மாற்றுத்திறனாளுக்கு ’ஸ்பெஷல்’ சலுகை கிடையாது! அதிரடியாக கோர்ட்டில் சொன்ன டிஎன்பிஎஸ்சி!

Subscribe to Oneindia Tamil

சென்னை: பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் சொந்தமாக எழுத்தரை அழைத்து வந்து தேர்வு எழுத அனுமதிக்க முடியாது எனவும், இது விண்ணப்பதாரர்களிடம் ஏற்றத்தாழ்வை உருவாக்கும் என சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் டிஎன்பிஎஸ்சி கூறியுள்ளது.

தமிழகத்தில் அரசு பணிகளுக்கு ஆட்கள் சேர்க்கும் வகையில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் எனப்படும் டிஎன்பிஎஸ்சி செயல்பட்டு வருகிறது. ஏஓ முதல் ஆர்டிஓ வரை குரூப் 1 முதல் குரூப் 8 வரை பல்வேறு தேர்வுகளை நடத்தி பணியாளர்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.

TNPSC

அந்த வகையில் கிராம நிர்வாக அலுவலர், பில் கலெக்டர், ஆவின் நிர்வாக உதவியாளர் , இளநிலை நிர்வாகி, வனக் காவலாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர், நேர்முக உதவியாளர் உள்ளிட்ட பல்வேறு பதவிகள் காலியாக உள்ளது. இந்த காலிப் பணியிடங்கள் குரூப் 4 தேர்வு மூலம் நிரப்பப்படுகிறது.

துணை வணிகவரி அலுவலர், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர், நன்னடத்தை அலுவலர், சார்பதிவாளர் நிலை-2, தனிப்பிரிவு உதவியாளர், உதவிப்பிரிவு அலுவலர், வனவர் ஆகிய பதவிகளுக்கு குரூப் 2 மூலமும், உதவியாளர், தணிக்கை ஆய்வாளர், முழுநேர விடுதி காப்பாளர், முதுநிலை ஆய்வாளர், நேர்முக எழுத்தர், கணக்கர் உள்ளிட்ட பல்வேறு பதவிகள் குரூப் 2 ஏ மூலமும் நிரப்பப்படுகிறது.

அந்த வகையில், இந்திய ஆட்சிப் பணிக்கு அடுத்ததாக குரூப்-1 பதவிகள் கருதப்படுகிறது. அதில், துணை கலெக்டர், உதவி வணிகவரி ஆணையர், உதவி இயக்குனர், துணை சரக பதிவாளர், மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு பணித் துறை அலுவலர், மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலர் உள்ளிட்ட பணியிடங்கள் குரூப் 1 மூலம் நிரப்பப்படுகிறது.

இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த டிஎன்பிஎஸ்சி தேர்வுகள் மிகுந்த கட்டுப்பாட்டோடு கடும் விதிமுறைகளுடன் நடத்தப்படுகிறது. அதே நேரத்தில் ஊனமுற்றோர் பார்வை மாற்றுத் திறனாளிகளுக்காக எழுத்தர்களை நியமனம் செய்து தருகிறது டிஎன்பிஎஸ்சி. இந்த நிலையில் மதுரையைச் சேர்ந்த வேல்முருகன் என்பவர் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.

அதில் டிஎன்பிஎஸ்சி தேர்வுகளில் உதவ தகுதியான விருப்பமான உதவியாளர்களை தேர்வு செய்ய அனுமதிக்க வேண்டும் எனவும், கணித பலகை, பிரெய்லி கடிகாரம், எழுத்துக்களை பெரிதாக்கிப் பார்க்க லென்ஸ் ஆகியவற்றை பார்வை திறனாளிகள் பயன்படுத்த அனுமதிக்க வேண்டும் என கூறியிருந்தார்.

இந்த மனு நீதியரசர்கள் வேல்முருகன், ராமகிருஷ்ணன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது டிஎன்பிஎஸ்சி சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில்," மாற்றுத் திறனாளிகள் உரிமைகள் சட்டப்படி வரையறுக்கப்பட்டவாறு தேர்வு எழுதும் போது எழுத்தாளர் ஒதுக்கப்படுகிறார். அதே நேரத்தில் தேர்வு எழுதுவோர் சொந்தமாக எழுத்தாளரை அழைத்து வர அனுமதிப்பது சாத்தியம் கிடையாது. தங்களுக்கு விருப்பமான எழுத்தாளர்களை அழைத்து வர அனுமதித்தால் மற்ற விண்ணப்பதாரர்களிடைய ஏற்றத்தாழ்வை உருவாக்கும்" என தெரிவித்தனர்.

இதை அடுத்து அரசின் நிலை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதிகள் விசாரணையை ஒத்தி வைத்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+