Dharmasthala exhumation: தர்மஸ்தலாவில் புதிதாக சிக்கிய 100 எலும்பு கூடுகள், ஒரு மண்டை ஓடு!
பெங்களூர்: கர்நாடக மாநிலம் தர்மஸ்தலாவில் 11 இடங்களில் அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள். இதற்கிடையே 6ஆவது நாளாக நேற்று நடந்த சோதனையில் சுமார் நூறு எலும்புகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. மேலும், ஒரு மண்டை ஓடும் கண்டுபிடிக்கப்பட்டன. இது இந்த வழக்கில் பெரிய திருப்பமாக இருக்கும் எனக் கருதப்படுகிறது.
கர்நாடகாவில் உள்ள தர்மஸ்தலா கோயிலில் பணியாற்றிய முன்னாள் தூய்மை பணியாளர் ஒருவர் கடந்த ஜூன் மாதம் பகீர் புகாரளித்திருந்தார். அதாவது 1995 முதல் 2014 வரை இந்த கோயிலில் அவர் வேலை செய்த போது பல பெண்களின் உடல்களைப் புதைக்கக் கட்டாயப்படுத்தப்பட்டதாகக் கூறினார். இது அங்கு மாநிலம் முழுக்க அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், இது குறித்து விசாரணை நடத்தச் சிறப்பு விசாரணைக் குழு அமைக்கப்பட்டது. சம்பந்தப்பட்ட நபர் சொன்ன இடங்களில் விசாரணைக் குழு ஆய்வு செய்து வருகிறார்கள்.

தர்மஸ்தலா
இதற்கிடையே நேற்றைய தினம் தர்மஸ்தலா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட நேத்ராவதி ஆற்றுத் துறைக்கு அருகேயுள்ள வனப்பகுதியில் சோதனை ஆறாவது நாளாக நடைபெற்றது. புகாரளித்த தூய்மை பணியாளர் அடையாளம் காட்டிய 11வது இடத்திலிருந்து சுமார் 100 மீட்டர் தொலைவில், மேற்பரப்பிலேயே எலும்புக்கூடு பாகங்கள் கண்டெடுக்கப்பட்டதாகச் சிறப்புப் புலனாய்வுக் குழு வட்டாரங்கள் தெரிவித்தன.
100+ எலும்புகள்
அதில் மண்டை ஓடு மற்றும் முதுகுத்தண்டு எலும்புகள் உட்பட சுமார் 100 எலும்புகள் மீட்கப்பட்டன. மீட்கப்பட்ட எலும்புக்கூடு பாகங்கள் இரண்டு வெவ்வேறு நபர்களுக்குச் சொந்தமானதாக இருக்கலாம் என அதிகாரிகள் கூறுகிறார்கள். ஓர் நீண்ட முதுகுத்தண்டு எலும்பும் கண்டெடுக்கப்பட்ட நிலையில், அதுவும் இப்போது ஆய்வுக்காக அனுப்பப்பட்டுள்ளது. அதே இடத்தில், ஒரு மரத்தில் ஆறு அடி உயரத்தில் ஒரு புடவையும் கண்டுபிடிக்கப்பட்டது.
நேற்று காலை 11.30 மணிக்குச் சம்பவ இடத்திற்கு ஆய்வுக்குச் சென்ற சிறப்புக் குழுவினர், மதிய உணவு கூட சாப்பிடாமல் மாலை 6:15 மணி வரை தொடர்ந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டது. அங்குக் கண்டெடுக்கப்பட்ட எலும்புக்கூடு பாகங்கள் மூன்று பக்கெட்கள் மற்றும் இரண்டு PVC குழாய்களில் அடைக்கப்பட்டது, அதன் பிறகே அவை வனப்பகுதியிலிருந்து வெளியே கொண்டு செல்லப்பட்டன.
கடைசி நேரத்தில் மாற்றம்
தூய்மை பணியாளர் குறிப்பிட்ட 13 இடங்களில், இதுவரை 10 இடங்கள் தோண்டப்பட்டுள்ளன. திங்கட்கிழமை 11வது இடத்தை ஆய்வுக்குத் திட்டமிடப்பட்டு இருந்தது. இருப்பினும், திடீரென அந்த நபர் வேறு இடத்தில் தோண்டுமாறு சொன்னதால் இடம் கடைசி நேரத்தில் மாற்றப்பட்டது. இந்தத் தேடுதல் பணியில் சுமார் 20 தொழிலாளர்கள் பயன்படுத்தப்பட்டனர். ஒரு சிறிய மண் அள்ளும் இயந்திரம் கொண்டு வரப்பட்டாலும், வனப்பகுதி என்பதால் அது பயன்படுத்தப்படவில்லை.
