கர்நாடகாவில் காங்கிரஸ் அமோகம்.. 134 இடங்களில் அபாரம்.. தொடரும் 40 ஆண்டு கால வரலாறு!
பெங்களூர்: கர்நாடகா சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி பெரும்பான்மைக்கு தேவையான 113 என்ற எண்ணை தாண்டி 134 இடங்களில் காங்கிரஸ் வென்றுள்ளது. பாஜக 64 இடங்களிலும் ஜேடிஎஸ் 19 இடங்களிலும் வென்றுள்ளது.
கர்நாடகா சட்டசபை தேர்தல் கடந்த 10 ஆம் தேதி நடைபெற்றது. சுமார் 224 தொகுதிகளுக்கான இந்த தேர்தலில் பாஜக, காங்கிரஸ், ஜேடிஎஸ் ஆகிய கட்சிகள் போட்டியிட்டன.

இந்த தேர்தலின் வாக்கு எண்ணிக்கை தற்போது நடைபெற்று வருகிறது. இதில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டது. அதில் பாஜக 64 இடங்களிலும் காங்கிரஸ் கட்சி 134 இடங்களிலும் ஜேடிஎஸ் 19 இடங்களிலும் வென்றுள்ளது. மேலும் 3 தொகுதிகளில் காங்கிரஸ் இரு இடங்களிலும் பாஜக ஒரு இடத்திலும் முன்னிலை வகித்து வருகிறது.
காங்கிரஸ் ஆட்சி வராமல் தடுக்க பாஜக எந்த எல்லைக்கும் போகும் என்பது கடந்த கால வரலாறுகள் உள்ளன. ஆனால் இந்த முறை காங்கிரஸ் அருதி பெரும்பான்மை பெற்றதால் பாஜக தனது தோல்வியை ஒப்புக் கொண்டது. கர்நாடகா முதல்வர் பசவராஜ் பொம்மை காலை அளித்த பேட்டியில் எங்களால் பெரும்பான்மை பெற முடியவில்லை என கூறிவிட்டார்.
கடந்த 2018ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் கூட எந்த ஒரு கட்சிக்கு பெரும்பான்மை இல்லாத நிலையில் பாஜக கொல்லைபுறமாக ஆட்சி அமைப்பதை தடுக்க வேண்டும் என்பதற்காக குமாரசாமியை முதல்வராக்கி கூட்டணி ஆட்சிக்கு காங்கிரஸ் ஆதரவு கொடுத்தது. ஆனால் காங்கிரஸ், ஜேடிஎஸ் எம்எல்ஏக்களை பாஜக விலைக்கு வாங்கி குமாரசாமியின் ஆட்சியை கவிழ்த்ததாக ஒரு குற்றச்சாட்டு உள்ளது.
இந்த முறை யாரையும் நம்பாமல் தான் கிங்காகவே இருப்பேன் என குமாரசாமி கூறி வந்தார். இவரது மஜத கட்சி 19 இடங்களில் வென்று கிங்கா மட்டுமல்லாமல் கிங் மேக்கராகவும் ஆக முடியாத நிலை ஏற்பட்டுவிட்டது. கர்நாடகாவின் முதல்வர் யார் என்பது நாளை நடக்கும் காங்கிரஸ் கட்சி கூட்டத்தில் தெரியவரும்.

-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications