பாஜகவுக்கு இங்கு நடந்ததை நாடு முழுக்க பிரதிபலிப்போம்.. கர்நாடகா மண்ணில் கால் வைத்த ஸ்டாலின் ட்வீட்!
பெங்களூர்: எதிர்க்கட்சிகளின் 2வது கூட்டம் பெங்களூரில் இன்றும் நாளையும் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் கலந்து கொள்ள தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று காலை விமானம் மூலம் சென்னையில் இருந்து பெங்களூருக்குச் சென்றார். பெங்களூர் சென்றடைந்த முதல்வர் ஸ்டாலின், "பாஜகவின் ஜனநாயக விரோத தந்திரங்களுக்கு எதிராக நாம் ஒன்றுபட்டு நிற்க வேண்டியது அவசியம்." எனத் தெரிவித்துள்ளார்.
பெங்களூர் சென்றடைந்த ஸ்டாலின்: பாஜகவுக்கு எதிரான எதிர்கட்சிகளின் 2வது ஆலோசனைக் கூட்டம் பெங்களூரில் இன்று தொடங்குகிறது. இதில் காங்கிரஸ், திமுக உள்ளிட்ட 25க்கும் மேற்பட்ட கட்சிகள் பங்கேற்கின்றன. அடுத்த ஆண்டு நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தலில், பாஜகவுக்கு எதிராக எதிர்க்கட்சிகளை ஓரணியில் திரட்டும் முயற்சி நடந்து வருகிறது. எதிர்க்கட்சிகளின் முதல் ஆலோசனைக் கூட்டம் பீகார் மாநிலம் பாட்னாவில் கடந்த மாதம் 23ஆம் தேதி நடைபெற்றது.

இந்நிலையில் பெங்களூரில் நடைபெறும் எதிர்கட்சிகளின் கூட்டத்தில் பங்கேற்பதற்காக சென்னையில் இருந்து இன்று காலை விமானம் மூலம் புறப்பட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பெங்களூர் சென்றடைந்தார். அங்கு அவரை கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார், காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டு ராவ் ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.
ஸ்டாலின் பரபர ட்வீட்: தொடர்ந்து முதல்வர் ஸ்டாலின் ட்விட்டரில் ஒரு பதிவை வெளியிட்டார். அதில், "பீகார் மாநிலம் பாட்னாவில் நடைபெற்ற மதசார்பற்ற ஜனநாயக சக்திகளின் கூட்டத்திற்கு பிறகு இப்போது அழகிய நகரமான பெங்களூரில் கூடியிருக்கிறோம். இந்த முக்கியமான நேரத்தில் பாஜகவின் ஜனநாயக விரோத தந்திரங்களுக்கு எதிராக நாம் ஒன்றுபட்டு நிற்க வேண்டியது அவசியம்.
பாஜகவின் பிற்போக்கு அரசியலை மக்கள் நிராகரித்ததற்கு சமீபத்திய கர்நாடகா சட்டமன்ற தேர்தல் முடிவு ஒரு வலிமையான உதாரணம். இதை தேசிய அளவில் பிரதிபலிப்போம். ஒன்றாக இணைந்து ஜனநாயகத்தை பாதுகாப்போம். நமது சிறந்த தேசத்திற்கு பிரகாசமான எதிர்காலத்தை உறுதி செய்வோம்." எனத் தெரிவித்துள்ளார்.
ஸ்டாலின் பேட்டி: முன்னதாக பெங்களூர் செல்வதற்கு முன்பாக சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த முதல்வர் ஸ்டாலின், "மத்தியில் ஆட்சி பொறுப்பில் உள்ள பாஜகவை வீழ்த்த வேண்டும் என்று என்பதற்காக இந்தியாவில் உள்ள பல்வேறு எதிர்கட்சிகள் ஒன்று சேர்ந்து ஏற்கனவே பீகார் மாநிலம் பாட்னாவில் எதிர்க்கட்சிகளின் கூட்டம் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து இன்றும், நாளையும் 2 நாட்கள் கர்நாடகாவின் பெங்களூரில் எதிர்க்கட்சி தலைவர்களின் கூட்டம் நடைபெற உள்ளது.
இந்தக் கூட்டத்தில் 24 கட்சிகளின் தலைவர்கள் கலந்து கொள்கின்றனர். பாஜகவை வீழ்த்த பீகார், கர்நாடகா என தொடர்ந்து கூட்டப்படக் கூடிய கூட்டம், பாஜக ஆட்சிக்கு எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது. அதன் வெளிப்பாடாகத்தான் அமலாக்கத்துறை ஏவப்படப்பட்டுள்ளது. ஏற்கனவே வட மாநிலங்களில் இந்த பணியை செய்து கொண்டு இருந்தவர்கள், தற்போது தமிழ்நாட்டிலும் வேலையை ஆரம்பித்துள்ளனர்.

பாஜகவின் ரெய்டு அரசியல்: அமலாக்கத்துறை சோதனை குறித்து திமுக கிஞ்சித்தும் கவலைப்படவில்லை. உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி வீட்டில், அமலாகத்துறை சோதனை நடத்தப்பட்டு வருகிறது. இந்த வழக்கு ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது, புனையப்பட்ட பொய் வழக்கு. 13 ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்ட வழக்கு. 10 ஆண்டுகால அதிமுக ஆட்சி நடைபெற்றபோது, இந்த வழக்கில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
அண்மையில் பொன்முடி மீது கடந்த கால ஆட்சியில் சுமத்தப்பட்ட 2 வழக்குகளில் இருந்து அவர் விடுதலை செய்யப்பட்டுள்ளார். இந்த வழக்கையும் சட்ட ரீதியாக அவர் எதிர்கொள்வார். இதற்கெல்லாம் நாடாளுமன்ற தேர்தலில் பதில் அளிக்க மக்கள் தயாராக உள்ளார்கள். இது எதிர்க்கட்சிகளின் கூட்டத்தின் நோக்கத்தை திசை திருப்ப பாஜக செய்துகொண்டிருக்கும் தந்திரம்" என்று தெரிவித்தார்.
-
சட்டசபை தேர்தலில் முன்னாள் அமைச்சர் பொன்முடி போட்டியில்லை? திருக்கோவிலூர் தொகுதியில் மகனுக்கு சீட் -
"டெல்லி என்ன.. அமெரிக்காவே மிரட்டினாலும்..” டிடிவி தினகரனுக்கு ஓபிஎஸ் கொடுத்த பதில்! -
சிபிஎம் கட்சிக்கு 5 தொகுதிகள்தான்! கட் அன்ட் ரைட்டாக சொன்ன ஸ்டாலின்! பெ.சண்முகம் வைத்த டிமாண்ட் -
கண் சிவந்த ஸ்டாலின்.. அறிவாலயத்தில் இருந்து பறந்த உத்தரவு.. அதிர்ச்சியில் திமுக நிர்வாகிகள் -
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர் -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா!












Click it and Unblock the Notifications