அதிகாரிகள் குழு நுழைந்தவுடன், இரண்டு மூட்டை உப்பு கொண்டு செல்லப்பட்டது. மேலும், பாதுகாப்பிற்காக விசாரணை அதிகாரிகள் நான்கு கமாண்டோக்களை நியமித்திருந்தனர். புத்தூர் உதவி ஆணையர் ஸ்டெல்லா வர்கீஸ் மற்றும் காவல் கண்காணிப்பாளர் ஜிதேந்திர குமார் தயாமா ஆகியோர் சம்பவ இடத்தில் இருந்தனர். முன்னதாக ஜூலை 31ம் தேதி சாட்சியால் அடையாளம் காட்டப்பட்ட ஆறாவது இடத்தில் ஓர் ஆணின் எலும்புக்கூடு பாகங்கள் கண்டெடுக்கப்பட்டது. எனினும், அதற்கு முன்பு தோண்டப்பட்ட மற்ற ஒன்பது இடங்களில் மனித எச்சங்கள் எதுவும் கிடைக்கவில்லை.
பரபர புகார்
இது ஒரு பக்கம் இருக்கக் கடந்த சில நாட்களுக்கு முன்பு தர்மஸ்தலா கிராமத்தில் சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்பு, 13 முதல் 15 வயது மதிக்கத்தக்க ஒரு சிறுமி சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்தது தொடர்பாக, ஜெயந்த் டி என்பவர் தர்மஸ்தலா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். பிரேதப் பரிசோதனை இல்லாமல் அச்சிறுமியின் உடல் புதைக்கப்பட்டதாகவும், அப்போது முதல் தகவல் அறிக்கை கூட பதிவு செய்யப்படவில்லை என்றும் ஜெயந்த் தன் புகாரில் குறிப்பிட்டுள்ளார்.
இச்சிலம்பாடியைச் சேர்ந்த ஜெயந்த், பெல்தங்கடியில் உள்ள சிறப்பு விசாரணைக் குழு அலுவலகத்தை அணுகி சம்பவம் குறித்த தகவல்களைத் தெரிவித்தார். புகாரை ஆய்வு செய்த புலனாய்வு அதிகாரிகள் அதிகாரிகள், தர்மஸ்தலா காவல்துறையில் முறையான புகார் பதிவு செய்யுமாறு அறிவுறுத்தினர். இந்த புகார் திங்கட்கிழமை பெறப்பட்டதாகவும், அடுத்தகட்ட நடவடிக்கை விரைவில் எடுக்கப்படும் எனத் தட்சிண கன்னடா காவல் கண்காணிப்பாளர் டாக்டர் அருண் தெரிவித்தார்.
நடவடிக்கை வேண்டும்
இது குறித்து ஜெயந்த் மேலும் கூறுகையில், "நான் சட்டத்தை மதிக்கிறேன். 15 ஆண்டுகளுக்கு முன்பு அந்தச் சிறுமியின் உடல் புதைக்கப்பட்டதை நேரில் பார்த்த ஐந்து பேர் விசாரணைக்குச் சாட்சியம் அளிக்கத் தயாராக உள்ளனர். எனது புகார் எந்த தனிநபர் அல்லது கோயிலுக்கு எதிரானது அல்ல. அப்போதைய காவல் அதிகாரிகள் தவறு செய்தார்கள் என்பதையும், அதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பது மட்டுமே நோக்கம்" என்றார்.
-
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை? -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
இரட்டை இலைக்கு ‘குட்பை’.. அதிமுகவை அடக்கிய பாஜக? திமுக கூட்டணிக்கு அடிக்கப்போகும் அதிர்ஷ்டம் -
ப்ளீஸ் சார்.. என் ஹனிமூனை விட்ருவீங்களா? கலெக்டருக்கு வித்தியாசமான மனு தந்த கேரளா அரசு பள்ளி ஆசிரியை -
சிறகடிக்க ஆசை: விஜயாவை அசிங்கப்படுத்திய வக்கீல்.. மீனா அருமை இப்போதாவது புரிந்ததே..! முத்து போட்ட அடி -
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 50% தாண்டினால் என்ன நடக்கும்? வீட்டு வாடகைப்படியிலும் மாற்றம்? -
திமுக சொன்ன அந்த வார்த்தை.. தொகுதி பங்கீட்டில் அதிருப்தியான மநீம.. நாளை கமல்ஹாசன் ஆலோசனை -
குடிப்பழக்கத்தை நிறுத்திவிட்டேன்.. பாட்டிலை தொட்டு 6 மாதமாகிவிட்டது.. ஜாலியாக சொன்ன சாஹல்! -
அதிமுக முன்னாள் அமைச்சர்களின் உருவபொம்மைகளுக்கு செருப்பு மாலை! பொள்ளாச்சியில் பரபரப்பு -
திரிஷா பற்றிய மொத்த பிரச்சனைகளுக்கும் ஒரே போஸ்டில் அவரே பதில்.. இப்படி ஒரு ரியாக்ஷனை எதிர்பார்க்கலையே












Click it and Unblock the Notifications