பதவியேற்பு விழா ஏற்பாடுகள் நிறுத்தம்.. ‘கடைசி அஸ்திரம்’.. காங்கிரஸ் தலைமை கையில் எடுக்கும் பிளான்!
பெங்களூர் : கர்நாடகாவின் அடுத்த முதலமைச்சரை தேர்ந்தெடுப்பதில் இழுபறி நீடித்து வருவதற்கு மத்தியில் நாளை பதவியேற்பு விழா நடைபெறும் வகையில் கண்டீரவா மைதானத்தில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வந்தன. ஆனால், முதலமைச்சரை தேர்வு செய்வதில் இன்னும் குழப்பம் நிலவுவதால், பதவியேற்பு விழா ஏற்பாடுகள் அப்படியே நிறுத்தப்பட்டுள்ளன.
கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் 135 இடங்களில் வென்ற காங்கிரஸ் கட்சி, அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்க இருக்கிறது. அடுத்த முதலமைச்சர் யார் என்பதில் முன்னாள் முதல்வர் சித்தராமையா, கர்நாடகா மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமார் இடையே நேரடி போட்டி ஏற்பட்டுள்ளது.
கர்நாடக முதலமைச்சரை தீர்மானிக்க கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த காங்கிரஸ் கட்சியின் எம்எல்ஏக்கள் கூட்டத்தில் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு முதலமைச்சரை தேர்வு செய்யும் பொறுப்பை ஒப்படைத்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

முதல்வர் ரேஸ் : அடுத்த முதலமைச்சராக யாரை அறிவிப்பது என்பது குறித்து டெல்லியில் கட்சியின் மூத்த நிர்வாகிகள், ராகுல் காந்தி உள்ளிட்டோருடன் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ஆலோசனை நடத்தினார். ராகுல் காந்தியின் இல்லத்தில் முதலில் சித்தராமையாவுடன் ஆலோசனை நடத்தப்பட்டது. டிகே சிவக்குமாருடனும் காங்கிரஸ் தலைமை பேச்சுவார்த்தையில் ஈடுபட்டது.
மூத்த எம்எல்ஏக்கள் சித்தராமையாவுக்கு ஆதரவு அளிப்பதில் உறுதியாக இருப்பதால், அவரையே காங்கிரஸ் தலைமை தேர்ந்தெடுக்க உள்ளதாகவும், டிகே சிவக்குமாருக்கு 2024 நாடாளுமன்றத் தேர்தல் வரை மாநில காங்கிரஸ் தலைவர் பதவி நீட்டிக்கப்படுவதாகவும் காங்கிரஸ் வட்டாரத்தில் தகவல்கள் வெளியாகின. ஆனால், இதற்கு டிகே சிவக்குமார் ஒப்புக்கொள்ளவில்லை.
இதையடுத்து டி.கே.சிவகுமாருக்கு காங்கிரஸ் தலைமை இரண்டு ஆப்ஷன்களை வழங்கியது. டிகே சிவக்குமாருக்கு துணை முதல்வர் பதவியை வழங்குவது அதில் முதல் சாய்ஸ். காங்கிரஸ் மாநில தலைவராகவும் டிகேஎஸ் தொடரலாம். அதோடு, அமைச்சரவையில் முக்கிய துறைகளும் வழங்கப்படும் என்ற யோசனைகளை வழங்கியது காங்கிரஸ் தலைமை.
மறுத்த டிகே சிவக்குமார் : எனினும், டி.கே.சிவக்குமார் இந்த வாய்ப்பையும் ஏற்கவில்லை என்று தெரிகிறது. இதையடுத்து, 'அதிகாரப் பகிர்வு' எனும் அடுத்த ஆப்ஷன் கொடுக்கப்பட்டது. அதாவது, முதல் பாதியில் சித்தராமையா முதலமைச்சராகவும், அடுத்த பாதி ஆட்சிக்காலத்தில் டி.கே.சிவகுமாருக்கு முதலமைச்சர் பதவி வழங்கப்படும் என்ற யோசனை முன்வைக்கப்பட்டது.
டிகே சிவக்குமார் அதிகாரப் பகிர்வு ஒப்பந்தத்திற்கு ஒப்புக்கொண்டுள்ளார். ஆனால், ஐந்தாண்டு பதவிக்காலத்தின் முதல் பாதியில் முதலமைச்சர் பதவியை விரும்புகிறாராம். 2024 லோக்சபா தேர்தலில் காங்கிரசுக்கு சாதகமான நிலை ஏற்பட்டால், சித்தராமையா தனது பதவியை விட்டுக்கொடுக்க மாட்டார் என டி.கே.சிவக்குமார் தரப்பு கருதுகிறதாம்.
2019-ல் ஆட்சி கவிழ்ந்த பிறகு கட்சியை மீண்டும் கட்டியெழுப்பியது, சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸை அமோக வெற்றியை நோக்கி அழைத்துச் சென்றது உள்பட கடந்த ஐந்தாண்டுகளாக தனது பணிகளை மேற்கோள் காட்டி டி.கே.சிவக்குமார் தனக்கு முதலமைச்சர் பதவியை வலியுறுத்தி வருகிறார். இதனால், காங்கிரஸ் தலைமை தலைவலியில் ஆழ்ந்துள்ளது.
காங்கிரஸ் தலைமை நிதானம் : கர்நாடகா முதல்வரின் பெயரை அறிவிப்பதில் காங்கிரஸ் தலைமை அவசரப்படவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன. கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சியின் மகத்தான வெற்றிக்கு சித்தராமையா, டிகே சிவக்குமார் இருவரின் பங்கும் மிக அதிகம். எனவே, இந்த விவகாரத்தில் யாருக்கும் அதிருப்தி ஏற்படாத வகையில் சிக்கலை முடிக்க நினைக்கிறது காங்கிரஸ் தலைமை. அதுவே 2024 தேர்தலுக்கும், காங்கிரஸின் எதிர்காலத்திற்கும் நல்லது எனக் கருதுகிறது.

