ஈரக்குலையே.. வாங்கிய பயிர்க்கடனை தர முடியாத விவசாயி! அதுக்கு? இப்படி ஒரு பெண்ணா? மனசாட்சியே இல்லையா
பெங்களூரு: கர்நாடகாவில் விவசாயி ஒருவருக்கு நடந்த இந்த சம்பவம், ஒட்டுமொத்த மக்களையும் நிலைகுலைய வைத்து வருகிறது.
சேலம் மாவட்டம் வாழப்பாடியில் சில நாட்களுக்கு முன்பு ஒரு சம்பவம் நடந்தது.. இங்குள்ள துக்கியம்பாளையம் இடத்தில் பிரசாந்த் என்ற கூலித் தொழிலாளி வாழ்ந்து வருகிறார். இவர் தன்னுடைய குடும்ப வறுமை காரணமாக, வாழப்பாடியில் உள்ள தனியார் வங்கி ஒன்றில் 35 ஆயிரம் ரூபாய் கடன் வாங்கியிருக்கிறார்.

இந்த 35 ஆயிரம் ரூபாயை, வாரந்தோறும் 770 ரூபாய் வீதம் மொத்தம் 52 வார தவணைகளில் பணத்தை திருப்பி செலுத்துவதாக சொல்லி கடன் வாங்கியிருக்கிறார்.. ஆனால், இந்த கடன் தவணையை செலுத்த காலதாமதம் ஆகிவிட்டதால், வங்கி ஊழியர் சுபா என்பவர், பிரசாத் வீட்டிற்கு சென்றுள்ளார்.. ஆனால், அப்போது வீட்டில் பிரசாந்த் இல்லை.
தவணை தொகை: அவரது மனைவி கவுரி சங்கரி மட்டுமே இருந்ததால், பணத்துக்கு பதிலாக, கவுரி சங்கரியை, வங்கிக்கு பிணையாக அழைத்து வந்துவிட்டார். தவணை பணத்தை செலுத்திவிட்டு, கணவர்வந்து உங்களை அழைத்து செல்லட்டும் என கவுரிசங்கரியிடமும் வங்கியில் சொல்லியிருக்கிறார்கள்.
இதைக் கேள்விப்பட்டு பதறிப்போன பிரசாந்த், பேங்குக்கு ஓடிச்சென்று, 770 ரூபாயை கட்டிவிட்டு மனைவியை வீட்டிற்கு அழைத்து வந்தார்.. இது தொடர்பாக போலீசில் புகாரும் தந்தார் பிரசாந்த்..
விவசாயி: இந்த சம்பவம் மிகவும் அதிர்வலையை தமிழகத்தில் ஏற்படுத்திய நிலையில், கர்நாடகா மாநிலத்திலும் இதுபோலவே ஒரு துயரம் நடந்திருக்கிறது.. பெலகாவி மாவட்டம், யமகனமரடி தொகுதியை சேர்ந்தவர் ராஜு கோட்டாகி... இவர் ஒரு விவசாயி.
5 மாதங்களுக்கு முன்பு, இஸ்லாம்பூர் கிராமத்தை சேர்ந்த சித்தவ்வா பையனவரா என்ற பெண்ணிடம், ஒன்றரை லட்ச ரூபாயை கடன் வாங்கியிருந்தார் விவசாயி.. இந்த கடனுக்காக வட்டியை ராஜு செலுத்தி வந்துள்ளார். ஆனால், கடந்த சில நாட்களாகவே, கர்நாடகத்தில் நிலவும் கடும் வறட்சி காரணமாக பயிர்கள் கருகிவிட்டன.. இதனால், வாங்கிய கடனை ராஜூவால், செலுத்த முடியாமல் போனதாக தெரிகிறது.
