அவர்களை ஏன் இடம் மாற்றினீர்கள்.. கொரோனா பரவிவிடும்.. கர்நாடக அரசின் கிரிமினல் மூவ்.. கடும் எதிர்ப்பு

கொரோனா இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படும் நபர்களை கர்நாடக மாநில அரசு கிரீன் சோனில் இருக்கும் ஜெயில் ஒன்றுக்கு அனுப்பியது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: கொரோனா இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படும் நபர்களை கர்நாடக மாநில அரசு கிரீன் சோனில் இருக்கும் ஜெயில் ஒன்றுக்கு அனுப்பியது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Recommended Video

    வெளவால்களால் கொரோனா அச்சத்தில் பெங்களூர் மக்கள்

    கர்நாடகாவில் கொஞ்சம் தீவிரமாக கொரோனா பரவ தொடங்கி உள்ளது. மொத்தம் 418 பேருக்கு அங்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் 129 பேர் அங்கு குணப்படுத்தப்பட்டுள்ளனர்.

    அங்கு 272 பேர் கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். 17 பேர் இதுவரை பலியாகி உள்ளனர். இந்த நிலையில் அங்கு அரசு எடுத்த முக்கியமான நடவடிக்கை ஒன்று பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    சோதனை செய்தனர்

    சோதனை செய்தனர்

    அதன்படி கர்நாடகாவில் பெங்களூரில் இருக்கும் படராயணபுரா பகுதியில் கடந்த வாரம் சுகாதாரத்துறை பணியாளர்கள் சோதனை செய்தனர். அங்கு பலருக்கு கொரோனா ஏற்பட்டதை அடுத்து மேலும் பலருக்கு கொரோனா பரவி உள்ளதா என்று சோதனை செய்ய சென்றனர். ஆனால் அங்கிருந்த மக்கள், சுகாதாரத்துறை பணியாளர்களை உள்ளே அனுமதிக்கவில்லை. அதோடு சுகாதாரத்துறை பணியாளர்களை அவர்கள் மோசமாக தாக்கினார்கள்.

    அதிர்ச்சி வீடியோ

    அதிர்ச்சி வீடியோ

    சுகாதாரத்துறை பணியாளர்களை இவர்கள் தாக்கும் வீடியோ வெளியாகி பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வீடியோவில் இருந்தவர்கள் அடையாளம் காணப்பட்டு கைது செய்யப்பட்டனர். மொத்தம் 52 பேர் இப்படி கைது செய்யப்பட்டனர். இவர்கள் எல்லோரும் கொரோனா இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படும் நபர்கள். இவர்களை பெங்களூர் சிறையில் அடைக்காமல் 50 கிமீ தூரத்தில் உள்ள ராமநகரா சிறையில் அடைத்துள்ளனர்.

    மோசமான முடிவு

    மோசமான முடிவு

    அதாவது பெங்களூர் மத்திய சிறையில் அடைக்காமல் கொரோனா இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படும் நபர்களை 50 கிமீ அழைத்து சென்று ராமநகரா சிறையில் அடைத்துள்ளனர். இதுதான் மக்களை கோபத்திற்கு உள்ளாக்கி உள்ளது. கொரோனா உள்ளது என்று சந்தேகிக்கப்படும் நபர்களை இப்படி இடமாற்றியது ஏன் என்று அங்கு எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்ப தொடங்கி உள்ளது.

    கேள்வி மேல் கேள்வி கேட்டனர்

    கேள்வி மேல் கேள்வி கேட்டனர்

    ராமநகரா சிறை இருக்கும் ராமநகரா தொகுதி அம்மாநில முன்னாள் முதல்வர் மற்றும் மஜத தலைவர் குமாரசாமியின் மனைவி அனிதா குமாரசாமியின் தொகுதி ஆகும். இதுதான் அங்கு கடும் எதிர்ப்பை ஏற்படுத்தி உள்ளது. ராமநகரா தொகுதியில் கொரோனா கேஸ்கள் எதுவும் இல்லை. இதனால் அந்த பகுதி கிரீன் சோன் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அந்த பகுதிக்கு கொரோனா உள்ளது என்று சந்தேகிக்கப்படும் நபர்களை இடம்மாற்றி உள்ளனர்.

    இது ஒரு கிரிமினல் மூவ்

    இது ஒரு கிரிமினல் மூவ்

    இதை ஒரு கிரிமினல் மூவ் என்று அம்மாநில முன்னாள் முதல்வர் மற்றும் மஜத தலைவர் குமாரசாமி தெரிவித்துள்ளார். இதை அரசு செய்திருக்க கூடாது. ஒரு கிரீன் சோன் பகுதிக்கு கொரோனா இருக்கலாம் என்று கருதப்படும் நபர்களை கொண்டு சென்றது ஏன்? இது ராமநகரா பகுதியில் கொரோனாவை பரப்ப வாய்ப்புள்ளது. மக்கள் இதனால் அச்சத்தில் இருக்கிறார்கள். இதற்கு பின் எதோ சதி இருக்கிறது, என்று குமாரசாமி தெரிவித்துள்ளார்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+