கர்நாடகாவை அள்ளும் காங்கிரஸ்.. அதுவும் "தனிப்பெரும்பான்மை" உடன்.. பாஜக எங்கே! அடப்பாவமே! புது சர்வே
பெங்களூர்: கர்நாடகாவில் இன்னும் சில வாரங்களில் தேர்தல் நடக்கவுள்ளது. இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையே கர்நாடக தேர்தல் குறித்த புதிய சர்வே முடிவுகள் இப்போது வெளியாகியுள்ளது. அதில் காங்கிரஸ் கட்சிக்கு நல்ல செய்தி இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
இந்தியாவில் அடுத்தாண்டு மக்களவை தேர்தல் நடைபெறுகிறது. அதற்கு முன்பு இந்தாண்டு மட்டும் பல மாநிலங்களில் சட்டசபைத் தேர்தல் நடைபெறுகிறது. இதில் திரிபுரா உள்ளிட்ட 3 மாநிலங்களில் ஏற்கனவே தேர்தல் முடிந்துவிட்டது.
அடுத்து நமது அண்டை மாநிலமான கர்நாடகாவில் சட்டசபைத் தேர்தல் நடைபெறுகிறது. தொடர்ச்சியாகச் சட்டசபைத் தேர்தல்களில் பாஜக வென்று வரும் நிலையில், அதைக் கர்நாடகாவிலும் தக்க வைக்க வேண்டும் என்பதே அவர்களின் விருப்பம்.

கர்நாடகா
இப்போது தென்மாநிலங்களில் பாஜக ஆட்சியில் இருக்கும் ஒரே மாநிலம் கர்நாடகா தான். இதனால் கர்நாடகாவில் எப்படியாவது ஆட்சியைத் தக்க வைக்க அவர்கள் விரும்புகிறார்கள். இருப்பினும், அது நடக்குமா என்று தெளிவாகத் தெரியவில்லை. கடந்த முறை கூட கர்நாடக சட்டசபைத் தேர்தலில் பாஜக தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த போதிலும் மெஜாரிட்டி கிடைக்கவில்லை. இதனால் உடனடியாக ஆட்சியை அமைக்க முடியவில்லை. எடியூரப்பா சில நாட்களில் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டிய சூழல் ஏற்பட்டது.

பாஜக
அங்குக் காங்கிரஸ் ஜேடிஎஸ் கூட்டணி அரசை நடைபெற்றது. சில மாதங்கள் கழித்து காங்கிரஸ் எம்எல்ஏக்கள் பாஜகவில் ஐக்கியமான பின்னரே, பாஜகவால் அங்கு ஆட்சியைப் பிடிக்க முடிந்தது. மேலும், கடந்த முறை அங்கு பாஜக தனிப்பெரும் கட்சியாக உருவெடுக்க எடியூரப்பா முக்கிய காரணமாக இருந்தார். ஆனால், இந்த முறை அவரை முதல்வர் பதவியில் இருந்து நீக்கியதன் மூலம் பாஜக பெரிய ரிஸ்க் எடுத்துள்ளது. பிரதமர் மோடி செல்வாக்கை வைத்து வெல்ல முடியும் என்று பாஜக கருதுகிறது. இருப்பினும், அது ஈஸியாக இருக்காது.

புதிய சர்வே
ஏனென்றால், இப்போது கர்நாடகாவில் இருக்கும் பசவராஜ் பொம்மை தலைமையிலான பாஜக அரசு மீது ஊழல் புகார்கள் அதிகமாக இருக்கிறது. நேற்று ஊழல் புகாரில் பாஜக எம்எல்ஏ ஒருவர் கைதும் ஆனார். இதனால் இந்த தேர்தல் அவர்களுக்குச் சவால் மிகுந்த ஒன்றாக மாறியுள்ளது. எதிர்த்தரப்பில் இருக்கும் காங்கிரஸ் சித்தராமையா மற்றும் டிகே சிவக்குமார் தலைமையில் தேர்தலை எதிர்கொள்கிறது. அவர்கள் தொடர்ந்து பாஜகவுக்கு அழுத்தம் கொடுத்து வருகிறார்கள். இதனிடையே கர்நாடகா தேர்தல் குறித்து புதிய சர்வே ஒன்று வெளியாகியுள்ளது.

