Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நம்பர் 1 பணக்கார எம்எல்ஏ டிகே சிவக்குமாரை விடுங்க! அவரது தம்பி டிகே சுரேஷ் சொத்து மதிப்பு தெரியுமா?

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: இந்தியாவிலேயே கோடீஸ்வர எம்எல்ஏக்கள் பட்டியலில் முதலிடத்தில் கர்நாடகா துணை முதல்வரான டிகே சிவக்குமார் தான் முதலிடத்தில் உள்ளார். இந்நிலையில் தான் அவரது தம்பியும், காங்கிரஸ் எம்பியுமான டிகே சுரேஷ் மீண்டும் பெங்களூர் புறநகர் தொகுதியில் போட்டியிடும் நிலையில் அவரது சொத்து மதிப்பு அனைவருக்கும் ஆச்சரித்தை ஏற்படுத்தி உள்ளது.

இந்தியாவை பொறுத்தமட்டில் பாஜகவில் அரசியல் சாணக்கியர் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அழைக்கப்படுகிறார். ஆனால் அமித்ஷாவின் வியூகங்களுக்கே விபூதி அடித்து பல சந்தர்ப்பங்களில் காங்கிரஸ் எம்எல்ஏக்களை பாதுகாத்து பெயர் பெற்றவர் தான் காங்கிரஸ் கட்சியின் டிகே சிவக்குமார்.

DK Sivakumar brother DK Suresh total assert is 593 crore its increased 75 percentage in last 5 years


கர்நாடகா காங்கிரஸ் தலைவரான டிகே சிவக்குமார், அம்மாநில துணை முதல்வராகவும் உள்ளார். இவர் கர்நாடகாவின் ராமநகர் மாவட்டம் கனகபுரா எம்எல்ஏவாக இருக்கிறார். மேலும் டிகே சிவக்குமார் தான் இந்தியாவிலேயே நம்பர் 1 பணக்கார எம்எல்ஏவாக உள்ளார். இவரது சொத்து மதிப்பு ரூ.1,413 கோடியாகும்.

சரி இது இருக்கட்டும். இனி டிகே சிவக்குமாரின் தம்பி டிகே சுரேஷ் பற்றி பார்ப்போம். டிகே சுரேஷ் பெங்களூர் புறநகர் தொகுதி காங்கிரஸ் எம்பியாக உள்ளார். 2013 இடைத்தேர்தல், 2014, 2019 ஆகிய ஆண்டுகளில் நடந்த தேர்தல்களில் பெங்களூர் புறநகர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் தான் டிகே சுரேஷ். குறிப்பாக கடந்த 2019ல் கர்நாடகாவில் உள்ள 28 லோக்சபா தேர்தலில்களில் 27 இடங்களில் காங்கிரஸ் தோற்ற நிலையில் டிகே சுரேஷ் மட்டும் பெங்களூர் புறநகர் தொகுதியில் 2 லட்சம் ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அசத்தினார்.

எடியூரப்பா மகனை வெல்வாரா? பாஜக கோட்டையில் காங் வேட்பாளரான நடிகர் சிவராஜ் குமாரின் மனைவி! களநிலவரம்


வரும் லோக்சபா தேர்தலிலும் டிகே சுரேஷ் பெங்களூர் புறநகர் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக களமிறங்கி உள்ளார். அவர் தேர்தலுக்கான வேட்புமனுவை தாக்கல் செய்துள்ளார். அதில் அவர் இணைத்துள்ள பிரமாண பத்திரத்தில் சொத்து விபரங்களை குறிப்பிட்டுள்ளார்.

அடேங்கப்பா.. இத்தனை வாரிசுகளா? கர்நாடகாவில் காங்கிரஸ் செய்ததை பாருங்க.. பாஜகவுக்கு தீனி போட்ட ‛கை’


அதன்படி டிகே சுரேஷிடம் ரூ.486 கோடிக்கு அசையா சொத்து உள்ளது. ரூ.106 கோடிக்கு அசையும் சொத்து உள்ளது. மொத்தமாக ரூ.592 கோடி சொத்து டிகே சுரேஷ் பெயரில் உள்ளது. குறிப்பாக டிகே சுரேஷ் பெயரில் 72 ஏக்கர் விவசாய நிலம், பெங்களூர் மற்றும் ராமநகர் மாவட்டம் கனகபுரா பகுதியில் விவசாயம் அல்லாத நிலம் மட்டும் ரூ.210.47 கோடிக்கு உள்ளது. மேலும் பெங்களூரில் 2 மால்கள், வணிக கட்டடங்கள் ரூ.211.91 கோடிக்கு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

டிகே சுரேஷின் சொத்து மதிப்பு என்பது கடந்த 2019ம் ஆண்டை ஒப்பிடும்போது 75 சதவீதம் வரை உயர்ந்துள்ளது. அதாவது கடந்த 2019ல் டிகே சுரேஷின் மொத்த சொத்து மதிப்பு ரூ.338.87 கோடியாக இருந்த நிலையில் தற்போது ரூ.592 கோடியாக அதிகரித்துள்ளது. அதாவது கடந்த 5 ஆண்டில் மட்டும் ரூ.254.17 கோடி அதிகரித்துள்ளது. அதாவது ஆண்டுக்கு சுமார் ரூ.51 கோடி வரை அவரது சொத்து மதிப்பு என்பது அதிகரித்துள்ளது. மேலும் கடந்த 2019ல் டிகே சுரேசுக்கு ரூ.51.93 கோடிக்கு கடன் இருந்த நிலையில் தற்போது அது ரூ.150.05 கோடியாக அதிகரித்துள்ளது.

டிகே சிவக்குமார் தம்பிக்கே செக்! பெங்களூர் புறநகரில் பாஜக வேட்பாளரான தேவேகவுடாவின் மருமகன்.. பின்னணி


பெங்களூர் புறநகர் தொகுதி என்பது டிகே சுரேஷின் கோட்டையாக உள்ளது. இந்நிலையில் தான் வரும் தேர்தலில் அவரை தோற்கடிக்க வேண்டும் என்ற முனைப்பில் பாஜக + ஜேடிஎஸ் கூட்டணி சார்பில் டாக்டர் மஞ்சுநாத் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இவர் முன்னாள் பிரதமரும், ஜேடிஎஸ் கட்சியின் தேசிய தலைவருமான தேவேகவுடாவின் (முன்னாள் முதல்வர் குமாரசாமியின் தந்தை) மருமகன் ஆவார். மஞ்சுநாத் பெங்களூர் லோக்சபா தேர்தலில் பாஜக வேட்பாளராக தாமரை சின்னத்தில் பெங்களூர் புறநகர் தொகுதியில் டிகே சுரேசை எதிர்க்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+