இந்தியர்களின் மனசாட்சியை உலுக்கிய தீபாவளி ரயில் கூட்டம்.. இந்த குழந்தைக்கு ரயில்வேயின் பதில் என்ன

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: ஒவ்வொரு இந்தியர்களின் மனசாட்சியை உலுக்கி உள்ளது தீபாவளி சிறப்பு ரயில் கூட்ட நெரிசல் வீடியோ. ஒரு பச்சிளம் குழந்தை கடும் கூட்ட நெரிசலுக்கு மத்தியில் பரிதவித்தபடி ரயிலில் ஏற்றப்படுகிறது. அந்த குழந்தையின் தந்தை குழந்தையை வாங்கிக்கொண்டு எப்படியாவது ரயிலில் ஏறிவிட வேண்டும் என்று ஆதங்கப்படுவதாக வீடியோ இருக்கிறது. அந்த வீடியோ தான் ஒவ்வொரு பண்டிகையின் போதும் வட மாநில மற்றும் தென்மாநில மக்கள் ரயில் பயணத்தில் அனுபவிக்கிறார்கள். இதற்கு ரயில்வே என்ன பதில் சொல்லப்போகிறது என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி உள்ளார்.

ஒரு நெட்டிசனின் பதிவினை அப்படியே பார்ப்போம்.. "சுதந்திர இந்தியாவின் 79 ஆண்டுகாலப் பயணத்தில், சாமானிய மக்களின் ரயில் பயணம் எந்த நிலையில் இருக்கிறது என்பதற்கு இதுவே சோகமான எடுத்துக்காட்டு!

Diwali Special Train Chaos Shocks India What Is Railways Answer to the Plight of a Baby

வந்தே பாரத் ரயிலில் கழிப்பறைகள் நன்றாக இருக்கின்றன, புல்லட் ரயில் வரப்போகிறது என்று பெருமை பேசுவதிலேயே எல்லாப் பெருமையும் முடிந்துவிடுகிறது. ஆனால் சாமானிய மக்கள் பயணிக்கும் பொதுப் பெட்டிகளின் நிலை இதுதான்!

ரயில்வே அமைச்சர் அவர்களே, தயவுசெய்து இந்தக் காட்சிகளை ஒருமுறை பாருங்கள்.

இவர்கள் ஆண்டு முழுவதும் நகரங்களில் கடுமையாக உழைத்துவிட்டு, பண்டிகையைக் கொண்டாடுவதற்காகத் தங்களது சொந்த ஊர்களுக்குப் புறப்பட்டுச் செல்லும் புலம்பெயர் தொழிலாளர்கள். கையில் பயணச்சீட்டு வைத்திருக்கிறார்கள். ஆனால் ரயில் பெட்டிக்குள் கால் வைக்கக்கூட இடமில்லை. கதவுகளில் ஒருவரையொருவர் தள்ளிக்கொண்டு முண்டியடிக்கிறார்கள். ஜன்னல்கள் வழியாகவும் உள்ளே நுழைய முயற்சிக்கிறார்கள்.

கூட்டத்தின் தலைக்கு மேலாக ஒரு பச்சிளம் குழந்தையைத் தூக்கி ரயில் பெட்டிக்குள் அனுப்பும் காட்சியைப் பார்ப்பது நெஞ்சைப் பதற வைக்கிறது!

அவர்களும் இந்தியர்கள்தானே? அவர்களும் மனிதர்கள்தானே? அவர்களுக்கு மட்டும் ஏன் இந்த அவலநிலை?

இது போபால் சந்திப்பு ரயில் நிலையத்தில் தீபாவளிப் பண்டிகையின்போது ஏற்பட்ட பயண நெரிசல்.

பண்டிகைக் காலங்களில் எவ்வளவு பெரிய கூட்டம் வரும் என்பது ரயில்வே நிர்வாகத்துக்கு முன்கூட்டியே தெரிந்த விஷயம்தானே? அப்படியிருக்க, ஏன் முன்கூட்டியே கூடுதல் ரயில்கள், கூடுதல் பொதுப் பெட்டிகள் மற்றும் நடைமேடைகளில் கூடுதல் பணியாளர்களை ஏற்பாடு செய்ய முடியவில்லை?

குளிர்சாதன வசதி கொண்ட பெட்டிகள் ஒரு சிலருக்கானவை. பொதுப் பெட்டிகளோ கோடிக்கணக்கான மக்களுக்கானவை.

வளர்ச்சி என்பது ஒரு சில அதிவேக ரயில்களை இயக்குவதில் மட்டும் இல்லை. சாமானிய மக்களும் கண்ணியத்துடனும் பாதுகாப்புடனும் தங்களது சொந்த ஊர்களுக்குச் சென்று சேர்வதில்தான் உண்மையான வளர்ச்சி இருக்கிறது!

சுதந்திர இந்தியாவின் 79 ஆண்டுகளுக்குப் பிறகும் சாமானிய மக்களின் ரயில் பயணம் இத்தகைய சோகமான நிலையில்தான் இருக்கிறதா?" இவ்வாறு கேட்டுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+