ஈஷாவுக்கு எப்படி போகலாம்? டிகே சிவகுமாருக்கு சொந்த கட்சியிலேயே எதிர்ப்பு! ஒரே வரியில் சுளீர் பதில்
பெங்களூர்: கோவை ஈஷா யோகா மையத்தில் மகா சிவராத்திரி அன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன் கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே.சிவகுமார் பங்கேற்றது பலத்த எதிர்ப்பை பெற்று தந்திருக்கிறது. கர்நாடகாவின் முக்கிய அமைச்சர்கள் இதனை விமர்சித்துள்ள நிலையில் தனிப்பட்ட அழைப்பின் பேரிலேயே சிவக்குமார் அந்நிகழ்வில் கலந்து கொண்டதாக விளக்கம் அளிக்கப்பட்டு இருக்கிறது.
கோவையில் உலகப் புகழ்பெற்ற ஈஷா யோகா மையம் சத்குரு ஜக்கி வாசுதேவால் நடத்தப்பட்டு வருகிறது. இங்கு ஆண்டுதோறும் மகா சிவராத்திரி விழா பிரம்மாண்டமாக நடத்தப்படுவது வழக்கம். அந்த வகையில் கடந்த 26 ஆம் தேதி வழக்கம் போல் மிகப் பிரமாண்டமாக கோவை ஈஷா மையத்தில் மகா சிவராத்திரி விழா நடைபெற்றது.

இதில் இந்தியா முழுவதிலிருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமானோர் கலந்து கொண்டனர். குறிப்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, ஒடிசா மாநில ஆளுநர் ஹரிபாபு, பஞ்சாப் மாநில ஆளுநர் குலாப்சங் கட்டாரியா கர்நாடகா மாநில துணை முதலமைச்சர் டிகே சிவக்குமார், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்த நிலையில் பாஜக அமைச்சர்களும், பாஜக ஆளும் மாநில ஆளுநர்களும் கலந்து கொண்ட நிகழ்வில் கர்நாடக துணை முதலமைச்சரும், கர்நாடக காங்கிரஸ் கட்சியின் தலைவருமான டி.கே.சிவகுமார் கலந்து கொண்டது பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியது. குறிப்பாக காங்கிரஸ் கட்சியின் ராகுல் காந்தியை யார் என்றே தனக்கு தெரியாது என ஜக்கி வாசுதேவ் கூறியிருந்த நிலையில், அவர் ஏற்பாடு செய்த நிகழ்ச்சியில் சிவகுமார் கலந்து கொண்டது அக்கட்சி அமைச்சர்களையே கொந்தளிக்க வைத்துள்ளது.
இது தொடர்பாக பேசிய கர்நாடக மாநில கூட்டுறவுத்துறை அமைச்சரான ராஜண்ணா, மக்களவை எதிர்க் கட்சித் தலைவர் ராகுல் காந்தியை யார் என்று தனக்குத் தெரியாது என கூறியவர் ஈசா யோகா மையத்தின் நிறுவனரான ஜக்கி வாசுதேவ். அதுபோன்ற நபர்களுடன் துணை முதலமைச்சரான டிகே சிவக்குமார் மேடையில் ஒன்றாக கலந்து கொண்டது எப்படி நியாயம். காங்கிரஸ் தொண்டர்களுக்கு அவர் நிச்சயம் பதிலளிக்க வேண்டும் என விமர்சித்து இருந்தார்.
இதேபோல பேசியிருந்த கர்நாடக மாநில பொதுப்பணித்துறை அமைச்சரான சதீஷ் ஜர்கிலேளி,"டி.கே சிவகுமாரின் இந்த செயல் வினோதமானது. இது தொடர்பாக கட்சியின் தலைமை கவனத்தில் கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியிருந்தார்.
இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக விளக்கம் அளித்துள்ளார் டிகே சிவக்குமாரின் சகோதரரும் முன்னாள் எம்பியுமான டி.கே சுரேஷ். இது தொடர்பாக பேசிய அவர்," மகா சிவராத்திரி அன்று கோவை ஈஷா யோகா மையத்தில் நடந்த நிகழ்ச்சியில் எனது சகோதரர் பி.கே சிவகுமார் கலந்து கொண்டார். ஆனால் அதற்கு முன்னதாகவே கட்சித் தலைமைக்கு அவர் தகவல் தெரிவித்துவிட்டு அனுமதியைப் பெற்றுவிட்டே சென்றார். பிரதமர் நரேந்திர மோடியை சந்திப்பது குறித்தும் கட்சி தலைமையிடம் தெரிவித்து விட்டு தான் சிவகுமார் சென்றார். இதில் எந்த ரகசியமும் இல்லை. தனிப்பட்ட முறையில் சிவக்குமாரை ஜக்கி வாசுதேவ் அழைத்தார். அந்த அழைப்பின் பேரிலேயே அந்த நிகழ்ச்சியில் சிவகுமார் கலந்து கொண்டார்" என விளக்கம் அளித்துள்ளார்.
இந்த நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக ஒரு வார இடைவெளிக்கு பிறகு மௌனம் கலைத்திருக்கிறார் கர்நாடக மாநில துணை முதலமைச்சரான சிவக்குமார்."ஒரு இந்து என்ற அடிப்படையில் அந்த நிகழ்ச்சியில் நான் கலந்து கொண்டேன். இந்துவாகவே நான் பிறந்தேன். இந்துவாகவே நான் மரணம் அடைவேன்" என்றார் டி.கே. சிவக்குமாரின் இந்த பதில் கர்நாடக அரசியலை புயலை கிளப்பி இருக்கிறது.
-
தர்மத்திற்காக கொடுத்தாரா.. தவறாக கொடுத்தாரா.. பாஜகவின் 27 தொகுதிகள்... எடப்பாடி தப்புக்கணக்கு! -
"தமிழகத்தில் பாஜக வளரவில்லை".. அதிமுக தான் எங்கள் பலம்.. மேடையிலேயே தோல்வியை ஒப்புக்கொண்ட அமித்ஷா! -
எடப்பாடி ஷாக்.. பாஜகவின் பிக் பிரதர் பிளான்.. தாமரைச் சின்னத்தில் அடைக்கலம் தேடும் கூட்டணி கட்சிகள் -
தமிழ்நாட்டில் 27 வயது தாசில்தார் சம்பளம்.. 37 வயதில் எவ்வளவு மாறியிருக்கும் தெரியுமா? -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு!











Click it and Unblock the Notifications