கர்நாடகாவில் இவர்களுக்கு எல்லாம் கொரோனா பரிசோதனை கட்டாயம்.. மாநில சுகாதாரத்துறை உத்தரவு
பெங்களூர்: கர்நாடகாவில் இன்புளுயன்சா போன்ற நோய் பாதிப்புகள் உள்ளவர்களுக்கு அறிகுறிகள் இருந்தால் கொரோனா பரிசோதனை கட்டாயம் என்று அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
சீனாவின் உகான் நகரில் கடந்த 2019 ஆம் ஆண்டு முதன் முதலில் கண்டறியப்பட்ட கொரோனா என்றும் கொடிய வைரஸ் உலக நாடுகளை பாடாய் பாடுத்தி வருகிறது. தனி மனித இடைவெளி, முக கவசம், லாக் டவுன் பல கட்டுப்பாடுகள் கொரோனாவை கட்டுப்படுத்த விதிக்கப்பட்டது. கிட்டதட்ட இரண்டு ஆண்டுகள் உலக நாடுகளை முடக்கி போட்ட கொரோனா அதன்பிறகு தடுப்பூசி செலுத்திக் கொண்ட பிறகே ஓரளவு கட்டுக்குள் வந்தது.
இருந்தாலும் அவ்வப்போது கொரோனா உருமாற்றம் அடைந்து புது வைகை கொரோனாவாக பரவி மக்களை இன்னலுக்கு உள்ளாக்கியது. பிறகு பாதிப்பு சற்று தணிந்தது. குறிப்பாக கடந்த ஒரு ஆண்டாக கொரோனா பரவல் இல்லாத நிலையில் தற்போது மீண்டும் ஆட்டம் காணத்தொடங்கியுள்ளது. அதாவது, தற்போது உலகின் பல நாடுகளில் JN1 என்ற புதிய உருமாறிய கொரோனா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

இந்தியாவிலும் JN1 வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது. கேரள மாநிலத்தில் கொரோனா அதிகம் பரவியது. கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று கடந்த 227 நாட்களுக்கு பின்னர் இந்தியாவில் ஒரே நாளில் 841 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. கர்நடாகவில் கொரோனா பரவல் அதிகரித்து இருப்பதால் அங்கு மீண்டும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், இன்புளுயன்சா பாதிப்பு போன்ற நோய் அறிகுறிகள் இருந்தால் கொரோனா பரிசோதனை கட்டயம் செய்ய என்று அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக கர்நாடக சுகாதாரத்துறை அமைச்சர் தினேஷ் குண்டு ராவ் கூறியதாவது:- இன்புளுயன்சா போன்ற பாதிப்பு அல்லது கடுமையான சுவாச நோய்கள் இருந்தால் கொரோனா பரிசோதனையை கட்டாயம் செய்ய வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
விரைவில் கொரோனா குறித்த விவரங்களை பெற கொரோனா ஹெல்ப் லைன் அறிமுகம் செய்யப்படும். தினமும் 7 ஆயிரம் பரிசோதனைகள் செய்யப்படுகின்றன. கொரோனா பாதிப்பு விகிதம் 3.82 சதவிகிதமாக உள்ளது. மாநிலத்தில் கொரோனா தொற்று பாதிப்பு விகிதம் இன்னும் குறையவில்லை. பக்கத்து மாநிலமான கேரளாவில் கொரோனா பாதிப்பு குறைய தொடங்கிவிட்டது. கொரோனா பாதிப்பு கண்டறியவர்களை அதிகாரிகள் உன்னிப்பாக கண்காணிக்க வேண்டும். அறிகுறிகள் இருப்பவர்களை கண்காணிக்க வேண்டும்.
அவர்களுக்கு பரிசோதனையும் மேற்கொள்ள வேண்டும். வீட்டு தனிமையில் இருப்பவர்கள் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும். அடுத்த வாரத்தில் இருந்து கர்நாடகாவில் கொரோனா பாதிப்பு குறையத் தொடங்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. டெக்னிக்கல் ஆலோசனைக் குழு நேற்று முன் தினம் சந்திதது சில வழிகாட்டுதல்களை வழங்கியது. அந்த வழிகாட்டுதல்களை பின்பற்றுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன்" என்றார்.
-
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்? -
"கோடம்பாக்கம் ஏரியா.. ஓட்டு கேட்டு வரியா".. விஜய் பாடலுக்கு நடனமாடிய அரசு பள்ளி தலைமையாசிரியை.. இப்போ வேலை போச்சே












Click it and Unblock the Notifications