
முதல்வர் பசவராஜ் பொம்மை புது அறிவிப்பு வெளியிட்டுள்ளார்
பெங்களூர்: கர்நாடகத்தின் மும்பை-கர்நாடகா பிராந்தியம் "கிட்டூர் கர்நாடகா" என அழைக்கப்படும் என்று முதல்வர் பசவராஜ் பொம்மை அதிரடியாக அறிவித்துள்ளார். எந்தவித உபயோகமுமில்லாமல் இனியும் ஏன் மும்பை கர்நாடகா என்றே அழைக்க வேண்டும் என்றும் பொம்மை கேள்வி எழுப்பி உள்ளார்.
கர்நாடகத்திலும் எல்லை பிரச்சனையும், எல்லை பிரிவினை தொடர்பான பிரச்சனையும் நீடித்தே வருகிறது.. இம்மாநிலத்தில் வட பிராந்தியம் பகுதியை "மும்பை கர்நாடகா" என்று சொல்வார்கள்..
காரணம், இந்த பகுதியில் வரும் மாவட்டங்கள் இதற்கு முந்தைய காலகட்டங்களில் பாம்பே மாகாணத்துடன் இணைந்திருந்தவையாகும்.

பெலகாவி
மாநில பிரிவினை ஏற்பட்டபோது, இவையெல்லாம் கர்நாடகத்துடன் ஒன்றாக சேர்ந்துவிட்டன.. இதில் ஒன்றுதான் பெலகாவி மாவட்டமும் அடக்கம்.. இங்கு மராட்டி மொழி பேசுவோர் அதிகமாக வசித்து வருகிறார்கள்.. பெரும்பான்மையான மொழியாக மராட்டி உள்ளதால், மகாராஷ்டிராவுடன் தங்களை சேர்க்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.. இதற்காக போராட்டங்களையும் அவர்கள் செய்து வருகிறார்கள். நீண்டகாலமாகவே பெல்காம் மாவட்டம் ஒரு சர்ச்சைக்குரிய பகுதியாக இப்போது வரை இருந்து வருகிறது.

நிஜாம் மன்னர்
இதற்கு நேர் மாறாக உள்ள பகுதி ஹைதராபாத் கர்நாடகா.. அதாவது கர்நாடகத்தின் வட கிழக்கு பிராந்தியத்திற்கு "ஹைதராபாத் கர்நாடகா" என்று சொல்வார்கள்.. இங்குள்ள மாவட்டங்கள் எல்லாம் முந்தைய காலகட்டங்களில் ஹைதராபாத் நிஜாம் மன்னர் ஆதிக்கத்தின் கீழ் இருந்தது.. பிறகு மதராஸ் மகாகாணத்துடன் இணைந்திருந்தன.. ஆனால் கர்நாடக மாநிலம் தோற்றுவிக்கப்பட்டபோது, இங்குள்ள மாவட்டங்கள் எல்லாம் இதனுடன் இணைந்துவிட்டன.

ஹைதராபாத்
ஹைதராபாத் மாவட்டங்களின் பெரும்பகுதி கர்நாடக வடகிழக்கு பகுதியில் வந்துவிட்டது.. அதனால் ஹைதராபாத் கர்நாடகா என்றே சொல்லி வந்தனர்.. 2019-ல்தான் "கல்யாண் கர்நாடகா" என்று முன்னாள் முதல்வர் எடியூரப்பா மாற்றினார். இப்போது மறுபடியும் இதே பிரச்சனை வெடித்துள்ளது.. மறுபடியும் இவைகளின் பெயரை மாற்றி உள்ளார் தற்போதைய முதல்வர் பொம்மை..

மும்பை
"மும்பை கர்நாடகா" பெயரை, கிட்டூர் கர்நாடகா என்று முதல்வர் பொம்மை மாற்றி அறிவித்துள்ளார்.. வடகன்னடா, பெலகாவி, தார்வாட், விஜயபுரா, பாகல்கோட்டே, காடக், ஹவேரி மாவட்டங்களை உள்ளடக்கியதுதான் மும்பை கர்நாடகா.. இவைகள் அப்படியே கிட்டூர் கர்நாடகா என்று மாற்றப்படுகிறது. மும்பை கர்நாடகா, பாம்பே கர்நாடகா என்றெல்லாம் சொல்ல விருப்பமில்லாமல் இந்த பெயரை வைத்துள்ளதாக கூறப்படுகிறது.

பெயர் மாற்றம்
இதுகுறித்து முதல்வர் பொம்மை சொல்லும்போது, இனியும் ஏன் மும்பை கர்நாடகா என்று அழைக்க வேண்டும்... அப்படி அழைப்பதால் எந்தவிதமான பிரயோஜனமும் இல்லை.. இப்படிஒரு பெயரை 1956-லேயே நாம் வைத்திருக்க வேண்டும்.. ஆனால் செய்யாமல் விட்டுவிட்டோம்" என்றார். கிட்டூர் என்பது பெலகாவி மாவட்டத்தில்தான், வீரமங்கை ராணி சென்னம்மா ஆண்டு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications