பெங்களூர் சாலையில் காதலியுடன் பைக்கில் உல்லாச பயணம்.. சிக்கிய சென்னை இளைஞர்.. சொன்ன காரணம் அல்டிமேட்

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: தமிழ்நாடு பதிவெண் கொண்ட மோட்டார் சைக்கிளின் பெட்ரோல் டேங்கில் காதலியை அமர வைத்துக்கொண்டு கட்டி அணைத்தபடியும், முத்தமிட்டுக்கொண்டும் இளம்ஜோடிகள் கிளுகிளுப்புடன் பயணம் செய்தனர். பரபரப்பான பெங்களூர் சாலையில் இப்படி இளம் ஜோடிகள் செய்த காரியத்தினை சிலர் வீடியோவாக எடுத்து சமூக வலைத்தளங்களில் பரப்பினர். இந்த நிலையில், தற்போது சென்னையை சேர்ந்த அந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

இந்தியாவிலேயே போக்குவரத்து நெரிசல் அதிகம் உள்ள நகராக பெங்களூர் உள்ளது. இந்த பெங்களூர் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் சிக்னலுக்கு காத்திருக்கும் நேரங்களில், வேலை பார்ப்பது, காலை டிஃபனை முடிப்பது என சில வேலைகளை செய்து விடுவார்கள். இப்படி இருக்கையில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு பெங்களூர் சாலையில் தமிழ்நாடு பதிவெண் கொண்ட மோட்டார் சைக்கிளில் சென்ற இளம் ஜோடிகள் மற்ற பயணிகளை முகம் சுளிக்க வைக்கும் வகையில் நடந்துகொண்டனர்.

Bangalore Chennai Trend

அதாவது தன் காதலியை பெட்ரோல் டேங்கின் மீது அமர வைத்து, கட்டிப்பிடித்தப்படி மோட்டார் சைக்கிளை ஓட்டி சென்றார். பரபரப்பான பெங்களூர் சாலையில் வாலிபர் ஒருவர் இப்படி செய்தது மற்ற பயணிகளை முகம் சுளிக்க வைத்தது. சாலையில் சென்ற வாகன ஓட்டிகள் பலரும் முகம் சுளித்தப்படியே சென்றனர். இதில் சிலர் இளம் ஜோடிகளின் கிளுகிளுப்பான பயணத்தை தங்கள் மொபைலில் வீடியோவாக பதிவு செய்தனர். மேலும் அதனை சமூக வலைத்தளங்களிலும் வெளியிட்டனர்.

இதனால் இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது. அந்த வீடியோவில், பெங்களூரின் சர்ஜாப்பூரில் இளைஞர் தன் காதலியை புல்லட் மோட்டார் சைக்கிளின் பெட்ரோல் டேங்கில் அமர வைத்துக்கொண்டு இருவரும் இறுக்கமாக கட்டிப்பிடித்தப்படியும், முத்தமிட்டுக்கொண்டும் பயணம் செய்கின்றனர். மோட்டார் சைக்கிளில் தமிழ்நாடு பதிவெண் இருந்தது. வீடியோ வைரலாக பரவி வந்த நிலையில், நெட்டிசன்கள் பலரும் இதற்கு கமெண்ட்டுகளை குவித்து வந்தனர்.

மற்ற பயணிகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையிலும், பொது இடத்தில் இப்படி முகம் சுளிக்க வகையிலும் மோட்டார் சைக்கிள் ஓட்டி சென்ற வாலிபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து வந்தனர். அதன்பேரில் சர்ஜாப்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணையை தொடங்கினர். குறிப்பாக அந்த வீடியோவில் பதிவாகியிருந்த பதிவெண்ணை வைத்து விசாரித்ததில், அந்த நபர் சென்னையை சேர்ந்தவர் என்பது தெரியவந்தது.

இதையடுத்து அந்த இளைஞரை நேற்று போலீசார் கைது செய்தனர். விசாரணையில் அவரது பெயர் அஜ்ஜூத் குமார் (வயது 25) என்பது தெரியவந்தது. சென்னையை சேர்ந்த இவர் பெங்களூரில் வேலை பார்த்து வந்துள்ளார். எதற்காக இப்படி பயணம் செய்தீர்கள் என்று போலீசார் கேட்டதற்கு அந்த இளைஞர் சொன்ன பதில் போலீசாரை தூக்கி வாரிப்போட்டது. அதாவது அனைவரது கவனத்தையும் ஈர்க்க வேண்டும் என்பதற்காக காதலியை பெட்ரோல் டேங்கில் அமர வைத்து கட்டி அணைத்தபடி சென்றதாக தெரிவித்தார். இது தொடர்பாக போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+