காங்கிரஸ் வெல்லும்
கர்நாடக தேர்தல் குறித்து வரும் பல சர்வேக்கள் பாஜக ஆட்சியை இழக்கும் என்றே கூறி வரும் நிலையில், இதிலும் அதே தான் கூறப்பட்டுள்ளது. சி-ஃபோர் நிறுவனம் நடத்திய சர்வே-இல், அடுத்து வரும் கர்நாடக சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ் பெரும்பான்மைக்குத் தேவையான இடங்களில் வெல்லும் என்று கூறப்பட்டுள்ளது. கர்நாடகாவில் மொத்தம் 224 சீட்கள் இருக்கும் நிலையில், அதில் காங்கிரஸ் 126 இடங்களில் வெல்லும் என்று சி போர் கருத்துக் கணிப்பில் கூறப்பட்டுள்ளது.

பாஜக எங்கே
அதேபோல தற்போது ஆளும் கட்சியாக உள்ள பாஜக, இந்தத் தேர்தலில் 70 இடங்களில் வெல்லும் என்று கூறப்பட்டுள்ளது. கடந்த 2013 தேர்தல் 40 இடங்களிலும் 2018 பாஜக 104 இடங்களிலும் வென்றிருந்தது. இதில் 2018இல் எடியூரப்பா தலைமையில் பாஜக தேர்தலை எதிர்கொண்டது. இருப்பினும், 2013 எடியூரப்பா இல்லாமல் பாஜக தேர்தலை எதிர்கொண்ட போது வெறும் 40 இடங்களில் மட்டுமே பாஜகவால் வெல்ல முடிந்தது குறிப்பிடத்தக்கது. அதேபோல ஜேடிஎஸ் கட்சி வெறும் 27 இடங்களில் மட்டுமே வெல்லும் என்றும் கூறப்பட்டுள்ளது.

பிராந்தியம் வாரியாக
ஹைதராபாத்-கர்நாடகா, பெங்களூரு மற்றும் பழைய மைசூர் பகுதிகளில் காங்கிரஸ் ஆதிக்கம் அதிகமாக உள்ளது. அதேநேரம் பாஜக வலுவாக உள்ள கடலோர கர்நாடகா, பம்பாய்-கர்நாடகா பகுதிகளில் பாஜக கடும் போட்டி தருவதாகவும் சி-ஃபோர் கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், கடந்த சில நாட்களில் ஹைதராபாத்-கர்நாடகா மற்றும் பம்பாய்-கர்நாடகா பகுதிகளில் தெலுங்கு மொழி பேசும் வாக்காளர்கள் கணிசமாக உள்ளனர். அவர்கள் பாஜகவைப் புறந்தள்ளி காங்கிரஸ் பக்கம் சாய்வதாகவும் கூறப்பட்டுள்ளது.

அதிகம்
முன்னதாக சி வோட்டர் டிவி 9 இணைந்து நடத்திய கருத்துக்கணிப்பில் காங்கிரஸ் 102 இடங்களில் வெல்லும் என்று கூறப்பட்டிருந்தது. இருப்பினும், அதையும் தாண்டி, பெரும்பான்மைக்குத் தேவையான இடங்களில் காங்கிரஸ் வெல்லும் என்று சி போர் கூறியுள்ளது. அதேபோல சி வோட்டர் டிவி 9 கருத்துக்கணிப்பில் பாஜக 96 இடங்களில் வெல்லும் என்று கூறப்பட்டிருந்த நிலையில், இந்த புதிய கருத்துக்கணிப்பில் அவர்கள் வெறும் வெறும் 70 இடங்களில் மட்டுமே வெல்வார்கள் என்று கூறப்பட்டுள்ளது.

பிரசாரம்
கள நிலவரத்தைப் பொறுத்தவரைக் காங்கிரஸ் முன்னாள் முதல்வர் சித்தராமையாவை முன்னிறுத்தித் தேர்தலை எதிர்கொள்கிறது. அதேநேரம் பாஜக பிரசாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி, பாஜக தலைவர் அமித் ஷா, உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆகியோர் அதிகம் தென்படுகிறார்கள். கர்நாடகா அரசு மீது ஊழல் உள்ளிட்ட புகார்கள் அதிகமாக உள்ளதால் மக்கள் அதிருப்தியில் இருப்பதாகக் கூறப்படுகிறது. இதன் காரணமாகவே கர்நாடக மாநில பாஜக தலைவர்கள் பிரசாரத்தில் பெரியளவில் முன்னிறுத்தப்படவில்லை.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications