Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

543 சீட் இருக்கட்டும்! பெங்களூரில் இந்த 1 சீட்டில் தோற்கவே கூடாது! மொத்த பவரையும் இறக்கிய காங்கிரஸ்

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: பெங்களூர் தெற்கு தொகுதியில் வெற்றிபெற வேண்டும் என்பதற்காக காங்கிரஸ் கட்சி தீவிரமாக பணிகளை செய்து வருகிறது. அங்கே மொத்தமாக காங்கிரஸ் நிர்வாகிகள், டாப் தலைவர்கள் களமிறக்கப்பட்டு உள்ளனர்.

கர்நாடகாவில் உள்ள 28 மக்களவைத் தொகுதிகளில் ஒன்றான பெங்களூரு தெற்கில் பாரதிய ஜனதா கட்சியின் தேஜஸ்வி சூர்யா எம்பியாக உள்ளார் . 2019 இந்தியப் பொதுத் தேர்தலில், இந்திய தேசிய காங்கிரஸின் பி கே ஹரிபிரசாத்தை எதிர்த்து பாஜகவின் சூர்யா 3,31,192 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். பெங்களூர் தெற்கு மக்களவைத் தொகுதிக்கான தேர்தல் 2024 ஏப்ரல் 26ஆம் தேதி (கட்டம் 2) நடத்தப்பட உள்ளது. ஜூன் 4ஆம் தேதி முடிவுகள் எண்ணப்பட்டு அறிவிக்கப்படும்.

Congress brings all its mighty power against Tejasvi Surya in Bangalore South for Sowmya Reddy

இரண்டாம் கட்ட தேர்தல்: ஏப்ரல் 26 ஆம் தேதி மக்களவைத் தேர்தலின் இரண்டாம் கட்டத் தேர்தல் நடக்கிறது. இதற்காக பல்வேறு மாநிலங்களில் மிக தீவிரமாக பிரச்சாரங்கள் நடந்து வருகின்றன. 13 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 89 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.

இரண்டாம் கட்டத் தேர்தலில் 13 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 88 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கு மொத்தம் 2,633 வேட்புமனுக்களை தேர்தல் ஆணையம் பெற்றுள்ளது. 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இருந்து 1,206 வேட்பாளர்கள், மணிப்பூர் பிசியில் இருந்து 4 வேட்பாளர்கள் இந்த கட்டத்தில் தேர்தலில் போட்டியிடுவார்கள் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்தது.

அஸ்ஸாம் (5), பீகார் (5), சத்தீஸ்கர் (3), கர்நாடகா (14), கேரளா (20), மத்தியப் பிரதேசம் (7), மகாராஷ்டிரா (8), உத்தரப் பிரதேசம் (8), ராஜஸ்தான் (13), மற்றும் மேற்கு வங்கம் (3),கேரளா 20, ராஜஸ்தானில் 13தொகுதிகளுக்கு இரண்டாம் கட்டமாக ஏப்ரல் 26-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

பெங்களூர் தெற்கு: 2024 மக்களவைத் தேர்தலில் பெங்களூரு தெற்கு தொகுதியில் பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த தேஜஸ்வி சூர்யா மற்றும் காங்கிரஸின் சௌமியா ரெட்டி ஆகியோர் இடையே கடுமையான போட்டி நிலவுகிறது. 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில், தேஜஸ்வி சூர்யா 739229 வாக்குகளைப் பெற்றார், அதே நேரத்தில் அவரை எதிர்த்துப் போட்டியிட்ட INCயின் பி கே ஹரிபிரசாத் 408037 வாக்குகளைப் பெற்றார், இதன் விளைவாக சூர்யாவுக்கு 331192 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி கிடைத்தது.

தற்போது காங்கிரசின் முன்னாள் எம்எல்ஏ சௌமியா ரெட்டி அங்கே களமிறக்கப்பட்டு உள்ளார். பெங்களூர் தெற்கில் மக்கள் இடையே நலன் அபிமானம் பெற்ற சௌமியா ரெட்டி பிரச்சாரத்தில் கவனம் பெற்று வருகிறார்.

முழு பவரை இறக்கிய காங்கிரஸ்: 543 சீட் இருக்கட்டும்.. இந்த ஒரு சீட்டில் என்ன ஆனாலும் தோற்க கூடாது.. தேஜஸ்வி சூர்யாவை எப்படியாவது தோல்வி அடைய செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் தீவிரமாக பணியாற்றி வருகிறது.

பெங்களூர் தெற்கு பகுதியில் பிரச்சாரத்திற்கு துணை முதல்வர் டிகே சிவக்குமார் தனி கவனம் செலுத்தி பணிகளை செய்தார். அங்கு மட்டும் கடந்த ஒரு மாதம் காங்கிரஸ் சிறப்பான பிரசாரத்தை நடத்தியது. தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி முதல் காங்கிரசின் பிரியங்கா காந்தி வரை பிரசாரத்துக்கு வந்துள்ளனர்.

டிகே சிவக்குமார் சிறப்பு கவனம் செலுத்தி தேஜஸ்வியை தோற்கடிக்க எல்லா பணிகளையும் செய்தார். கடந்த முறை சட்டசபை தேர்தலில் ஜெயநகரில் சௌமியா வெற்றிபெற்று கடைசியில் அவர் தோல்வி அடைந்ததாக அறிவிக்கப்பட்டார். இதற்காக இரவோடு இரவாக சௌமியா விட்ட கண்ணீர்.. டிகே சிவக்குமார் நேரடியாக களத்திற்கே சென்று வாக்கு வாதம் செய்தது என்று பெரிய களேபரம் நடந்தது.

அந்த கண்ணீருக்கு பதில் அளிக்க வேண்டும்.. கடந்த முறை ஜெயநகருக்கு நேர்ந்த அநீதிக்கு நியாயம் கேட்க வேண்டும் என்று சௌமியா ரெட்டி பிரச்சாரம் செய்தது பெரிய அளவில் கவனம் பெற்றுள்ளது. தேஜஸ்வி கொஞ்சம் ஆணவமாக இருப்பதாக கருதும் காங்கிரஸ் கட்சியினர் ஏதாவது செய்து இவரை வீழ்த்த வேண்டும் என்று நாடு முழுக்க இருக்கும் டாப் காங்கிரஸ் தலைவர்களை இங்கே மொத்தமாக களமிறக்கி உள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+