சித்தராமையா மற்றும் டி.கே.சிவக்குமார் இருவரும் காங்கிரஸ் தலைமை முடிவை அறிவிக்கும் வரை டெல்லியிலேயே தங்கியிருப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இரு தலைவர்களும் டீல்களுக்கு ஒப்புக்கொள்ள மறுத்து வருவதால், புதிய ஆப்ஷன்கள் உருவாக்கப்பட்டு வருவதாக டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையே சித்தராமையா கர்நாடகா முதலமைச்சராக நாளை பிற்பகல் 3.30 மணிக்கு பெங்களூரில் உள்ள கண்டிரவா மைதானத்தில் பதவியேற்க இருப்பதாக ஒரு தகவல் வெளியானது. அதனை உறுதி செய்யும் வகையில் கண்டிரவா மைதானத்தில், பதவியேற்பு விழாவுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்றன. பெங்களூருவில் உள்ள சித்தராமையாவின் இல்லத்தின் முன் வைக்கப்பட்டிருந்த கட் அவுட்டிற்கு பாலாபிஷேகம் செய்து சித்தராமையாவை புகழ்ந்து அவரது ஆதரவாளர்கள் கோஷங்கள் எழுப்பினர்.
ஏற்பாடுகள் நிறுத்தம் : ஆனால், கர்நாடக முதல்வர் பதவிக்கான வேட்பாளரை தேர்வு செய்வது குறித்து காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே இறுதி முடிவை எடுப்பார் என்று காங்கிரஸ் பொதுச் செயலாளரும் கர்நாடகாவுக்குப் பொறுப்பாளருமான ரந்தீப் சிங் சுர்ஜேவாலா தெரிவித்தார். 24 மணி நேரத்திற்குள் புதிய முதல்வரும், 48 முதல் 72 மணி நேரத்திற்குள் புதிய மாநில அமைச்சரவையும் அறிவிக்கப்படும் என்றார்.
இந்நிலையில், கண்டிரவா மைதானத்தில் செய்யப்பட்டு வந்த மேடை அமைக்கும் பணிகள் உள்ளிட்டவை திடீரென கைவிடப்பட்டன. இன்று மதியம் மைதான கேலரியில் காங்கிரஸ் கொடிகள் பறக்க விடப்பட்டிருந்த நிலையில், அவையும் அகற்றப்பட்டுள்ளன. இதனால், கர்நாடகா முதலமைச்சர் பதவியேற்பும், தேர்வும் தாமதமாவது உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்னும் ஓரிரு நாட்கள் தாமதமாகலாம் என்றும் தெரிகிறது.
கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார், பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் இல்லத்திற்குச் சென்று அவரைச் சந்தித்தார். இந்தச் சந்திப்பு குறித்துப் பேசிய டிகே சிவக்குமார், "சொல்வதற்கு ஒன்றும் இல்லை... முடிவை தலைமையிடம் விட்டுவிட்டோம்.. நான் ஓய்வெடுக்கப் போகிறேன்" எனத் தெரிவித்தார்.

இதையடுத்து, டெல்லியில் உள்ள காங்கிரஸ் கட்சியின் கர்நாடக மாநில பொறுப்பாளர் ரந்தீப் சுர்ஜேவாலா மற்றும் காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் ஆகியோரை சித்தராமையா சந்தித்தார். அதன்பிறகு கட்சியின் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால், மல்லிகார்ஜுன கார்கேவை சந்திப்பதற்காகச் சென்றார்.
அஸ்திரம் : மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி என தலைவர்கள் தொடர்ந்து பேசினாலும், டிகே சிவக்குமார் விட்டுக்கொடுக்க தயாராக இல்லாத நிலையில், சோனியா காந்தி மூலம் பேச காங்கிரஸ் தலைமை திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.
சிம்லாவில் இருக்கும் சோனியா காந்தி தலையிட்டு சிவக்குமாரை சம்மதிக்க வைப்பார் என்று கட்சி மேலிடம் நம்புகிறது. மே 20ஆம் தேதி சோனியா டெல்லி திரும்புவார் என்று கட்சி வட்டாரங்கள் தெரிவித்தாலும், அவர் முன்னதாக வரக்கூடும் என்று கூறப்படுகிறது.
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications