Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சித்தராமையுடன் மனக்கசப்பு போகலயோ?.. பதவியேற்பு விழாவில் டிகே சிவக்குமார் பண்ணதை கவனிச்சீங்களா?

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: கர்நாடகாவில் இன்று புதிய அரசு பதவியேற்கும் விழா நடைபெற்றது. இதில் முதல்வராக சித்தராமையாவும் துணை முதல்வராக டிகே சிவக்குமாரும் பதவியேற்றுக்கொண்டனர். பதவியேற்கும் முன்பாக டிகே சிவக்குமார் மேடையில் இருந்த தலைவர்களிடம் வாழ்த்து பெற்றார். ஆனால், அவர் சித்தராமையாவை கண்டு கொள்ளாமல் சென்றது கவனம் பெற்றுள்ளது.

கர்நாடக மாநிலத்தில் பாஜக ஆட்சி நடைபெற்று வந்தது. முதல்வராக பசவராஜ் பொம்மை பதவி வகித்து வந்தார். இந்த ஆட்சியின் பதவி காலம் வருகிற 24-ந் தேதியுடன் நிறைவடைய இருந்தது. இதையடுத்து கர்நாடக சட்டசபைக்கு கடந்த 10-ந் தேதி தேர்தல் நடைபெற்றது. இதில் பதிவான வாக்குகள் 13 ஆம் தேதி எண்ணப்பட்டன.

DK Sivakumar did not get greet from Siddaramaiah, when he was sworn in as Deputy Chief Minister

இதில் காங்கிரஸ் கட்சி 135 இடங்களில் வென்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தது. இதையடுத்து முதல்வர் பதவி யாருக்கு என்பதில் சித்தராமையா மற்றும் டிகே சிவக்குமார் இடையே கடும் போட்டி ஏற்பட்டது. இதையடுத்து இருவரையும் அழைத்து காங்கிரஸ் மேலிடம் பேச்சுவார்த்தை நடத்தியது. காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் 80 க்கும் மேற்பட்டோர் சித்தராமையாவிற்கு ஆதரவாக இருந்தனர்.

இதனால், சித்தராமையாவை முதல்வராக்க கட்சி மேலிடம் முடிவு செய்தது. ஆனால், டிகே சிவக்குமார் இதை ஏற்க மறுத்ததாக தகவல் வெளியானது. இதையடுத்து இருவரையும் டெல்லிக்கு அழைத்து கட்சி மேலிடம் பேச்சுவார்த்தை நடத்தியது. பல கட்ட பேச்சுவார்த்தை முடிந்தும் இதில் உடன்பாடு ஏற்படாமல் இழுபறி நீடித்தது.

இதனால் முதல்வர் விவகாரத்தில் இறுதி முடிவு எடுக்க முடியாமல் காங்கிரஸ் மேலிடம் திணறியது. காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவா்கள் எடுத்து கூறியும் டி.கே.சிவக்குமார் தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ளவில்லை. இதனால் தொடர்ந்து கர்நாடக அரசியலில் பரபரப்பு நிலவிய நிலையில், இறுதியில் இந்த விவகாரத்தில் சோனியா காந்தி தலையிட்டார்.

டிகே சிவக்குமாரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு , கட்சியின் எதிர்கால நலன் கருதி சித்தராமையவை முதல்வராக ஏற்றுக்கொள்ளுமாறு அறிவுறுத்தினார். அதன்பிறகே டிகே சிவக்குமார் இறங்கி வந்தார். இதையடுத்து கர்நாடக முதல்வராக சித்தராமையாவையும் துணை முதல்வராக டிகே சிவக்குமாரையும் காங்கிரஸ் மேலிடம் அறிவித்தது. இதையடுத்து ஆளுநரை சந்தித்து ஆட்சி அமைக்க சித்தராமையா உரிமை கோரினார்.

DK Sivakumar did not get greet from Siddaramaiah, when he was sworn in as Deputy Chief Minister

இதை ஏற்று ஆளுநர் சித்தராமையாவிற்கு ஆட்சி அமைக்க அழைப்பு விடுத்தார். இதன்படி இன்று முதல்வராக சித்தராமையா பதவியேற்கும் விழா நடைபெற்றது. பெங்களூரில் உள்ள கன்டீரவா ஸ்டேடியத்தில் இந்த விழா நடைபெற்றது. சித்தராமையா முதல்வராகவும், டிகே சிவக்குமார் துணை முதல்வராக பதவி பிரமாணம் எடுத்து கொண்டனர். மேலும் இவர்களுடன் சேர்ந்து 8 பேர் அமைச்சர்களாக பொறுப்பேற்றனர்.

இவர்கள் அனைவருக்கும் ஆளுநர் தாவர்சந்த் கெலாட் பதவி பிரமாணம் செய்து வைத்தார். பதவியேற்பு விழாவில் ராகுல் காந்தி, மல்லிகார்ஜூன கார்கே, பீகார் முதல்வர் நிதிஷ்குமார், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர். சித்தராமையாவும் டிகே சிவக்குமாரும் பதவியேற்கும் போது அங்கு திரண்டு இருந்த தொண்டர்கள் ஆர்ப்பரித்தனர்.

இதனால் மைதானம் ஒரு நிமிடம் அதிர்ந்தது. முதலில் சித்தராமையா பதவியேற்ற பிறகு டிகே சிவக்குமார் பதவியேற்க சென்றார். டிகே சிவக்குமார் பதவிப்பிரமாணம் எடுத்துக்கொள்ள அங்கு வைக்கப்பட்டு இருந்த போடியத்திற்கு செல்லும் போது சித்தராமையாவை கடந்துதான் சென்றார். ஆனால், அங்கு இருந்த தொண்டர்களை பார்த்தபடி சென்றாரே தவிர சித்தராமையா முகத்தை பார்க்கவில்லை.

அதுமட்டும் இன்றி பதவியேற்பதற்கு முன்பாக மேடையில் அமர்ந்து இருந்த பிற மாநில முதல்வர்கள் மற்றும் அரசியல் கட்சி தலைவர்களுக்கு வணக்கம் செலுத்தி வாழ்த்து பெற்றார். ஆனால், சித்தராமையை கண்டு கொள்ளாமல் சென்று விட்டார். இது அங்கிருந்த தொண்டர்கள் மத்தியிலும் கவனிக்கப்பட்டது.

கர்நாடக முதல்வராக பதவியேற்கும் விவகாரத்தில் இருவருக்கும் இடையே கடுமையான போட்டி நிலவியது. கட்சி மேலிடம் தலையிட்டதால் இதில் டிகே சிவக்குமார் இறங்கி வந்தார். எனினும், சித்தராமையாவை முழு மனதுடன் அவர் ஏற்கவில்லை என்பதை அப்பட்டமாக காட்டும் விதமாக டிகே சிவக்குமார் செயல்பாடுகள் தெரிவதாக அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+