பெங்களூரு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

நாளை பெரும்பான்மையை நிரூபிக்கும் எடியூரப்பா.. செக் வைக்க முக்கிய கூட்டம் போடும் காங்கிரஸ்!

கர்நாடகா சட்டசபையில் முதல்வர் எடியூரப்பா பெரும்பான்மையை நிரூபிக்க உள்ள நிலையில் நாளை காலை காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கலந்து கொள்ளும் முக்கிய கூட்டம் பெங்களூரில் நடக்க உள்ளது.

Google Oneindia Tamil News

Recommended Video

    கர்நாடக சபாநாயகர் அதிரடி... மேலும் 14 எம்.எல்.ஏக்கள் தகுதிநீக்கம்

    பெங்களூர்: கர்நாடகா சட்டசபையில் முதல்வர் எடியூரப்பா பெரும்பான்மையை நிரூபிக்க உள்ள நிலையில் நாளை காலை காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கலந்து கொள்ளும் முக்கிய கூட்டம் பெங்களூரில் நடக்க உள்ளது.

    கர்நாடகாவில் காங்கிரஸ் மற்றும் மஜத கட்சியை சேர்ந்த 3 அதிருப்தி எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்ட நிலையில் தற்போது கூடுதலாக 14 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டு உள்ளனர். இதையடுத்து கட்சி தாவல் தடை சட்டத்தை மீறியதாக கூறி 17 அதிருப்தி எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர்.

    Congress will hold a meeting ahead of trust motion in Karnataka assembly

    இந்த நிலையில் கர்நாடகா சட்டசபையில் நாளை முதல்வர் எடியூரப்பா பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று கர்நாடக சபாநாயகர் ரமேஷ் குமார் தெரிவித்துள்ளார். இதனால் நாளை கர்நாடகா சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்க உள்ளது.

    நாளை சட்டசபைக்கு அனைத்து உறுப்பினர்களும் கண்டிப்பாக வர வேண்டும், என்று சபாநாயகர் ரமேஷ் குமார் தெரிவித்துள்ளார். தற்போது சட்டசபையில் எம்.எல்.ஏக்கள் எண்ணிக்கை 207 ஆக குறைந்துள்ளது. பெரும்பான்மைக்கு தேவை 104 எம்.எல்.ஏக்கள். சட்டசபையில் பாஜக எம்.எல்.ஏக்கள் எண்ணிக்கை 105 ஆக உள்ளது.

    வீக்கெண்ட் லீவு கட். பாஜக எம்பிக்களுக்கு 2 நாள் கட்டாய பயிற்சி வகுப்பு.. மோடி பங்கேற்பு வீக்கெண்ட் லீவு கட். பாஜக எம்பிக்களுக்கு 2 நாள் கட்டாய பயிற்சி வகுப்பு.. மோடி பங்கேற்பு

    இதனால் 1 எம்.எல்.ஏ. ஆதரவு கூடுதலாக இருப்பதால் எடியூரப்பா அரசு தப்புகிறது. ஆனாலும் பாஜக ஆட்சியை எப்படியாவது கவிழ்க்கலாம் என்று காங்கிரஸ் மஜத கூட்டணி மீண்டும் திட்டம்போடும். மெல்லிசான இடைவெளியில்தான் பாஜக தப்புகிறது. நாளை இரண்டு பாஜக எம்எல்ஏக்களை அவைக்கு வர விடாமல் செய்தால் போதும் எடியூரப்பா ஆட்சியை எளிதாக கவிழ்க்க முடியும்.

    இதனால் முதல்வர் எடியூரப்பா பெரும்பான்மையை நிரூபிக்க உள்ள நிலையில் நாளை காலை காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கலந்து கொள்ளும் முக்கிய கூட்டம் பெங்களூரில் நடக்க உள்ளது. இதில் ஆட்சியை எப்படி கவிழ்ப்பது, எடியூரப்பாவை பெரும்பான்மையை நிரூபிக்க விடாமல் செய்வது எப்படி என்று காங்கிரஸ் ஆலோசிக்கும் என்று கூறுகிறார்கள்.

    English summary
    Congress will hold a meeting ahead of trust motion in the Karnataka assembly tomorrow.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X