ஜெயலலிதாவிடம் பறிமுதல் செய்த சொத்துகளை எங்களுக்கே தரணும்.. ஜெ.தீபா வழக்கில் கோர்ட் அதிரடி தீர்ப்பு!
பெங்களூர்: சொத்துக்குவிப்பு வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட ஜெயலலிதாவின் சொத்துகளுக்கு உரிமை கோரி ஜெ.தீபா மற்றும் தீபக் ஆகியோர் தாக்கல் செய்த மனுவை பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்துள்ளது.
சொத்துக் குவிப்பு வழக்கில் மறைந்த தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோருக்கு கடந்த 2014ஆம் ஆண்டு பெங்களூர் தனி நீதிமன்றம் 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது. அவர்கள் இதை எதிர்த்து கர்நாடகா ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்தனர். இந்த வழக்கில் அவர்கள் 4 பேரும் விடுதலை செய்யப்பட்டனர்.

இதை எதிர்த்து கர்நாடக அரசு சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தது. கடந்த 2017ஆம் ஆண்டு கர்நாடக ஐகோர்ட் வழங்கிய தீர்ப்பை ரத்து செய்து, தனி நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது. ஜெயலலிதா அதற்கு முன்பே மரணம் அடைந்துவிட்டதால், அவரது பெயர் தீர்ப்பில் இருந்து நீக்கப்பட்டது. சசிகலா உள்பட 3 பேரும் பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் சிறை தண்டனையை அனுபவித்தனர்.
முன்னதாக சொத்துக் குவிப்பு புகாரை தொடர்ந்து லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் ஜெயலலிதா வீட்டில் சோதனையிட்டு, தங்க வைர நகைகள், விலை உயர்ந்த பட்டு புடவைகள், செருப்புகள், கம்ப்யூட்டர்கள் உள்பட பல்வேறு பொருட்களை பறிமுதல் செய்தனர். பெங்களூர் விதான சவுதாவில் உள்ள கருவூலத்தில் வைக்கப்பட்டுள்ளது.
சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட சேலைகள், செருப்புகள், மின்சாதன பொருட்கள், தங்கம், வெள்ளி, வைர நகைகள் உள்ளிட்ட பொருட்களை ஏலம் விட வேண்டும் என்று பெங்களூரை சேர்ந்த சமூக செயற்பாட்டாளர் நரசிம்மமூர்த்தி பெங்களூர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இதை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம் ஏலம் விடுவது தொடர்பான நடவடிக்கைகளை மேற்கொள்ள சிறப்பு அரசு வழக்கறிஞரை நியமனம் செய்தது.
இதை எதிர்த்து ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபா மற்றும் அண்ணன் மகன் தீபக் ஆகியோர் மனு தாக்கல் செய்தனர். மறைந்த ஜெயலலிதாவிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட அனைத்து பொருட்களையும் அவரது சட்டரீதியான வாரிசுகளான தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும், ஏற்கனவே ஜெயலலிதாவின் வாரிசாக தங்களை ஏற்றுக்கொண்டு பல்வேறு சொத்துக்களை சென்னை உயர்நீதிமன்றம் வழங்கியிருப்பதாகவும் வாதிட்டனர்.
இந்நிலையில் சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட சொத்துகளுக்கு உரிமை கோரி பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் தீபா மற்றும் தீபக் தாக்கல் செய்த மனுவை பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. பறிமுதல் செய்யப்பட்ட சொத்துகளை வாரிசுதாரர்கள் உரிமை கோர முடியாது என்று பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் அதிரடியாக தீர்ப்பளித்துள்ளது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications