தர்மஸ்தலா வழக்கில் பெரிய சதி நடந்துள்ளது.. சொல்வது கர்நாடக துணை முதல்வர் டிகே சிவக்குமார்
பெங்களூர்: கர்நாடக மாநிலம் தர்மஸ்தலா பகுதியில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு பெண்கள் கொன்று புதைக்கப்பட்டடிருப்பதாக புகார் எழுந்திருக்கிறது. இந்த வழக்கை விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழுவை கர்நாடக அரசு அமைத்திருக்கிறது. இந்நிலையில், இந்த வழக்கில் மிகப்பெரிய சதி நடந்திருப்பதாக அம்மாநில துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் குற்றம்சாட்டியுள்ளார்.
தர்மஸ்தலா கோயிலின் முன்னாள் சுகாதார ஊழியர் ஒருவர், கோயில் நிர்வாகத்தின் உத்தரவின் பேரில் பல உடல்களை ரகசியமாக புதைத்ததாகக் கூறியிருந்தார். இது கர்நாடகா முழுவதும் சலசலப்புகளை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில், இந்த வழக்கின் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டிருக்கிறது.

இதற்கிடையில், முன்னாள் சுகாதார பணியாளரின் வாக்குமூலம் குறித்து கர்நாடக காங்கிரஸ் கமிட்டிக்குள் விமர்சனங்கள் எழுந்திருக்கின்றன. இந்த வழக்கே திட்டமிட்ட சதி என்று சிவக்குமார் விமர்சித்துள்ளார்.
"இதற்கு பின்னால் யார் இருக்கிறார்கள் என்று நான் சொல்ல மாட்டேன், ஆனால் கோயிலை களங்கப்படுத்த நன்கு திட்டமிடப்பட்ட உத்தி. நூற்றுக்கணக்கான ஆண்டுகள் பழமையான ஒரு பாரம்பரியத்தை கெடுக்க அவர்கள் வந்துள்ளனர்.
சுகாதார பணியாளர் நீதிமன்றத்தில் வாக்குமூலம் அளித்துள்ளார். காங்கிரஸ் சட்டமன்றத்தில் இதை விவாதித்தது. தவறாக வழிநடத்துபவர்கள் மற்றும் அவதூறு பரப்புபவர்களை நாங்கள் ஆராய்ந்து சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். முதல்வர் கூட பாரபட்சமற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார். உள்துறை அமைச்சரும் இந்த முழு வழக்கின் விவரங்கள் தனக்குத் தெரியும் என்று கூறியுள்ளார். அங்கு என்ன இருக்கிறது என்பது எங்களுக்குத் தெரியும். அது ஒரு வெற்றுப் பெட்டி" என்று கூறியிருக்கிறார்.
தினேஷ் குண்டு ராவ் இது குறித்து கூறுகையில், "முன்னாள் சுகாதார ஊழியரின் நோக்கங்கள் விசாரிக்கப்பட வேண்டும். இதை பூதாகரமான விஷயம் போல அவர் ஊதி பெரியதாக மாற்றினார். இது குறித்த உண்மையை விசாரிக்க வேண்டும்" என்று கூறியுள்ளார்.
-
கர்நாடகா முதல்வர் பதவியில் இருந்து விடைபெற்ற சித்தராமையா.. ராஜினாமா செய்த பின் உருக்கமான பதிவு -
அவ்வளவு தூரம் சொன்ன டெல்லி மேலிடம்.. "முடியவே முடியாது.." திட்டவட்டமாக மறுத்த சித்தராமையா.. ட்விஸ்ட் -
பிரியங்காவால் கர்நாடகா முதல்வர் பதவியை இழக்கும் சித்தராமையா.. டிகே சிவக்குமார் வென்றது இப்படித்தான் -
"முதல்வர் பதவி ராஜினாமா".. அறிவித்ததுமே சித்தராமையா காலில் விழுந்து ஆசி வாங்கிய டிகே சிவக்குமார் -
கடைசி நேரத்தில் ஆளுநர் மிஸ்ஸிங்.. ராஜினாமா கடிதத்தோடு சித்தராமையா வெயிட்டிங்! கர்நாடகாவில் ட்விஸ்ட் -
கர்நாடகா முதல்வர் பதவியிலிருந்து சித்தராமையா ராஜினாமா? டி.கே.சிவகுமார் புதிய முதல்வராகிறார்! -
மே 28ல் முதல்வர் பதவியில் இருந்து விலகும் சித்தராமையா? காங்கிரஸ் தலைமை ஆபரையும் நிராகரித்தார்! -
ராஜினாமா பண்ணிட்டா.. ஆட்டம் முடிஞ்சதுன்னு அர்த்தம் கிடையாது! எம்பி பதவியை உதறிய சித்தராமையா -
கர்நாடகா புது முதல்வர் யார்? டிகே சிவக்குமார் பெயரை சொல்ல மறுத்த சித்தராமையா! அழிக்கப்பட்ட மெசேஜ் -
டி.கே.சிவகுமாருக்கு செக்! கடைசி நேரத்தில் சாதி வாரிக் கணக்கெடுப்பு அறிக்கையை பெற்ற சித்தராமையா! -
பெங்களூரில் புகுந்த உயிரை பறிக்கும் எபோலா? உகாண்டாவில் இருந்த பெண் மருத்துவமனையில் அனுமதி.. திக்திக் -
மேகதாது அணை விவகாரம்: தேசிய பசுமை தீர்ப்பாயத்தை நாடிய தமிழக அரசு! அடுத்த கட்ட 'மூவ்’ என்ன?












Click it and Unblock the Notifications