கடன் தொகை: வாங்கிய கடனை இப்போதே செலுத்த வேண்டும் என்று சித்தவ்வா, தொடர்ந்து ராஜுவை எச்சரித்து வந்துள்ளதாக கூறப்படுகிறது.. இதனால் அவமானத்தில் குறுகிய ராஜூ, கடன் தொகையை செலுத்த 2 நாள் டைம் கேட்டிருக்கிறார்.. ஆனால், எங்கெங்கோ முயற்சித்தும், இந்த 2 நாளிலும் அவரால் பணத்தை புரட்ட முடியவில்லை..
இதனால் பணம் கொடுத்த சித்தவ்வா பையனவரா என்ற பெண், கொஞ்சமும் மனசாட்சியின்றி, ராஜு குடும்பத்தினரை சிறை பிடித்திருக்கிறார்.. ராஜூ, அவரது மனைவி துர்க்கவ்வா, மகன் பசவராஜ கோட்டாகி ஆகிய 3 பேரையும் வீட்டுக்காவலில் தொடர்ந்து 2 நாட்கள் வைத்திருக்கிறார்.. இந்த 2 நாட்களாக 3 பேருக்குமே சாப்பாடு தரவில்லை. குடிக்க தண்ணீர்கூட தரவில்லையாம்.
அவமானம்: ஏற்கனவே அவமானத்தில் புழுங்கி தவித்த ராஜு, குடும்பத்தை வீட்டுக்காவலில் வைத்து, 2 நாட்களாக சித்ரவதை செய்ததை கண்டு மனம் நொந்துபோனார்.. இறுதியில், வீட்டிற்கு வந்து, விஷம் குடித்து தற்கொலையும் செய்து கொண்டார் ராஜூ.
இதுகுறித்து புகார் கொடுப்பதற்காக, யமகனமரடி போலீசுக்கு சென்றிருக்கிறார்கள் ராஜூவின் மனைவியும், மகனும்.. ஆனால், புகாரை வாங்காமல், போலீசார் காலதாமதம் செய்தார்களாம்.. அத்துடன், சாதாரண பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளதாக கணவனை இழந்த மனைவி கண்ணீருடன் குற்றம் சாட்டியிருக்கிறார். இந்த சம்பவம் கர்நாடகாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வழிமுறைகள்: வங்கிகளை பொறுத்தவரை கடன் தருவதில் என்ன விதிமுறைகளில் உள்ளது? என்று தெரியவில்லை.. ஆனால், வங்கி கடனை வசூலிப்பதில் பல்வேறு வழிமுறைகள் உள்ளபோது, அதை சிலர் சரியாக பின்பற்றுவதில்லையாம்.
சில வருடங்களாகவே கந்துவட்டி அட்டகாசம் ஓரளவு குறைந்துள்ள நிலையல், மீண்டும் இதுபோன்ற அக்கிரமம் அதிகரித்து வருகிறது.. இதற்கும் ஒரு கடிவாளத்தை நம்முடைய அந்தந்த மாநில அரசுகள் போட்டால் நல்லா இருக்கும்..!!!
-
இந்தியாவே இந்த 4 மாநிலத்தை தான் நம்பியிருக்கு.. உபி, பீகார் நிலைமை ரொம்ப மோசமா இருக்கே..! -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை -
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
ஸ்டாலினையே தோற்கடித்த கொளத்தூர்.. சேகர்பாபு தான் காரணம்? குமுறிய உபிகள்.. கள ஆய்வில் கசிந்த தகவல்! -
ட்விஸ்ட்.. தமிழக பாஜக தலைவர் மாற்றம்? நயினாருக்கு பதில் இவரா? ரேசில் 4 பேர்.. டிக் அடிக்கும் டெல்லி! -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட் -
அண்ணாமலை புரிதல் கொண்டவர்.. அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன்.. பாராட்டி தள்ளிய ராகவா லாரன்ஸ் -
ஒரு இடம் விடக்கூடாது.. சென்னையில் தெரு தெருவாக ரெய்டு விடப்போகும் அதிகாரிகள்.. என்ன காரணம்?












Click it and Unblock the Notifications