Coolie First Half Review: பாட்ஷா மாதிரி.. ரூ.1,000 டிக்கெட்டுக்கு வொர்த்து.. ரசிகர்களின் விமர்சனம்!

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள கூலி படத்தின் முதல் பாதி படத்தை பார்த்த ரசிகர்கள், அவர்களின் கருத்துக்களை கூறி இருக்கின்றனர். கூலி படத்தின் முதல் பாதி பாட்ஷாவை போல் இருப்பதாகவும், இளம் தலைமுறைக்கு ஏற்றமாறு ஒவ்வொரு காட்சிக்கும் ட்விஸ்ட் வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறி இருக்கின்றனர்.

உலகம் முழுவதும் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள கூலி திரைப்படம் வெளியாகி இருக்கிறது. இந்த படத்தில் ரஜினிகாந்த் மட்டுமல்லாமல் சத்யராஜ், நாகர்ஜுனா, அமீர் கான், உபேந்திரா, சோபின், ஸ்ருதிஹாசன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இதனால் தமிழ்நாடு மட்டுமல்லாமல் வட இந்தியாவிலும் கூலி படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

Coolie Movie Rajinikanth

இதனால் டிக்கெட் முன்பதிவிலேயே கூலி திரைப்படம் ரூ.110 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்திருப்பதாக தெரிய வந்திருக்கிறது. தமிழ்நாட்டில் முதல் காட்சி 9 மணிக்கு தொடங்கி இருந்தாலும், கேரளா, கர்நாடகா, ஆந்திரா மற்றும் தெலங்கானா ஆகிய மாநிலங்களில் 6 மணிக்கே முதல் காட்சி தொடங்கி இருக்கிறது. இதனால் ரஜினி ரசிகர்கள் அதிகாலை முதலே திரையரங்குகளில் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் கூலி படத்தின் முதல் பாதி முடிவடைந்துள்ள நிலையில், ரசிகர்கள் ஒன் இந்தியா யூட்யூப் சேனலுக்கு பிரத்யேகமாக திரையரங்கில் இருந்து ரிவ்யூ அளித்துள்ளனர். அதில் ரசிகர் ஒருவர் கூறுகையில், கூலி படத்தின் முதல் பாதி மட்டும் பாட்ஷா போல் இருக்கிறது. ஸ்டைல், மேனரிஷம், ஸ்க்ரீன் ப்ளே என்று பயங்கரமாக இருக்கிறது என்றார்.

தொடர்ந்து இன்னொரு ரசிகர், 75 வயசுல வேறு ஹீரோ இப்படி யாராவது பண்றாங்களானு அடுத்த தலைமுறையில் பார்க்கலாம்.. இன்னும் ஒரு ஆண்டுக்கு கூலியையும், ரஜினியையும் பற்றியே பேசுவார்கள்.. ஆயிரம் கோடி மட்டுமல்லாமல் அனைத்து சாதனைகளையும் கூலி முறியடிக்கும்.. ஃபர்ஸ்ட் ஆஃப் பாட்ஷா மாதிரி இருக்கும் என்று சொல்கிறார்கள்.

ஆனால் கூலி முதல் பாதி இந்த தலைமுறைக்கு ஏற்றவாறு எடுத்துள்ளார்கள். நம்ம நினைக்கும் எதுவுமே நடப்பதில்லை.. எதிர்பார்க்காதது மட்டுமே நடக்கிறது.. சும்மா ஆக்‌ஷன் படம் மாதிரி இல்லை.. ஸ்ருதிஹாசனை பார்த்தால் நிஜமாகவே அழுகை வரும் அனைவருக்கும்.. இந்த மாதிரி ஒரு படத்தை எதிர்பார்க்கவே இல்லை.. இந்த வயதில் ரஜினிக்கு இப்படியொரு கிடைத்தது எனக்கு மகிழ்ச்சி..

ஆயிரம் ரூபாய் கொடுத்து படம் பார்த்ததற்கு, 10 ஆயிரம் மடங்கு மகிழ்ச்சியாக உள்ளது.. இடைவேளைக்கு அப்புறம் நாகர்ஜுனாவை அப்படி தயார் செய்திருக்கிறார்கள்.. ஆனாலும் ரஜினி வந்து நிற்கையில் அப்படி இருக்கிறது.. 50வது ஆண்டில் ரஜினிக்கு அற்புதமாக ட்ரிப்யூட் அளித்திருக்கிறார்கள். அனிருத் பிஜிஎம் இல்லைனா படமே இல்லை.. கூலி படத்தை பார்க்க இனி டிக்கெட்டே கிடைக்காது.. நானே 3 முறை பார்ப்பேன் என்று தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+