பாஜகவின் “வீக்னஸ்”.. 2 ஜாதிகளுக்கு காங்கிரஸ் “ஸ்கெட்சு”! கர்நாடகாவில் இவ்வளவு பேருக்கு வாய்ப்பா?
பெங்களூர்: கர்நாடக மாநில சட்டசபைத் தேர்தலில் போட்டியிடும் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் கட்சி தற்போது வெளியிட்டு இருக்கும் நிலையில், பாஜகவுக்கு குறைவாக ஆதரவு இருக்கும் அம்மாநிலத்தின் 2 பெரிய சமூகங்களை சேர்ந்த வேட்பாளர்களுக்கு அதிகளவில் வாய்ப்புகள் வழங்கப்பட்டு இருக்கின்றன.
பசவராஜ் பொம்மை தலைமையிலான கர்நாடகா மாநில பாஜக அரசின் பதவிகாலம் நிறைவடைய உள்ளதை தொடர்ந்து அம்மாநிலத்துக்கான
சட்டசபைத் தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் அறிவித்து இருக்கிறது. அதன்படி, மே மாதம் 10 ஆம் தேதி அம்மாநிலத்தில் சட்டசபைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. மே 13 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

இதில் ஆட்சியை தக்க வைக்க ஆளும் பாஜக பல்வேறு வியூகங்களை கையில் எடுத்து செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக அம்மாநிலத்திற்கு இந்த ஆண்டு மட்டும் 5 க்கும் மேற்பட்ட முறை பிரதமர் நரேந்திர மோடி பயணம் சென்று பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்து இருக்கிறார். மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, மத்திய அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் என பலர் கர்நாடகாவின் பல்வேறு மாவட்டங்களுக்கு சென்று வாக்கு சேகரித்து வருகிறார்கள்.
காங்கிரஸ் வேட்பாளர்கள்: மறுபக்கம் காங்கிரஸ், மதசார்பற்ற ஜனதா தளம் ஆகிய கட்சிகளும் தேர்தல் பிரச்சாரங்களில் குதித்துள்ளன. 224 தொகுதிகளை கொண்ட கர்நாடகாவில் 113 இடங்களை பிடிக்கும் கட்சியே ஆட்சியை பிடிக்கும். இந்த நிலையில் காங்கிரஸ் கட்சி கர்நாடகாவில் போட்டியிடும் 2 கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு உள்ளது. கடந்த மார்ச் 25 ஆம் தேதி 124 பேர்களை கொண்ட முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் கட்சி வெளியிட்டு உள்ளது.
அதில் சித்தராமையா வருணா தொகுதியிலும், டிகே சிவக்குமார் கனபுரா தொகுதியிலும் காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மகன் பிரயங் கார்கே சித்தார்ப்பூர் தொகுதியில் நிறுத்தப்பட்டு உள்ளன. இந்த நிலையில் இன்று 42 பேர் கொண்ட 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் கட்சி வெளியிட்டு இருக்கிறது. அதில் பாஜகவில் இருந்து அண்மையில் விலகிய காங்கிரஸில் இணைந்த பாபுராவ் சிசன்சூர், என்.ஒய் கோபாலகிருஷ்ணா ஆகியோருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டு உள்ளது.
2 சமூகங்கள்: இதுவரை 166 வேட்பாளர்களின் பெயர்களை காங்கிரஸ் கட்சி அறிவித்து இருக்கும் நிலையில், 58 வேட்பாளர்களை கொண்ட 3 வது பட்டியலை இந்த வாரத்திற்குள் காங்கிரஸ் கட்சி வெளியிட இருப்பதாக கூறப்படுகிறது. தற்போது வெளியிடப்பட்டு இருக்கும் 42 காங்கிரஸ் வேட்பாளர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் அம்மாநிலத்தில் பெரும்பான்மையாக வசிக்கும் 2 சமூகங்களை சேர்ந்தவர்கள்.
ஆம், எடியூரப்பாவின் லிங்காயத்து சமூகத்தை சேர்ந்த 11 பேரும், தேவகவுடாவின் வொக்காலிகா சமூகத்தை சேர்ந்த 11 பேரும் இதில் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டு உள்ளார்கள். இவர்கள் அல்லாமல், பட்டியலினத்தவர்களுக்கு சேர்ந்த 4 இடங்கள், முஸ்லிம், குருபா சமூகங்களில் தலா 3 வேட்பாளர்களும், பெஸ்டா - கொலி - மொகவீரா, வால்மீகி, மராதாவுக்கு தலா 2 இடங்களும், நாயுடு, எடிகா, ராஜ்புட், ரெட்டி சமுதாயத்தினருக்கு தலா ஒரு இடங்களும் ஒதுக்கப்பட்டு உள்ளன.

பாஜகவின் வீக்னஸ்: மொத்தமாகவே லிங்காயத் மற்றும் வொக்கலிகா சமுதாயத்தினருக்கு இந்த தேர்தலில் காங்கிரஸ் அதிக இடங்களை ஒதுக்கி இருக்கிறது. இதற்கு காரணம் அவர்களுக்கு இருக்கும் வாக்கு வங்கி மட்டுமின்றி பாஜக மீது அந்த சமுதாயத்தினர் அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது. குறிப்பாக எடியூரப்பா முதலமைச்சர் பதவியில் இருந்து விலகியது, லிங்காயத்து மட சாமியார்கள் கைது போன்ற சம்பவங்களால் அவர்கள் பாஜக எதிர்ப்பு நிலைபாட்டில் தீவிரமாக உள்ளதாக கூறப்படுகிறது.
இவர்களை கவரும் வகையில் சமீப காலமாக எடியூரப்பாவுக்கு மீண்டும் முக்கியத்துவம் வழங்கி வந்தது பாஜக தேசிய தலைமை. அதேபோல் கவுடா என்ற வொக்கலிகா சமுகத்தின் ஆதரவை பெற சமீபத்தில் கற்பனை கதாபாத்திரங்களான நஞ்சே கவுடா, உரி கவுடாவை வைத்து பாஜக பிரச்சாரம் செய்தது குறிப்பிடத்தக்கது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications