பாஜகவை புரட்டி எடுத்த லிங்காயத்து! பிஎல் சந்தோஷ் வியூகத்திற்கு சவுக்கடி? கர்நாடகாவில் கலங்கும் தாமரை
பெங்களூர்: கர்நாடக சட்டசபை தேர்தல் முடிவுகள் வெளியாகி வரும் நிலையில் காங்கிரஸ் கட்சி லிங்காயத்து இருக்கும் தொகுதிகளில் முன்னிலை வகிக்க தொடங்கி உள்ளது.
கர்நாடக சட்டசபை தேர்தல் முடிவுகள் வெளியாகி வருகின்றன. காலை 8 மணியில் இருந்து வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன.
கர்நாடக மாநிலத்தில் உள்ள 224 தொகுதிகள் உள்ளன. அங்கே மெஜாரிட்டி பெற 113 இடங்களில் வெற்றிபெற வேண்டும்.

இந்த நிலையில், பெரும் எதிர்பார்ப்பிற்கு இடையில் கர்நாடக சட்டசபை தேர்தல் முடிவுகள் இன்று வெளியாக உள்ளன. அங்கே வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. தற்போது தபால் வாக்குகள் எண்ணி முடிக்கப்பட்டு உள்ளன..
தபால் வாக்குகளில் பாஜக முன்னிலை பெற்ற நிலையில் இவிஎம் வாக்கில் காங்கிரஸ் முன்னிலை வகிக்கிறது. தபால் வாக்குகள் முடிவடைந்து வாக்குப் பதிவு இயந்திரங்களில் வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. வாக்குப்பதிவு எந்திர வாக்குகளில் இதுவரை 1 ரவுண்டு வாக்குகள் எண்ணப்பட்டு உள்ளன.
பாஜக 85 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. காங்கிரஸ் 109 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. ஜேடிஎஸ் மொத்தம் 25 இடங்களில் முன்னிலை வகிக்கிறது.
அங்கே லிங்காயத்து ஆதரவு, ஹிஜாப் விவகாரம், 40 சதவிகிதம் கமிஷன் உள்ளிட்ட காரணங்கள் பாஜக பின்னடைவை சந்தித்து இருப்பதாக கருதப்படுகிறது. கர்நாடக அரசியல் 2024 லோக்சபா தேர்தல், தென்னிந்திய அரசியலை நிர்மாணிக்கும் என்பதால் இந்த தேர்தல் முடிவுகள் அதிக கவனம் பெற்றுள்ளது.
அங்கே லிங்காயத்து ஆதரவு காங்கிரஸ் கட்சிக்கு சென்றது பாஜகவின் சரிவிற்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. கர்நாடக சட்டசபை தேர்தல் முடிவுகள் வெளியாகி வரும் நிலையில் காங்கிரஸ் கட்சி லிங்காயத்து இருக்கும் தொகுதிகளில் முன்னிலை வகிக்க தொடங்கி உள்ளது. முதல் சுற்றில்,

