பாலியல் புகாரில் சிக்கி பெங்களூரில் தலைமறைவு! ஜானி மாஸ்டரை தட்டி தூக்கிய போலீஸார்!
பெங்களூர்: பாலியல் புகாரில் சிக்கி தலைமறைவாக இருந்த நடன இயக்குநர் ஜானி மாஸ்டர் பெங்களூரில் கைது செய்யப்பட்டுள்ளார். 21 வயது பெண் நடன இயக்குநருக்கு அவருடைய 16 வயது முதலே பாலியல் தொல்லை கொடுத்ததாக அந்த பெண் அளித்த புகாரின் பேரில் இந்த கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
21 வயது இளம் பெண்ணை அவருடைய 16 வயதிலிருந்து பல்வேறு இடங்களுக்கு அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாக ஜானி மீது புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து ஜானி தலைமறைவானார். அவரை போலீஸார் தேடி வந்தனர்.

இந்த நிலையில் ஜானி மாஸ்டர் பெங்களூரில் பதுங்கியிருந்த நிலையில் அவர் கைது செய்யப்பட்டார். இவரது இயற்பெயர் ஷேக் ஜானி பாஷா ஆகும்.
தெலுங்கு திரையுலகில் அல்லு அர்ஜுன், ராம் சரண், ரவி தேஜா உள்ளிட்டோருக்கு நடனத்தை இயக்கி புகழ் பெற்றவர் ஜானி. இவர் தமிழிலும் நடிகர்கள் விஜய், தனுஷ் உள்ளிட்டோருக்கு இவர் நடன இயக்குநராக இருந்துள்ளார். காந்த கண்ணழகி, ரவுடி பேபி, செல்லம்மா, ரஞ்சிதமே, அரபிக் குத்து, ஜாலியோ ஜிம்கானா, ஜெயிலர் படத்தில் காவாலா, மேகம் கருக்காதா, புஷ்பா படத்தில் ஸ்ரீவள்ளி உள்ளிட்ட சூப்பர் ஹிட் பாடல்களுக்கு நடனத்தை அமைத்துள்ளார்.
மேகம் கருக்காதா பாடலுக்கு ஜானி மாஸ்டருக்கு தேசிய விருது கிடைத்தது. கலா மாஸ்டர், பிருந்தா மாஸ்டர்களும் களத்தில் இருக்கிறார்கள். அது போல் புதிதாக வந்த ஜானி மாஸ்டரும் பிரபலங்களுக்க கொரியோகிராப் செய்கிறார். இப்படி புகழ் பெற்ற ஜானி மாஸ்டர் மீது 21 வயது பெண் ஒருவர் பாலியல் பலாத்கார புகாரை தெரிவித்துள்ளார்.
அதாவது அந்த பெண் ஜானி மாஸ்டருடன் பணியாற்றிய போது சென்னை, ஊட்டி, பெங்களூர், ஹைதராபாத், மும்பை உள்ளிட்ட பல்வேறு சூட்டிங் ஸ்பாட்டுகளுக்கு தன்னை அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாக புகார் கூறியுள்ளார்.
இதுகுறித்து அந்த பெண் சைபராபாத்தில் உள்ள ராய்துர்கம் போலீஸில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் அந்த பெண் கூறியிருப்பதாவது: நான் கடந்த சில மாதங்களாக ஜானி மாஸ்டருடன் சில திரைப்படங்களில் பணியாற்றினேன். படப்பிடிப்புக்காக நான் அவருடன் சென்னை, மும்பை, ஹைதராபாத் உள்ளிட்ட இடங்களுக்கு சென்ற போது என்னை அவர் பல முறை பலாத்காரம் செய்துள்ளார்.
அது போல் ஹைதராபாத்தில் நான் வசிக்கும் நார்சிங்கி பகுதியில் உள்ள வீட்டில் வைத்தும் அவர் என்னை பலாத்காரம் செய்துள்ளார். இவ்வாறு புகார் அளித்துள்ளார். இது தொடர்பாக போலீஸார் அதிரடியாக வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இந்த நிலையில் ஜானி மாஸ்டர், ஆந்திரா மாநிலத்தில் பவன் கல்யாணின் ஜனசேனா கட்சியில் இணைந்து செயல்பட்டு வந்தார். அவர் மீது பாலியல் புகார் வந்ததை அடுத்து பவன் கல்யாண், ஜானி மாஸ்டரை தனது கட்சியில் இருந்து நீக்கி உத்தரவிட்டுள்ளார். அது போல் தெலுங்கு சினிமாவிலும் அவருக்கு பணியை கொடுக்க ரெட் கார்டு கொடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி












Click it and Unblock the Notifications