பெங்களூரு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தமிழ்நாடு உட்பட பிற மாநிலங்களிலிருந்து.. ஈஸியாக பெங்களூர் வர முடியாது.. கொரோனா டெஸ்ட் கட்டாயமாகிறது

Google Oneindia Tamil News

பெங்களூர்: தமிழ்நாட்டில் இருந்து பெங்களூருக்கு இனி ஈசியாக பயணம் செய்து வர முடியாது. பயணிகள் அனைவருக்கும் கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் கட்டாயம் என்று விதிமுறை மாற்றி அமைக்கப்படும் என்று கர்நாடக முதல்வர் எடியூரப்பா தெரிவித்துள்ளார்.

கொரோனா நோய் பரவல் காரணமாக கடுமையாக பாதிக்கப்பட்ட நகர் பெங்களூர். கடந்த ஏப்ரல் 27ம் தேதி முதல் இப்போது வரை பெங்களூர், உட்பட கர்நாடகாவில் அனைத்து பகுதிகளிலும் ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கிறது.

நீலகிரி, கோவை, தேனியில் இடியுடன் மழை பெய்யும்... 5 நாட்களுக்கு குடை அவசியம் மக்களே நீலகிரி, கோவை, தேனியில் இடியுடன் மழை பெய்யும்... 5 நாட்களுக்கு குடை அவசியம் மக்களே

காலை 6 மணி முதல் காலை 10 மணி வரை கடைகளை திறந்து வைக்கலாம் என்று உத்தரவு பிறப்பித்த நிலையில் இப்போது சற்று தளர்வுகள் செய்யப்பட்டு பெங்களூர் உள்ளிட்ட சில மாவட்டங்களில் காலை 6 மணி முதல் மதியம் 2 மணி வரை கடைகளை திறந்து வைக்க அனுமதி வழங்கியுள்ளது அரசு.

ஊரடங்கு தளர்வு

ஊரடங்கு தளர்வு

மேலும் சில தொழிற்சாலைகளில் 50 சதவீதம் அளவுக்கு பணியாளர்களை கொண்டு பணிகள் துவங்கப்படலாம் என்றும் முதல்வர் உத்தரவிட்டுள்ளார். கார்மெண்ட்ஸ் போன்ற தொழில் நிறுவனங்களில் 30% அளவுக்கு தொழிலாளர்களை கொண்டு வேலை நடக்க வேண்டும் என்பது நிபந்தனை.

முன்னெச்சரிக்கை

முன்னெச்சரிக்கை

இன்று முதல் ஊரடங்கு உத்தரவு அமலுக்கு வந்துள்ள நிலையில் இந்த தளர்வுகள் காரணமாக மீண்டும் நோய் பரவல் அதிகரித்து விடக் கூடாது என்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை இன்னொருபக்கம் கர்நாடக அரசு எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் எடியூரப்பா ஒரு தகவலை தெரிவித்துள்ளார்.

கொரோனா நெகட்டிவ்

கொரோனா நெகட்டிவ்

அதன்படி பெங்களூர் நகர மாவட்டத்திற்கு பிற மாநிலங்கள் மற்றும் பிற மாவட்டங்கள் ஆகிய பகுதிகளிலிருந்து வரும் பயணிகள் கொரோனா நெகட்டிவ் சான்றிதழை காட்ட வேண்டியது கட்டாயம் என்று விதிமுறை மாற்றி அமைக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். ஒவ்வொரு நுழைவு பகுதியிலும் தீவிரமாக கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்படும், யாரும் காவல்துறை கண்களில் இருந்து தப்பித்து பெங்களூரு நகருக்குள் வராத அளவுக்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று எடியூரப்பா தெரிவித்துள்ளார்.

பரிசோதனை நடத்த திட்டம்

பரிசோதனை நடத்த திட்டம்

ஒருவேளை கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் இல்லாவிட்டால் , எல்லைப்பகுதிகளில் அவர்களுக்கு கொரோனா நோய் பரிசோதனை செய்யப்படும் என்று விதிமுறைகளை மாற்றி அமைக்க கர்நாடக அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. சாலை மார்க்கமாக வருவோர் மட்டுமின்றி விமானம் ரயில் போன்றவற்றின் மூலமாக பெங்களூருக்கு வருவோருக்கும் இதுபோன்ற சோதனைகள் அதிகரிக்கப்படும் என்று தெரிகிறது.

English summary
Karnataka government has decided to do swab test at every entry points in Bangalore city, says Karnataka chief minister., BS Yediyurappa.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X