லிங்காயத் பகுதி:
காங்கிரஸ் - 34
பாஜக - 26 இடங்களில் முன்னிலை வகிக்கிறது.
அதன்படி பெரும்பான்மை இடங்களில் காங்கிரஸ் கட்சியே முன்னிலை வகிக்கிறது.
கர்நாடகாவில் லிங்காயத்துகள் மிகவும் வலிமையான ஜாதி பிரிவினர். லிங்காயத்துகள் பெருமளவில் வட கர்நாடகாவில்தான் உள்ளனர். அங்கே இருக்கும் பெலகாவி, தார்வாட் மற்றும் கடக் மாவட்டங்களில் அவர்கள் அதிகம் உள்ளனர்.
அதேபோல் அவர்கள் பாகல்கோட், பிஜாப்பூர், குல்பர்கா, பிதார் மற்றும் ராய்ச்சூர் ஆகிய இடங்களிலும் கணிசமான அளவில் உள்ளனர். மேலும் தெற்கு கர்நாடகாவிலும் குறிப்பிட்ட சில தொகுதிகளில் முடிவுகளை தீர்மானிக்கும் சக்திகளாக உள்ளனர். குறிப்பாக பெங்களூர், மைசூர் மற்றும் மாண்டியாவில் அதிக எண்ணிக்கையில் வாழ்கின்றனர்.
லிங்காயத்துகள் பொதுவாக வாக்குகளிக்கும் விதம்தான் அங்கே தேர்தல் முடிவுகளை தீர்மானிக்கும் சக்தியாக உள்ளது. இந்த நிலையில்தான் அங்கே தேர்தலுக்கு முன் வீர சைவ லிங்காயத்துகள் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு அளிப்பதாக அறிவித்து உள்ளனர்.
காங்கிரஸ் தலைவரும், முக்கிய லிங்காயத் தலைவருமான ஜெகதீஷ் ஷெட்டர், ஹுப்பாலியில் உள்ள லிங்காயத்து வீர சைவ அமைப்பின் தலைவர்களை சந்தித்து காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு கோரினார்.
இந்த நிலையில்தான் தேர்தலுக்கு ஒரு வாரத்திற்கு முன் வீர சைவ லிங்காயத்துகள் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு அளிப்பதாக அறிவித்து இருந்தனர். லிங்காயத் வாக்குகள் பொதுவாக கர்நாடக மாநிலத்தில் தேர்தல் முடிவுகளை தீர்மானிக்கும் முக்கிய காரணியாக இருந்து வருகிறது.
அவர்கள் பொதுவாக பாஜகவிற்கு வாக்களித்து வந்த நிலையில்தான் தற்போது காங்கிரசுக்கு ஆதரவு தெரிவித்து உள்ளனர். இது கண்டிப்பாக தேர்தலில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். இவர்கள் பெரும்பான்மையாக இருக்கும் தொகுதிகள் பாஜகவின் கோட்டையாக இருந்தன. இப்போது அவை காங்கிரஸ் பக்கம் செல்லும் வாய்ப்புகள் உள்ளன.

பிஎல் சந்தோஷ் - அமித் ஷா வியூகம்: அங்கே தேர்தலுக்கு முன்பில் இருந்தே பாஜகவில் வரிசையாக லிங்காயத்து தலைவர்கள் ஓரம்கட்டப்பட்டு வந்தனர். அங்கே தேர்தலை தீர்மானிக்கும் லிங்காயத்து பிரிவை ஏற்கனவே பகைத்து பாடம் கற்ற வரலாறு உண்டு.
பிஎல் சந்தோஷ் - அமித் ஷா ஆகியோர் லிங்காயத்து ஜாதியினரை ஒதுக்கி மற்ற ஜாதியினருக்கு முக்கியத்துவம் கொடுத்தனர். கடந்த சில மாதங்களுக்கு முன் எடியூரப்பாவின் முதல்வர் பதவி பறிக்கப்பட்டு தேர்தல் பணிகளோடு அவர் ஓரம்கப்பட்டு உள்ளார்.
எடியூரப்பா அங்கே மிகப்பெரிய அரசியல் தலைவர். லிங்காயத்து ஜாதி கடந்து மிகப்பெரிய மக்கள் ஆதரவு உள்ளவர். அவர் ஒதுக்கப்பட்டார்.
அதேபோல் லிங்காயத்து பிரிவை சேர்ந்த முன்னாள் துணை முதல்வர் லக்ஷ்மன் சாவடி இதேபோல் ஓரம்கட்டப்பட்டு தேர்தலுக்கு முன்பாக காங்கிரசில் இணைந்து உள்ளார். அவரும் லிங்காயத்து தலைவர்தான்.
இன்னொரு லிங்காயத்து தலைவரான ஷெட்டர் காங்கிரசுக்கு தேர்தலுக்கு முன்பாக சரியாக சென்றுள்ளார்.
அங்கே லிங்காயத்துகள் ஆதரவு இன்றி வெற்றிபெறுவதற்கான சோதனை முயற்சிகளை பாஜக மேற்கொண்டது. ஆனால் இது பாஜகவிற்கு எதிராக திரும்பி உள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications