ரிலீஸுக்கு முன்பே விஸ்வரூபம் எடுக்கும் "Thug life"! கமல் மீது கன்னட அமைப்புகள் போலீஸில் புகார்
பெங்களூர்: தமிழில் இருந்துதான் கன்னடம் தோன்றியது என பேசி, கன்னடர்களின் உணர்வுகளை புண்படுத்தியதாக கன்னட அமைப்பின் நிர்வாகி பிரவீன் ரெட்டி, கமல்ஹாசன் மீது பெங்களூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழில் இருந்துதான் கன்னடம் வந்தது என கமல்ஹாசன் கூறியதற்கு எதிர்ப்பு தெரிவித்த கன்னட அமைப்பின் நிர்வாகி பிரவீன் ரெட்டி, கமல்ஹாசன் கன்னடர்களின் உணர்வுகளை புண்படுத்திவிட்டார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெங்களூரில் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.
இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் நடித்த தக் லைஃப் திரைப்படம் வரும் ஜூன் 5ஆம் தேதி ரிலீஸாகிறது. இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த சனிக்கிழமை சென்னையில் நடந்தது.
நடிகர் சிவராஜ்குமார்
இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக நடிகர் சிவராஜ்குமார் பங்கேற்றார். அவரை வைத்துக் கொண்டே கமல்ஹாசன் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. விழாவில் கமல்ஹாசன் பேசுகையில், கன்னட நடிகர் ராஜ்குமாருடைய குடும்பம் கர்நாடகாவில் இருக்கும் எனது குடும்பம்.
தமிழில் இருந்து பிறந்ததுதான் கன்னடம்
தமிழில் இருந்து பிறந்ததுதான் கன்னடம். அதை நீங்களும் (சிவராஜ்குமார்) ஒப்புக் கொள்வீர்கள் என நம்புகிறேன் என கமல் தெரிவித்தார். அதை ஆமோதிப்பது போல் நடிகர் சிவராஜ்குமாரும் தலையசைத்தார். கமல்ஹாசனின் இந்த பேச்சுக்கு கர்நாடக அமைப்பினர் கடும் எதிர்ப்பு நிலவியது.
பெங்களூர் வணிகவளாகம்
பெங்களூரில் உள்ள வணிக வளாகங்களில் வைக்கப்பட்டிருந்த தக் லைஃப் படத்தின் விளம்பர பதாகைகளை கிழித்து எறிந்தனர். தக் லைஃப் படத்தை புறக்கணிக்க வேண்டும், கர்நாடகாவில் இந்த படத்தை ரிலீஸ் செய்யக் கூடாது என போர்க்கொடி உயர்த்தியுள்ளனர்.
கர்நாடகா பாஜக தலைவர்
இந்த நிலையில் கர்நாடகா பாஜக தலைவர் விஜேயந்திரா கூறியிருப்பதாவது: கமல்ஹாசன் என்ன வரலாற்று ஆசிரியரா, அவர் எந்த மொழியில் இருந்து எந்த மொழி பிறந்தது என கூற முடியாது. அவரது பேச்சின் காரணமாக 6.5 கோடி கன்னடர்களின் மனம் புண்பட்டுவிட்டது. எனவே அவர் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும்.
அவமானப்படுத்திய கமல்
இந்து மதத்தை கமல் அவமதித்துவிட்டார். தனது படங்களின் மூலம் இந்துக்களின் மனதையும் புண்படுத்துகிறார். இதை ஒரு போதும் ஏற்க முடியாது. கன்னடர்கள் தங்களின் நிலம், மொழி, மக்கள், நீர் ஆகியவற்றை ஒரு போதும் விட்டுத் தர மாட்டார்கள் என்பதை கமலுக்கு நினைவுப்படுத்துகிறோம் என கூறியிருந்தார்.
சித்தராமையா
அது போல் கர்நாடகாவின் முதல்வர் சித்தராமையா கூறுகையில் கமல்ஹாசன் பாவம். அவருக்கு கன்னட மொழி குறித்து தெரியவில்லை என தெரிவித்திருந்தார். இந்த பிரச்சினை விஸ்வரூபம் எடுத்த நிலையில் கமல்ஹாசன் கேரளாவில் செய்தியாளர்களை சந்தித்தார்.
அரசியல்வாதிகள்
அப்போது அவர் அரசியல்வாதிகள் மொழி குறித்து கருத்து சொல்வதற்கு தகுதியற்றவர்கள். மொழியியல் அறிஞர்கள், தொல்லியல் ஆய்வாளர்கள், வரலாற்று ஆசிரியர்கள் அது பற்றி கருத்து சொல்லட்டும். தமிழகத்தில் எனக்கு நெருக்கடி வந்தபோது கன்னடர்கள் தங்களது ஊருக்கு வருமாறு என்னை அழைத்தார்கள். அன்பின் காரணமாகவே நான் அவ்வாறு கூறினேன். அன்பு எப்போதும் மன்னிப்பை எதிர்பார்க்காது என்றார்.
விருமாண்டி
ஏற்கெனவே விருமாண்டி என்ற திரைப்படத்தின் போது குறிப்பிட்ட ஜாதியின் பெயரை அந்த படத்திற்கு வைத்ததாக பிரச்சினை எழுந்ததை அடுத்து அந்த பெயரை நீக்கிவிட்டு விருமாண்டி என கமல் பெயர் வைத்தார். அது போல் தசாவதாரம் படத்தின் போது பெருமாள் சிலையை கடலில் தூக்கி போடும் சீனுக்கும் அவருக்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பின.
-
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
பெங்களூரின் இன்றைய சிக்கலுக்கு ஒரே தவறு தான் காரணம்.. முதல்வர் விஜய் செய்யவே கூடாத தவறு -
எபோலா வைரஸ்: உகாண்டாவில் இருந்து பெங்களூர் வந்த பெண்.. மத்திய சுகாதாரத்துறை ரிப்போர்ட்! -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்!












Click it and Unblock the Notifications